இதயக்கனி, மைக்கேல் மதன காம ராஜன், லவ் டுடே – ஞாயிறு பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜன.,15) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…சன் டிவிகாலை 11:00 – நம்ம வீட்டுப் பிள்ளைமதியம் 02:30 – எதற்கும் துணிந்தவன் (2022)மாலை … Read more

Tamil Pongal Song: பொங்கலுக்கு மறக்கவே முடியாத தமிழ் பாடல்கள்…

Tamil Pongal Song: பொங்கல் பண்டிகை தமிழர்களுக்கு மிக முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்று. போகி, தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அதாவது, மார்கழியின் கடைசி நாளும், பொங்கல் கொண்டாட்டத்தின் முதல் நாளுமான போகி பண்டிகை அன்று பழைய பொருள்களை விடுத்து புதியவற்றை வீடுகளில் வாங்குவார்கள்.  தொடர்ந்து, இன்று கொண்டாடப்படும் தைப்பொங்கல் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், மாட்டு பொங்கல் உழவுக்கு உதவுக்கு மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் கொண்டாடப்படுகிறது. … Read more

இந்த பொங்கல் ஸ்பெஷலானது…..காஜல் அகர்வால் ஆனந்தம்!

இந்த பொங்கல் பண்டிகை எனக்கு விசேஷமானது என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தாயாகி இருக்கிறார். பொங்கல் பண்டிகை மகிழ்ச்சி அனுபவங்களை காஜல் அகர்வால் பேட்டி ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார். அதில், பொங்கல் பண்டிகை அன்று செய்யும் விதவிதமான உணவு வகைகளை ருசித்துப்பார்ப்பதில் எனக்கு மிகவும் விருப்பம். பொங்கல் விழாவை எங்கள் பஞ்சாபிகள் … Read more

புது கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ்!….

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்தாண்டு வெளியான ‘சாணிக் காயிதம்’ திரைப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. அதே போல் தெலுங்கில் ‘சர்காரு வாரி பாட்டா’, மலையாளத்தில் ‘வாஷி’ உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.   இதையடுத்து தெலுங்கில் நானியுடன் ‘தசரா’ படத்திலும், தமிழில் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதியுடனும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இரண்டு … Read more

‛ரிவால்வர் ரீட்டா'-வாக மாறிய கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழில் உதயநிதி உடன் மாமன்னன், தெலுங்கில் நானி உடன் தசரா படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் இந்தாண்டு அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இதையடுத்து சந்துரு இயக்கத்தில் ஒரு படத்தில் தமிழில் நடித்து வருகிறார் கீர்த்தி. இந்த படத்திற்கு ரிவால்வர் ரீட்டா என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதனை நடிகை சமந்தா வெளியிட்டார். போஸ்டரில் கையில் இரண்டு துப்பாக்கி உடன் போஸ் … Read more

பார்சியில் போலீஸ் உயர் அதிகாரியாக விஜய்பேதுபதி

விஜய்சேதுபதி படிக்கும் முதல் வெப் தொடர் பார்சி. இதனை பேமிலி மேன் தொடரை இயக்கிய ராஜ், டீகே இரட்டையர்கள் இயக்கி உள்ளனர். விஜய்சேதுபதியுடன் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ளார். இவர்கள் தவிர ராஷி கண்ணா, கேகே மேனன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த தொடரில விஜய்சேதுபதி துணிச்சலும், நேர்மையும் மிக்க உயர்போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கள்ளநோட்டு அச்சடிக்கும் ஷாகித் கபூர் தலைமையிலான கும்பலை எப்படி பிடிக்கிறார் … Read more

குஷ்பு காட்சிகள் நீக்கம் ஏன்? எடிட்டர் விளக்கம்

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் சமீபத்தில் வெளியானது, இதில் அவருடன் ஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் குஷ்பு நடித்திருந்தபோதும் அவர் நடித்த காட்சிகள் எதுவும் படத்தில் இடம்பெறவில்லை. … Read more

‛52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' – பார்த்திபனின் அடுத்த படம்

தமிழில் வித்தியாசமான படங்களை இயக்குபவர் பார்த்திபன். கடந்தாண்டு இவர் இயக்கிய முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான ‛இரவின் நிழல்' வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அடுத்து ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்த பட தலைப்பை கண்டுபிடித்தால் புடவை பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் '52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என தனது புதிய படத்திற்கு தலைப்பு வைத்துள்ளார். பார்த்திபன் வெளியிட்ட பதிவு : ‛‛இன்பம் பொங்கட்டும்! உங்களின் நல்லாசியுடன் இவ்வாண்டின் முதல் … Read more

தமிழிலும் வருகிறது, 'நண்பகல் நேரத்து மயக்கம்'

மலையாள நடிகர் மம்முட்டியின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி மற்றும் ஆமென் மூவி மோனாஸ்ட்ரி இணைந்து தயாரிக்கும் படம் 'நண்பகல் நேரத்து மயக்கம்'. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் இந்தப் படத்தில் மம்முட்டி, ரம்யா பாண்டியன், அசோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படம் வரும் வாரம் ஜனவரி 19ம் தேதி மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு படக்குழுவினர் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து தமிழிலும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரை … Read more

ஆரவ்விற்கு ஜோடியாகும் ரம்யா பாண்டியன்

ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து கவர்ச்சிகரமான போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சோசியல் மீடியாவை கலக்கி வரும் ரம்யா பாண்டியன், தற்போது தேன் என்ற படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் உதயநிதி நடித்த கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்த ஆரவ் நாயகனாக … Read more