அட விருமாண்டி அபிராமி மகளா இவங்க?.. ஆனா ஒரு ட்விஸ்ட்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: அபிராமி விருமாண்டி படத்தின் மூலம் பிரபலமானவர். அந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அவர் அதற்கு பிறகு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென திருமணம் செய்துகொண்டு வெளிநாடு சென்று செட்டிலாகிவிட்டார். அது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது . சூழல் இப்படி இருக்க 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை

சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் கடந்த மாதம் 22ம் தேதி வெளியான படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இப்படத்திற்கு உலகம் முழுவதிலும் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்து வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. அமெரிக்காவில் முதன் முதலில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த மலையாளப் படம் என்ற சாதனையைப் புரிந்தது. அதன்பின் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை கடந்தய முதல் மலையாளப் படம் என்ற … Read more

கமல் நோ சொன்ன படத்தில் நடித்த சரத்குமார்..ச்ச உலக நாயகன் நடிச்சிருந்தா இன்னும் செமயா இருந்திருக்குமே

சென்னை: சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக இந்திய சினிமாவில் சிறந்த நடிகர் என கொண்டாடப்படுபவர்களில் முதன்மையானவர் கமல் ஹாசன். அவர் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். இந்தியன் 2 திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதுவரை 233 படங்களில் நடித்திருக்கும் அவர் ஒரு படத்துக்கு நோ சொன்னதும்; அந்தப் படத்தில் சரத்குமார் நடித்ததும் தெரியவந்திருக்கிறது. இதனை இயக்குநர் கௌதம் மேனன்

ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர்

அறிமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள படம் ‛கா'. இதில் ஆண்ட்ரியா வன உயிர் புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆண்ட்ரியா பேசியதாவது: படத்தின் இயக்குனர் நாஞ்சிலுக்கு எனது பாராட்டுக்கள். உயிரை கொடுத்து எடுத்திருக்கிறார். இத்திரைப்படம் குழந்தை மாதிரி. தயாரிப்பாளர் என்ற அப்பாவும், இயக்குநர் என்ற அம்மாவும் ஒத்துழைக்காமல் இருந்திருந்தால் இந்தக் குழந்தையை வளர்த்திருக்க முடியாது. சில இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு சில நடிகைகளை முதலில் தேர்வு செய்வார்கள். பிறகு … Read more

ஜப்பான் படத்தின் தோல்விக்கு ஹீரோ கார்த்திதான் காரணமா?.. பவா செல்லதுரை பேச்சால் கிளம்பிய பஞ்சாயத்து

சென்னை: சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவர். முதல் படத்தின் மூலமே தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அவர் கடைசியாக ஜப்பான் படத்தில் நடித்திருந்தார். கார்த்தியின் 25ஆவது படமாக உருவாகியிருந்த அந்தப் படத்தை ராஜுமுருகன் இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்தச் சூழலில் எழுத்தாளர் பவா

Inspector Rishi: தமிழில் வெளியாகவுள்ள அட்டகாசமான க்ரைம் வெப் சீரிஸ்!

Inspector Rishi: இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடர் மார்ச் 29 முதல் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது.  

பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி!

இயக்குனர் சுந்தர்.சி கடந்த பல வருடங்களாக தமிழில் உள்ளத்தை அள்ளித்தா,அருணாச்சலம், வின்னர், அரண்மனை 1,2 ,3 என குடும்பங்கள் கொண்டாடும் படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். தற்போது 'அரண்மனை 4' படத்தை இயக்கியுள்ளார். விரைவில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் இப்படத்திற்கு பிறகு ஹிந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் சுந்தர்.சி. அந்த தகவலின் படி, சுந்தர்.சியை அழைத்து ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் கதை ஒன்று கேட்டுள்ளார். அவருக்கு கதை பிடித்து போனதால் சுந்தர்.சியை திரைக்கதை உருவாக்குமாறு கூறியுள்ளாராம். மேலும், … Read more

லியோவை கொன்னது யாரு?.. காமெடியா, கலர்ஃபுல்லா ஒரு கிரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் பார்க்கணுமா?

சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சாரா அலி கான், விஜய் வர்மா, பங்கஜ் திரிபாதி, கரிஷ்மா கபூர், டிம்பிள் கபாடியா என ஏகப்பட்ட பாலிவுட் நடிகர்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் பக்காவான காமெடி மற்றும் கலர்ஃபுல்லான கிரைம் த்ரில்லர் தான் மர்டர் முபாரக். நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாகி உள்ள இந்த 2.30 மணி நேரம் படம்

‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் – ஷாலினி தம்பதி

நடிகர் அஜித்தின் 25வது படமான ‛அமர்களம்' படத்தில் நாயகியாக நடித்தார் ஷாலினி. படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின்னர், ஷாலினி சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். ஷாலினிக்கு கடந்த 2008ம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‛அனோஷ்கா' என பெயரிட்டனர். இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து அஜித் – ஷாலினி ஜோடிக்கு ‛ஆத்விக்' என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தற்போது அஜித்- … Read more

ஹீரோவான லோகேஷ் கனகராஜ்.. கமல் ஹாசன் வெளியிட்ட சூப்பர் அப்டேட்.. இது லிஸ்ட்லயே இல்லையே

சென்னை: கோலிவுட்டின் டாப் இயக்குநர்களில் ஒருவராக இப்போது வலம் வந்துகொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் அவர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் கிரேஸ் குறையவில்லை. அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். சூழல் இப்படி இருக்க அவர் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார்.