புதிய நிறத்துடன் ஹூண்டாய் ஐயோனிக் 5 அறிமுகமானது

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரில் கூடுதலாக புதிய டைட்டன் கிரே நிறத்துடன் இன்டிரியரில் பிளாக் நிறத்தை ஆப்ஷனலாக பெற்றதாக வந்துள்ளது. தற்பொழுது D2C முறையில் ஆன்லைனில் புக்கிங் துவங்கப்பட்டு கட்டணமாக ரூ.1,00,000 லட்சம் ஆக வசூலிக்கப்படுகின்றது. Hyundai Ioniq 5 முந்தைய காரில் எந்தவொரு டிசைன் மாற்றங்களும் இல்லை, புதிய நிறம் மட்டும் சேர்க்கப்பட்டு பவர்டிரெயின் ஆப்ஷனை கொண்டுள்ளது. Ioniq 5 மாடலில் 215 bhp மற்றும் 350 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற … Read more

“ஜோதிமணிக்கு தோல்வி பயம்; அதனால்தான் கண்ணீர் வடிக்கிறார்..!" – சொல்கிறார் காயத்ரி ரகுராம்

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் எல்.தங்கவேல் போட்டியிடுகிறார். இந்நில்லையில், கரூர் பசுபதிபாளையம், ராயனூர் உள்ளிட்டப் பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எல்.தங்கவேலுவை ஆதரித்து, அ.தி.மு.க கழகப் பேச்சாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சியும், தி.மு.க-வும் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் எம்.பி-யாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி கரூர் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் எதுவும் பேசவில்லை. தற்பொழுது … Read more

 கடும்பத்துடன் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் முன்னாள் மத்திய அமைச்சர்

சண்டிகர் முன்னாள் அமைச்சர்  பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைகிறார். சுமார் 40 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியின் பிரேந்தர்சிங் இருந்து வந்தார்.  அவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.  அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா,  மற்றும் மகன் பிஜேந்தர் சிங் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அவருடன் … Read more

மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி சாந்தனு தாக்குர் மீது வழக்கு பதிவு

கொல்கத்தா, மத்திய கப்பல்துறை இணை மந்திரி சாந்தனு தாக்குர். இவர் மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டம் தாக்குர்நகரை சேர்ந்தவர். அங்கு அவருடைய பாட்டி பினாபானி தேவி வசித்து வந்த பூர்வீக வீடு உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடையும் வரை பினாபானி தேவி அந்த வீட்டில்தான் வசித்து வந்தார். தற்போது, அவருடைய மருமகளும், மத்திய மந்திரி சாந்தனு தாக்குரின் சித்தியுமான மம்தா பாலா தாக்குர் வசித்து வருகிறார். இவர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. … Read more

பா.ஜனதாவில் இருந்து விலகினார் பிரேந்தர் சிங்: இன்று காங்கிரசில் சேருகிறார்

சண்டிகார், முன்னாள் மத்திய மந்திரி பிரேந்தர் சிங், பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அவருடைய மனைவியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பிரேம லதாவும் பா.ஜனதாவில் இருந்து விலகினார். இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) காங்கிரசில் சேரப்போவதாக பிரேந்தர் சிங் கூறினார். 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த பிரேந்தர் சிங், 10 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருடைய மகன் பிரிஜேந்தர் சிங் ஒரு மாதத்துக்கு முன்பு பா.ஜனதாவில் … Read more

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் முதல்வர்

பெங்களூரு கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்பமொய்லி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிடக் காங்கிரசில் டிக்கெட் கேட்டார். அவருக்குக் காங்கிரஸ் மேலிடம் டிக்கெட் தரவில்லை. காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகி ரக்ஷா ராமையாவுக்கு அவருக்கு பதிலாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிருப்தியில் இருந்து வந்த அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். … Read more

மராட்டியம்: கல்லூரி மாணவி கடத்தி கொலை; சக மாணவர் உள்பட 3 பேர் கைது

புனே, மராட்டியத்தின் புனே நகரை சேர்ந்த 22 வயது பொறியியல் கல்லூரி மாணவி வகோலி பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். அவருடைய கல்லூரி மற்றும் விடுதிக்கு வந்து பெற்றோர் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. இதன்பின் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த மாணவியை பணம் கேட்டு சக மாணவர் உள்பட 3 பேர் கடத்திய விவரம் தெரிய வந்தது. ஆனால், அவரை அந்த கும்பல் தாக்கி … Read more

முதுமைக்கு மரியாதை 54 – முதுமையில் மூட்டுவலி… வராமல் தடுப்பது எப்படி?

‘வயதாகிவிட்டாலே மூட்டுவலி நிச்சயம்’ என்று செவி வழியாகவும், விளம்பரங்களின் மூலமாகவும் சொல்லப் படுகிற வார்த்தைகள் அதிகம். இதை உண்மையென நம்பி சிறிது தூரம் நடக்க சிரமப்பட்டாலே வீட்டுக்குள்ளேயே முடங்கும் சீனியர் சிட்டிசன்ஸ் அநேகர். அதேசமயம், எண்பது வயதிலும் கம்பீரமாக வலம்வரும் சூப்பர் சிட்டிசன்களையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஏன் இந்த நிலை? சென்னை, ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் ஜி.கல்யாணசுந்தரத்தைச் சந்தித்துப் பேசினோம். “மூட்டுவலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனப் பலரும் நினைத்துக் கொள்கிறோம். … Read more

தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.  நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணைய உத்தரவின்படி தமிழகத்தில் … Read more

CSK v KKR: சூப்பர் ஜட்டு, மிரட்டிய Fizz, துஷார்; தோல்வி எனும் பள்ளத்திலிருந்து மீண்ட மஞ்சள் பாய்ஸ்!

தொடர்ந்து இரண்டு தோல்விகளைச் சந்தித்து, கம்பேக்கிற்காக காத்துக்கொண்டிருக்கும் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், “அடிச்சா 200+ ரன்ஸ்தான்ப்பா” என ஒரு முடிவோடு களமிறங்கி, தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திலிருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணியின் பதிரனா, தீபக் சஹார் காயத்தால் இப்போட்டியில் … Read more