அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகள் அவதி…

சென்னை அண்ணாசாலையில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.2 கி.மீ. நீளத்திற்கு உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியில் சைதாப்பேட்டை முதல் நந்தனம் வரையில் மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி ஓரளவு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக செனடாப் ரோடு சந்திப்பு முதல் அறிவாலயம் வரை பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் இருந்து ஜெமினி நோக்கி செல்லும் வாகனங்கள் எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறமாக தியாகராய சாலையில் திரும்பி … Read more

தூய்மைப் பணியாளர்கள்: "திருமாவளவன் கூறுவது சரியல்ல" – பணி நிரந்தரத்தை விவரிக்கும் CPM பெ.சண்முகம்

சென்னையில் தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாள்களாகப் போராடிக்கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களை ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவு நீதிமன்ற உத்தரவு பெயரில் வலுக்கட்டாயமாக கைதுசெய்து அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். இத்தகைய செயலுக்கு தி.மு.க அரசின் மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் பல்வேறு தரப்பிலிருந்து கண்டங்கள் வந்தது. மறுபக்கம், கடந்த சட்டமன்றத் தேர்தலில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதியளித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான … Read more

ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி ரூ.32.69 கோடிக்கு பங்குகள் வாங்கிய விவகாரம்: திமுக எம்.பி.க்கான எதிரான ED நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லி:   திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன்  ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி ரூ.32.69 கோடிக்கு   வெளிநாட்டு  பங்குகள் வாங்கிய விவகாரம் குறித்து விளக்கம் கோரிய  அமலாக்கத்துறை யின் நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இதற்கிடையில், கடந்த 2017 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள ஒரு ஷெல் நிறுவனத்தில் ரூ.42 கோடி முதலீடு செய்தமை, சிங்கப்பூர் வெளிநாட்டுப் பங்குகளை கையகப்படுத்துதல் மற்றும் அதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களிடையே மாற்றுதல் … Read more

Coolie: கன்னட சினிமாவின் `டிம்பிள் குயின்'; தமிழ் சீரியல் நடிகையின் சகோதரி – யார் இந்த ரச்சிதா ராம்?

‘கூலி’ திரைப்படம் பற்றிய மீம்ஸ்தான் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கிறது. அவற்றில் பெரும்பாலான பதிவுகள் கன்னட நடிகை ரச்சிதா ராம் பற்றியதாகத்தான் இருக்கிறது. அந்தளவிற்கு அவருடைய கதாபாத்திரம் ‘கூலி’ திரைப்படத்தில் பலரையும் சர்ப்ரைஸ் செய்திருந்தது. Rachita Ram – Coolie ‘கூலி’ படத்தில் நடிகை ரச்சிதா ராமின் கல்யாணி என்ற கதாபாத்திரம் பலரையும் சர்ப்ரைஸ் செய்திருக்கிறது. தமிழ் ஆடியன்ஸுக்கு பெரிதளவில் பரிச்சயமில்லாத ரச்சிதா ராம் இதற்கு முன் கன்னடத்தில் டாப் நடிகர்களுடன் இணைந்து திரையில் தூள் கிளப்பியிருக்கிறார். … Read more

மகாராஷ்டிரா மாநில ஆளுநராகிறார் எச்.ராஜா? பரபரப்பு தகவல்கள்…

சென்னை:  பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது மகாராஷ்டிரா மாநில கவர்னராக இருந்து வரும், தமிழ்நாடு மாநில பாஜகவின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இடத்துக்கு தமிழ்நாட்டைச்  சேர்ந்த மூத்த பாஜக தாலைவரும்,காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான   எச். ராஜா என்று அழைக்கப்படும் ஹரிகரன் ராஜா சர்மா (Hariharan Raja Sharma)  … Read more

டெவால்ட் பிரெவிஸ் விவகாரத்தில் நடந்தது என்ன? – அடுத்தடுத்து விளக்கம் கொடுத்த சிஎஸ்கே & அஸ்வின்

ஐபிஎல் 2025 சீசனின் பாதியில், காயம் காரணமாக விலகிய குர்ஜப்நீத் சிங்கிற்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தென்னாப்பிரிக்க இளம் வீரர் `பேபி ஏபி’ என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸை மாற்று வீரராக 2.2 கோடி மதிப்பில் வாங்கியது. அதைத்தொடர்ந்து தான் களமிறங்கிய போட்டிகளில் டெவால்ட் பிரெவிஸ், அடுத்த சீசனிலும் அணியில் தனது இடத்தை தக்கவைக்கும் வகையில் அதிரடி காட்டினார். டெவால்ட் பிரெவிஸ் இவ்வாறிருக்க, ஐ.பி.எல் சீசன் முடிந்து 3 மாதங்கள் ஆகும் நிலையில், … Read more

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய மத்திய அமைச்சர்…

சென்னை: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வேட்பாளராக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் ஆதரவு கோரி,  முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினுக்கும் மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையே  நட்பு  இருந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற  தி.மு.க-வின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, அவரது உருவம் பொறித்த … Read more

கிட்னியை தொடர்ந்து கல்லீரல் திருட்டு – பரபரக்கும் நாமக்கல் மாவட்டம்…

நாமக்கல்: ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களை ஏமாற்றி கிட்னி திருடப்பட்ட சம்பவம் அதிர்கலைகளை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டத்தில், தற்போது கல்லீரல் திருட்டு நடைபெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல வேறு சிலருக்கும்  முறையான அனுமதியின்றி மற்ற பாகங்கள் திருடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் கிட்னியை விற்பனை செய்த மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திமுக நபர்களின் இரண்டு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று … Read more

போலீஸை டோரில் தொங்க விட்டு டெம்போவை ஓட்டிய டிரைவர்; நடுரோட்டில் அதிர்ச்சி சம்பவம் – என்ன நடந்தது?

வாகன சோதனையில் போலீசார் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அமைந்துள்ளது பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் நிலையம். டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு  தக்கலை பழைய பேருந்து நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரவு சுமார் 10.30 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கூண்டு கட்டிய டெம்போவை காவலர் பெல்ஜின் ஜோஸ் (வயது 32) கைகாட்டி நிறுத்தினார். டெம்போ நின்றதும் வாகனத்தை சோதனையிட முயன்றுள்ளார். போக்குவரத்து காவலர் சோதனையிடும் … Read more