"நண்பர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள்"- இந்தியாவைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவை விமர்சித்த ரஷ்யா!

அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்தினால் இந்தியா-சீனா உறவுகள் மேம்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ரஷ்யாவும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. இந்தியா மீது 25% வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதனால் அபராதமாக கூடுதல் 25% வரி விதித்தார். இதனால் அதிகபட்ச வரி விதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாறியது இந்தியா. அதிபர் ட்ரம்ப் நண்பர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள் இந்தச் சூழலில் ட்ரம்பின் வரிவிதிப்பால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ஈடு செய்ய முன்வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. … Read more

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரவே இந்தியா மீது தடை : வெள்ளை மாளிகை

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது தடைகளை விதித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த கரோலின், ‘இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பொதுமக்களிடமிருந்து நிறைய அழுத்தம் இருந்தது. இதையடுத்து, இந்தியா மீது தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.’ ‘எந்தவொரு சந்திப்பும் நடைபெறுவதற்கு … Read more

Cm Removal Bills: “பாகிஸ்தான், பங்களாதேஷாக மாறிக்கொண்டிருக்கிறது இந்தியா" – INDIA கூட்டணி விமர்சனம்

மழைக்கால கூட்டத்தொடர் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. நாளையுடன் (21-ம் தேதி) கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் முக்கியமாக பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவின் படி, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்களில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து … Read more

காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ காவல்துறையினர்  மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.  ஆகஸ்டு 20ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், முதல்கட்ட குற்றப்பத்திரிகயை சிபிஐ இன்று தாக்கல் செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் … Read more

Constitution (130th Amendment) Bill: "சர்வாதிகாரத்தின் தொடக்கம்… இதுவொரு கருப்பு மசோதா" – ஸ்டாலின்

பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகித் தொடர்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களைப் பதவி நீக்கம் செய்யக்கூடிய மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த இந்த 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள்ளேயும், வெளியேவும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அந்த வரிசையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். Constitution (130th Amendment) … Read more

‘போலீஸ் ராஜ்ஜியமாக நாட்டை மாற்றுவதற்கான சதி’ பிரதமர்-முதல்வர் மற்றும் அமைச்சர்களை நீக்கும் மசோதா குறித்து ஓவைசி பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று மூன்று முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தினார், இது குறித்து நாடாளுமன்றத்திற்குள் காரசாரமான விவாதமும் கூச்சலும் ஏற்பட்டது. இதில் அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா 2025, யூனியன் பிரதேச ஆட்சி (திருத்தம்) மசோதா 2025 மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025 ஆகியவை அடங்கும். இந்த மசோதாக்களின் கீழ், பிரதமர், முதல்வர் அல்லது எந்தவொரு அமைச்சரும் கடுமையான குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டால், அவர்களை பதவியில் இருந்து நீக்க … Read more

Mammootty: "சிகிச்சையின்போது சுவை, மணம் தெரியவில்லை எனச் சொன்னார்" – மம்மூட்டி ஹெல்த் அப்டேட்!

நடிகர் மம்மூட்டி உடல்நலம் குணமாகி மீண்டும் சினிமாவுக்குத் திரும்புகிறார். மம்மூட்டி உடல்நலம் சரியில்லாமல் கடந்த 7 மாதங்களாகச் சிகிச்சைகள் எடுத்து வந்தார். மம்மூட்டி சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று நடிகர் மோகன்லால் சபரிமலையில் அவருக்காக அர்ச்சனை செய்திருந்தது பலருக்கு நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து, அவர் உடல்நலம் குணமாகி மீண்டும் படப்பிடிப்புகளுக்கு வரவிருக்கிறார் என்ற தகவல் நேற்று முதல் இணையத்தில் பரவி வந்தது. Mammootty and Mohan Lal அதை உறுதிப்படுத்தும் வகையில், மோகன்லாலும் மம்மூட்டியுடனான ஒரு புகைப்படத்தைத் … Read more

திண்டுக்கல் தென்காசி உள்பட 10 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை…

சென்னை: திண்டுக்கல் தென்காசி உள்பட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இது அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக பிரமுகர் திருபுவனம்  ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்பட 10 இடங்களில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் இன்று திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, வேடச்சந்தூர் உள்ளிட்ட … Read more

ராஜஸ்தான்: புலிகள் வாழும் காட்டில் சிக்கிய சுற்றுலா பயணிகள் – சவாரி வாகனம் பழுதடைந்ததால் பரபரப்பு!

ராஜஸ்தானின் ரந்தாம்போர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற வாகனம் பழுதடைந்ததால் புலிகள் வாழும் காட்டில் பயணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் ஒன்றரை மணி நேரம் சிக்கித் தவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்டிடிவியின் தகவலின்படி, சம்பவம் நேற்று மாலை 6.00 மணியளவில் பூங்காவின் 6-ஆம் மண்டலத்தில் நடந்துள்ளது. அந்த பகுதி 60-க்கும் மேற்பட்ட புலிகள், சிறுத்தைகள், கரடி, முதலைகள் போன்ற ஆபத்தான விலங்குகளின் வாழ்விடமாகும். புலி காட்டு பகுதியில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் … Read more

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மண்டலம் V (ராயபுரம்) மற்றும் VI (திரு. வி. கா. நகர்) ஆகியவற்றில் துப்புரவுப் பணிகளை தனியார்வசம் ஒப்படைக்க கடந்த ஜூன் 16ம் தேதி சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. மாநகராட்சியின் இந்த முடிவை எதிர்த்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி … Read more