கொல்கத்தா கொடூரம்.. மருத்துவர்களுக்கு தனி சட்டம்! பத்ம விருது பெற்ற மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம்

டெல்லி: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தையடுத்து, மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளை கையாள சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று, பத்ம விருதுகளை பெற்ற மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் Source Link

கூட்டுப் பாலியல், இளம் பெண் அலைக்கழிப்பு – அரசு மருத்துமனைக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பநாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் அந்த இளம் பெண். பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி மாலை பாப்பநாடு பகுதியை சேர்ந்த நண்பர்களான கவிதாசன்(25), திவாகர் (27), பிரவீன்(20), மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சேர்ந்து இளம் பெண்ணை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது … Read more

விநாயகர் சிலை வைப்பது மற்றும் ஊர்வலத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு! டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் விநாயகர் சிலை வைப்பது, விநாயகர் ஊலகம் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை  தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக டிஜிபி சங்கர் பல கண்டிசன்கள் வெளியிட்டு உள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி நாடு முழுவதும்  விநாயகர் சதூர்த்தி விழா  கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன்.  கடந்த ஆண்டை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான சிலைகள் … Read more

ஆளும் கட்சியில் இணையும் பதவி நீக்கம் செய்யப்பட்ட 2 காங்கிரஸ் எம் எல் ஏக்கள்  

சில்லாங் மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி 6 ஆண்டுகளுக்கு பதவி நீக்கம் செய்த 2 எம் எல் ஏக்கள் ஆளும் கட்சியில் இணைய உள்ளனர். மேகாலயாவில் கட்சிக்கு விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேரை 6 ஆண்டுகளுக்கு பதவிநீக்கம் செய்வதாக அம்மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது மவாத்தி தொகுதி எம்.எல்..ஏ சார்லஸ் மார்ங்கர் மற்றும் நாங்ஸ்டாய்ன் தொகுதி எம்.எல்.ஏ. கேப்ரியல் வாலங்க் ஆகியோர் மறு உத்தரவு வரும் வரை கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக … Read more

சென்னை ’பப்’பில் ஆடிக்கொண்டிருந்த மாணவர் திடீர் மரணம்

சென்னை சென்னை நுங்கம்பாக்கம் ‘பப்’பில் ஆடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். சென்னையில் உள்ள கல்லூரியில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த முகமது சுகைல் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ராமாபுரத்தில் உள்ள பி.ஜி ஹாஸ்டலில் தங்கி இருந்தார். முகமது சுகைல் நேற்று இரவு பெண் தோழிகளுடன் சேர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘பப்’புக்கு வந்துள்ளார். அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்கு உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்தார். … Read more

ஆர் எஸ் எஸ் மூலம் அதிகாரிகளை நியமனம் செய்யும் மோடி : ராகுல் காந்தி

டெல்லி பிரதமர் மோடி ஆர் எஸ் எஸ் மூலம் அதிகாரிகளை நியமனம் செய்வதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில், ”யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குப் (UPSC) பதிலாக ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்’ (ஆர்.எஸ்.எஸ்.) மூலம் அரசு ஊழியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் நரேந்திர மோடி அரசியல் அமைப்பை தாக்குகிறார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கியப் பணியிடங்களை பக்கவாட்டு நுழைவு மூலம் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் SC, … Read more

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்கியது…

தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் நிறுத்திவைக்கப்பட்ட மின்சார ரயில் இன்று முதல் மீண்டும் துவங்கியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் 8 நடைமேடைகள் இருந்து வந்த நிலையில் மேலும் இரண்டு நடைமேடைகள் அமைக்கவும், தண்டவாளங்களை சீரமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வந்தன. இதனால், சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் பல்லாவரத்துடன் நிறுத்தப்பட்டன. செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்கமாக சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தப்பட்டன. … Read more

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்… அடுத்த தலைமைச் செயலாளர் யார் ?

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைரவாக, தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் புதிதாக வீட்டு மனைகளை உருவாக்குவது, வீட்டு மனை பட்டாக்களுக்கு அனுமதி வழங்குவது பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முதல் தலைவராக முன்னாள் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் 2019-ம் ஆண்டு பிப்.8-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் இந்த ஆண்டு பிப்.10-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு … Read more