மனிதநேயம் இல்லா ஹவுஸ் ஓணர்.. ரோட்டில் மகனுக்கு இறுதி சடங்கு செய்த தாய்.. கள்ளக்குறிச்சி கண்ணீர் கதை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவரின் உடலை வீட்டில் வைத்து இறுதி சடங்கு செய்ய வாடகை வீட்டின் உரிமையாளர் அனுமதி மறுத்தார். இதனால் மகனை பறிகொடுத்த தாய் தனது உறவினர்களுடன் மகனுக்கு நடுரோட்டில் இறுதி சடங்கு செய்தது துயரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ளனர். Source Link

நீட் வினாத்தாள் கசிவு: தேஜஸ்வி யாதவ் மீது பீகார் துணை முதல்-மந்திரி குற்றச்சாட்டு

பாட்னா, நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. அப்படி வெளியிடப்பட்ட முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஒரே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 6 மாணவர்கள் முழுமையான மதிப்பெண்கள் பெற்று இருப்பதும், சில மாணவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லாமல் முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பீகாரில் நீட் வினாத்தாள் கசிந்ததாக சமீபத்தில் … Read more

இன்ஸ்டா வீடியோ எடுக்க இடைஞ்சல்: புகையால் ஏற்பட்ட பகை… குமரி தொழிலாளி கொலையில் ஜோடி கைது!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள செட்டியார்மடம் பகுதியை சேர்ந்தவர் அமுதா (33). இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன் பன்னீர் செல்வம் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. அமுதாவின் கணவர் பன்னீர்செல்வம் 7 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அமுதாவுக்கும், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த நவநீதனுக்கும் இன்ஸ்டா மூலம் 4-ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இப்போது கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை மதுவிலக்கு எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் அருண் மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி. பதவியை கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கீழ்ப்பாக்கம் இணை ஆணையர் கோபி சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி. யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் எஸ்.பி செந்தில்குமார் ஆகியோர் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

“தலைவா என்ன காப்பாத்து”.. மருத்துவமனையில் கண்கலங்கிய நபர்.. மீளாத்துயரில் கையெடுத்து கும்பிட்ட விஜய்

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்ததில் 42 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தலைவா, தலைவா என உறவினர்கள் விஜயை கட்டி பிடித்து அழுத சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் Source Link

கார் கவிழ்ந்து இளம்பெண் பலியான விவகாரம்; திட்டமிட்ட கொலை என உறவினர் குற்றச்சாட்டு

புனே, மராட்டியத்தின் சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்டத்தில் சுவேதா சர்வாசே (வயது 23) என்ற இளம்பெண், ரிவர்ஸ் கியரில் இருந்த காரை இயக்கி, பின்னால் சென்று 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் பலியானார். இந்த சம்பவத்தில், அவருடைய நண்பரான சுராஜ் மூல் என்பவர் மீது 304 (ஏ) பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, சுவேதாவுக்கு ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா? இல்லையா? என தெரியாமலேயே காரின் சாவியை தோழியிடம் கொடுத்திருக்கிறார். அவரை சுராஜ் … Read more

`கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் என்பதை ஏற்க முடியாது' – மதுவிலக்கு கொண்டுவர திருமா வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 40 பேர் உயிரிழந்ததும், இன்னும் பலர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிவருவதும் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டவிரோதமாக விற்கப்படும் இந்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டிருப்பதே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், முழு மதுவிலக்கை அமல்படுத்துவதே இதற்கான நிரந்தரத் தீர்வு என தமிழ்நாடு அரசுக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார். கள்ளக்குறிச்சி… கள்ளச்சாராயம் இதுகுறித்த அறிக்கையில்., “கள்ளக்குறிச்சியில் ‘மெத்தனால்’ என்னும் அடர் ஆல்கஹால் கலந்த சாராயம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனைக் … Read more

அரசுப்பணிக்கு ஓராண்டு கால முதுகலை பட்டப்படிப்புகள் செல்லும் : உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அரசு பணி நியமனத்துக்கு ஒராண்டு கால முதுகலை பட்டப்படிப்புகள் செல்லும் எனத் தெரிவித்துள்ளது. டி என் பி எஸ் சி மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு தட்டச்சர் பணிக்கு விண்ணப்பித்த பரந்தாமன் என்பவர் தேர்வில் 201 மதிப்பெண்கள் பெற்றார்.  ஒரே மதிப்பெண்களைப் பலர் பெற்றிருந்ததால், ஆட்சேர்ப்புக்கு முதுகலை பட்டங்கள் உயர்தகுதி அடிப்படையில் அமைந்தது. எம்பிஏ மற்றும் முதுகலை நூலகம் ஆகிய இரண்டு முதுகலைப் பட்டங்களை பரந்தாமன் பெற்ற போதும்,  விண்ணப்பத்தில் முதுகலை நூலகம் … Read more

தீவிர இதய நோய் பாதிப்பு.. உயிருக்கு போராடும் 1.8 வயது குழந்தை! காப்பாற்ற முடிந்த உதவியை செய்யுங்கள்

ராணிப்பேட்டை: தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1.8 வயது குழந்தை, உயிருக்கு போராடி வருகிறது. இக்குழந்தையின் உயிரை காப்பாற்ற தங்களால் முடிந்த சிறு உதவியை செய்யுங்கள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் எலக்ட்ரீஷன் வேலை செய்து வருபவர் ஜெய்பிரகாஷ். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. நிரந்தரமில்லாத வேலை, குடும்பத்தை பாதுகாக்கும் அளவுக்கு போதுமான ஊதியம் Source Link

மோடியுடன் தொலைபேசியில் பேசிய இந்தோனேசிய ஜனாதிபதி: பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம் இறுதியாகிறது

புதுடெல்லி: இந்தோனேசியாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபோவோ சுபியாண்டோ இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசினர். இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தோனேசிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோ தொலைபேசியில் அழைத்து பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஜனாதிபதி பதவியில் சிறப்பாக செயல்பட வாழ்த்தியதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே நமது நாகரிக உறவுகளை அடிப்படையாக கொண்ட … Read more