Sandeshkhali: பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரை வேட்பாளராக்கிய பாஜக!

மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர், சந்தேஷ்காளி கிராமத்தில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நில அபகரிப்பு, பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டார் என கடந்த மாதம் பெரும் பிரச்னை வெடித்தது. மம்தா பானர்ஜி – சந்தேஷ்காளி விவகாரம் இதுதொடர்பாக, சந்தேஷ்காளி கிராமத்துப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட, 50 நாள்களாக தலைமறைவாக இருந்த ஷாஜகான் ஷேக்கை போலீஸார் கைதுசெய்தனர். இந்த விவகாரமானது, பிரதமர் … Read more

10 ஆண்டுகள் பொய்களால் கட்டமைக்கப்பட்ட ஆட்சி… இன்னும் 5 ஆண்டுகள் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் : பாஜக மீது கர்நாடக அமைச்சர் விமர்சனம்

கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவராஜ் எஸ்.தங்கடகி, வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறி கடந்த 10 ஆண்டுகளாக இளைஞர்களை ஏமாற்றிவருபவர்களை அறைய வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொப்பலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது, “பிரதமர் மோடி இரண்டு கோடி வேலை வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்தார். அவர் கொடுத்தாரா? ‘மோடி மோடி’ என்று முழக்கமிடும் அவரது ஆதரவாளர்கள் வெட்கப்பட வேண்டும். இளைஞர்களை ஏமாற்றிவருபவர்களை அறைய வேண்டும்” என்று பேசினார். மேலும், “கடந்த … Read more

தேர்தல் பத்திர ஊழலில் இருந்து திசை திருப்ப கெஜ்ரிவால் கைது; பினராயி விஜயன்

திருவனந்தபுரம், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை அமலாக்க துறை அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். இதற்கு இந்தியா கூட்டணி உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியானது 3-வது முறையாக கேரளாவில் நேற்று பேரணி நடத்தியது. இதில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார். அவர் பேரணியில் கூடியிருந்த மக்களிடையே பேசும்போது, இந்தியா இதுவரை பார்த்திராத … Read more

ஐபிஎல் 2024 போட்டிகளின் முழு அட்டவணை வெளியானது… மே 26 சென்னையில் இறுதியாட்டம்…

மார்ச் 22ம் தேதி சென்னையில் துவங்கிய ஐபிஎல் 2024 போட்டிகளின் முழு அட்டவணை இன்று வெளியானது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் சூழலில் கிரிக்கெட் தொடர்புடைய அரசியல் பிரபலங்கள் கலந்து கொள்வது குறித்து கவலையடைந்த ஜெய் ஷா இந்த போட்டி தொடரின் முதல் இரண்டு வார அட்டவணையை மட்டும் ஏற்கனவே வெளியிட்டிருந்தார். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கேற்றாற் போல் ஆட்டத்தை நடத்த திட்டமிட்டு முழு அட்டவணை இன்று வெளியிட்டுள்ளது. மே 21ம் தேதி முதல் … Read more

நாங்களும் யூஸ் பண்ணுவோம்.. \"போன் பே\"யில் பிச்சை எடுத்த பிச்சைக்காரர்.. தீயாய் பரவும் வீடியோ!

கவுகாத்தி: கவுகாத்தியில் போன்பே பயன்படுத்தி பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுக்கும் காட்சி இணையதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சிந்தனையை தூண்டும் தருணம் என அசாம் காங்கிரஸ் கட்சி நிர்வாகி இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் கற்பனை செய்து பார்க்காத அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. வீட்டை விட்டு வெளியே ஒரு Source Link

விளவங்கோடு இடைத்தேர்தல்: தாரகை கத்பர்ட்டைக் களமிறக்கிய காங்கிரஸ்… பின்னணியில் 2 காரணங்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். மீனவர் சமூகத்தைச் சேர்ந்த தாரகை கத்பர்ட், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாகப் பயணித்து வருகிறார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட் ஆவார். விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், கன்னியாகுமரி … Read more

“நானாவது எய்ம்ஸ் கல்லை காட்டினேன்… ஆனால் எடப்பாடி பிரதமர் மோடியிடம் பல்லை காட்டுறாரு” எடப்பாடிக்கு உதயநிதி பதிலடி

“நானாவது எய்ம்ஸ் கல்லை காட்டினேன்… ஆனால் எடப்பாடி பிரதமர் மோடியிடம் பல்லை காட்டுறாரு” உதயநிதி ஸ்டாலின் பேச்சு 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இன்று வரை அதற்கான வேலை நடைபெற வில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து மேடைக்கு மேடை விமர்சித்து வரும் நிலையில், “உதயநிதி ஸ்டாலின் தனது ஸ்க்ரிப்ட்டை மாற்ற வேண்டும்” என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருந்தார். இதற்கு … Read more

Citroen Basalt – மார்ச் 27.., சிட்ரோன் பாசால்ட் கூபே எஸ்யூவி அறிமுகம்

இந்தியாவில் சிட்ரோன் வெளியாட உள்ள கூபே ஸ்டைல் பெற்ற எஸ்யூவி மாடலுக்கு பாசால்ட் என பெயரிடப்பட்டு மார்ச் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. முன்பாக C3X என அறியப்பட்டு வருகின்ற இந்த மாடல் சி3 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டாலும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீனத்துவமான கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டிருக்கும். தற்பொழுது வரை சிட்ரோன் பாசால்ட் விஷன் கூபே ரக எஸ்யூவி மாடல் பற்றி வெளிவந்துள்ள விபரத்தை அறிந்து கொள்ளலாம். கூபே ஸ்டைல்: நாட்ச்பேக் … Read more

முதலில் வந்த அதிமுக வேட்பாளர்… முந்திக்கொண்ட ஓ.பி.எஸ்! – ராமநாதபுரம் வேட்புமனு தாக்கல் அப்டேட்

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் நவாஸ்கனி, அதிமுக கூட்டணி சார்பில் ஜெயப்பெருமாள், பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாக ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் களம் இறங்குகின்றனர். இந்நிலையில் இவர்கள் மூவரும் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி கோரியிருந்தனர். இதையடுத்து முதலாவதாக அதிமுக வேட்பாளருக்கும், அடுத்ததாக சுயேச்சையாகக் களம் காணும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இவர்களை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய தி.மு.க கூட்டணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. … Read more