தலைப்பு செய்திகள்
குடியரசுத் தலைவருடன் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்
டில்லி இன்று சிறுவர்கள் மற்றும் மாணவர்களுடன் குடியரசுத் தலைவர் ரக்ஷா பந்தன் கொண்டாடி உள்ளார். இன்று நாடு முழுவதும் சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் மணிக்கட்டில் அன்பின் அடையாளமாக ராக்கி கயிறு கட்டி வாழ்த்து பெறுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாகும். பெண்கள் ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்பு சகோதரிக்குப் பரிசு அளிப்பது வழக்கம். வட இந்தியாவில் இந்த பண்டிகை பிரபலமாக உள்ளது. ஆயினும் சமீபகாலமாக … Read more
அமைச்சர் மா சுப்பிரமணியன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
சென்னை தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார். இன்று அதிகாலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களைச் சந்திக்கும்போது, அவருக்குத் தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே மா.சுப்பிரமணியன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்த பரிசோதனையின் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் எவ்வித … Read more
ஓ.பி.எஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; மீண்டும் கையிலெடுக்கும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்!
2001 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஓ.பி.எஸ்., வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியேற்றார். டான்சி வழக்கில் சிறைத் தண்டனை உறுதிசெய்யப்பட்டதால், ஜெயலலிதாவிடமிருந்து முதல்வர் பதவி பறிபோனது. அதனால், தமிழ்நாட்டின் திடீர் முதல்வரானார் ஓ.பி.எஸ். பிறகு, மீண்டும் ஜெயலலிதா முதல்வரான பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சராக ஓ.பி.எஸ் பதவிவகித்தார். 2006-ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், ஓ.பி.எஸ், அவரின் குடும்பத்தினர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஓபிஎஸ் – அதிமுக ஊழல் … Read more
எங்கள் நோக்கம் ஜனநாயகத்தைக் காப்பது மட்டுமே : உத்தவ் தாக்கரே
மும்பை உத்தவ் தாக்கரே ஜனநாயகத்தை காப்பது மட்டுமே தங்கள் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார் நாளை முதல் இரு நாட்களுக்கு மும்பையில் நா இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டாகப் பேட்டி அளித்தனர். உத்தவ் தாக்கரே அப்போது “நடைபெற உள்ள 3-வது இந்திய கூட்டணி … Read more
தம்பிக்காக சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்த பாசக்கார அக்கா| A loving sister who offered to donate a kidney for her younger brother
ராய்ப்பூர்: சகோதரத்துவத்தை போற்றும் ரக் ஷா பந்தன் தினத்தில், சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் தம்பிக்காக சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் ஷீலாபாய் பால். இவரது தம்பி ஓம்பிரகாஷ் தங்கர், 48. இவர், 2022 மே மாதம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, குஜராத் மாநிலம் நாடியாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ஓம்பிரகாஷ் தங்கருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள, அவரது குடும்பத்தினர் … Read more
பையில் கட்டுக்கட்டாகப் பணம்… பேருந்தில் திருட முயன்ற பெண்கள் கைது! – என்ன நடந்தது?
திருப்பூர் மாவட்டம், நஞ்சப்பா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வானதி. இவர் பெருமாநல்லூரிலிருந்து திருப்பூருக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் போயம்பாளையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அந்தப் பேருந்து பாண்டியன் நகர் அருகே வந்தபோது, வானதியின் அருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள், வானதியின் கைப்பையிலிருந்த பணத்தைத் திருட முயன்றுள்ளனர். பெண்கள் கைது இதைக் கண்ட வானதி சத்தம் போடவே, பேருந்தில் பயணித்த சக பயணிகள் இரண்டு பெண்களையும் பிடித்து, பாண்டியன் நகர் சோதனைச்சாவடியில் உள்ள போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சோதனைச்சாவடியில் இருந்த … Read more