Kejriwal welcomes the Supreme Court verdict as a boost in faith in democracy | ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அதிகரிப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கெஜ்ரிவால் வரவேற்பு

புதுடில்லி,:அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுலுக்கு விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். மோடி என்ற பெயர் குறித்து, 2019ம் ஆண்டு ராகுல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ராகுலின் லோக்சபா எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர் வெற்றி பெற்றிருந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதி காலியாக இருப்பதாகவும் … Read more

`சுயமரியாதைக்கு எதிராகச் செயல்பட முடியாது!' – உயர் நீதிமன்றத்தில் ராஜினாமாவை அறிவித்த நீதிபதி

மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் ரோஹித் பி தேவ். 2025-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி நீதிபதி ரோஹித் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். ஆனால், இன்று திடீரென கோர்ட்டில் நீதிபதி ரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்வதாக வெளிப்படையாக அறிவித்தார். அதோடு தனது சுயமரியாதைக்கு எதிராகச் செயல்பட முடியாது என்றும் கோர்ட்டில் தெரிவித்தார். “எனக்கு யார்மீதும் வெறுப்பு கிடையாது. ஆனாலும் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ரோஹித் பி … Read more

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் ஏன் தடை விதித்தது ?

மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. சூரத் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட மேல்முறையீட்டிலும் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, நீதிபதிகள் பி.ஆர். காவாய், பி.எஸ். நரசிம்மா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்தி மீது இ.பி.கோ. … Read more

"விருந்தோம்பலால் சொந்த நாட்டில் இருப்பதைப் போல் உணர்கிறோம்!"- சென்னையில் நெகிழ்ந்த பாகிஸ்தான் கோச்

சென்னையில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, கொரியா என 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றிருக்கின்றன. Ground இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான முகமது சக்லைன் சென்னையைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். பாகிஸ்தான் அணி தங்களது முதல் போட்டியில் மலேசியாவிற்கு எதிராக 1-3 எனத் தோற்றிருந்தது. இந்நிலையில், இன்று கொரியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் களமிறங்கியது. வலுவான கொரிய … Read more

27 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 27 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் தொடர்பான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் சற்றுமுன் பிறப்பித்துள்ளார். இதில் மொத்தம் 27 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய இடத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிர்வாக ரீதியில் பணிகள் சரியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் இடமாற்றம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை ரத்து செய்யவேண்டும்… சபாநாயகரிடம் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி எம்.பி. வலியுறுத்தல்…

மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட ராகுல் காந்திக்கு எந்த நிவாரணமும் கிடைக்காத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கிய இரண்டாண்டு சிறை தண்டனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதனையடுத்து … Read more

இதான் முக்கியமான கட்டம்.. நாளை LOI.. 3ல் 2 பங்கு தூரத்தை கடந்த சந்திரயான்-3.. இஸ்ரோ கொடுத்த அப்டேட்!

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 நிலவை நோக்கிய பயணத்தில் மூன்றில் 2 பங்கு தூரத்தைக் கடந்துவிட்டது என்றும், சந்திரயான் 3 நாளை மாலை 7 மணிக்கு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை நெருங்குகிறது என்றும் இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு மேற்கொள்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் ரூ.615 கோடியில் Source Link

Cant give up self-respect: Resigned judge gives sensational interview | சுயமரியாதையை விட்டு கொடுக்க முடியாது: ராஜினாமா செய்த நீதிபதி பரபரப்பு பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: தனது சுயமரியாதையில் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை என கூறி ரோஹித் தியோ என்ற மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி , திறந்த வெளி நீதிமன்றம் முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, இந்நீதிமன்றத்தில் எனது சுயமரியாதைக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது, அதற்காக எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்பவில்லை. உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்றே … Read more