வட கொரியாவில் கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு: வேளாண் கொள்கை குறித்து தீவிர ஆலோசனை

வட கொரியாவில் கோவிட் கால பேரழிவிற்கு பின்னர் கடுமையான தானிய தட்டுப்பாடு அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. தானிய தட்டுப்பாடு சமீபத்தில் விரோதப்  படைகளுக்கு எதிராக அணு ஆயுத எதிர் தாக்குதல் நடத்தும் திறனை வெளிப்படுத்தும் வகையில் வட கொரியா  நான்கு மூலோபாய கப்பல் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக அதன் அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இவ்வாறு போர் பதற்றங்கள் மற்றும் உலக நாடுகளின் தனிமைப்படுத்தல் போன்ற சிக்கலுக்கு இடையில் கொரோனா தொற்று பாதிப்புகளும் வட கொரிய … Read more

சாலை பலமுறை கவிழ்ந்த ஜேர்மன் பேருந்து: ஆஸ்திரியாவில் அரங்கேறிய பயங்கர விபத்து

ஆஸ்திரியாவில்  பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் வரை காயமடைந்துள்ளனர். பேருந்து கவிழ்ந்து விபத்து ஆஸ்திரியாவில் ஜேர்மன் பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.   இந்த விபத்தில் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் ஏராளமான பயணிகள் காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Euro … Read more

மகளிர் டி20 உலகக்கோப்பை: 6வது முறையாக உலக சாம்பியன்! தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சாதனை

பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. உலக கோப்பை இறுதிப் போட்டி 8வது பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் கடந்த 10ம் திகதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய … Read more

பள்ளி செல்வதை தடுக்க…பெண் சிறுமிகளுக்கு ஊட்டப்படும் விஷம்! உண்மையை வெளிப்படுத்திய அமைச்சர்

ஈரானில் பெண் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுக்க அவர்களுக்கு விஷம் கொடுக்கப்படுவதாக அந்த நாட்டின் அமைச்சர் மறைமுகமாக அறிவித்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு விஷம் ஈரானின் தெஹ்ரானில் உள்ள புனித நகரான கோமில்(Qom) பெண்களுக்கான கல்வியை நிறுத்தும் நோக்கில், பள்ளிச் சிறுமிகளுக்கு சிலர் விஷம் ஊட்டுவதாக ஈரானிய துணை அமைச்சர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  நவம்பர் பிற்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான சுவாச நச்சு வழக்குகள் பள்ளி மாணவிகளிடையே பதிவாகி வருவதாகவும், அவற்றிலும் … Read more

மணமகள் இறந்த பின்பும் நடைபெற்ற திருமணம்! குடும்பத்தினர் செயலால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் திருமண சடங்களின் போது மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்ததால், குடும்பத்தினர் மணப்பெண்ணின் தங்கையை மணமகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். உயிரிழந்த மணப்பெண் குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் பகுதியை சேர்ந்த ஹெட்டால் என்ற மணப்பெண்ணுக்கும், நரி கிராமத்தைச் சேர்ந்த மணமகன் விஷாலுக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் பகுவானேஷ்வர் மகாதேவ் கோவில் முன்பு நடைபெற்று வந்தது. அப்போது மணப்பெண் ஹெட்டால் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஹெட்டால் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். … Read more

27.02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 27 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பிரித்தானியாவில் நாயுடன் காணாமல் போன மலைபாதை வீரர்: உடல்களை உறுதிப்படுத்திய பொலிஸார்

கைல் சம்ப்ரூக் என்ற மலையேறுபவர் கடந்த வார இறுதியில் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் காணாமல் போன நிலையில், அவரும், அவரது நாய் பேனின் உடலும் க்ளென்கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. காணாமல் போன மலைப்பாதை வீரர் கைல் சம்ப்ரூக்(33) என்ற மலைப்பாதை வீரர் பிப்ரவரி 18ம் திகதி(சனிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் மலையேறுவதற்காக ஹைலேண்ட்ஸ் பகுதிக்கு வந்தடைந்தார். இதையடுத்து ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்திற்கு பிறகு, கைல் சம்ப்ரூக்(Kyle Sambrook) அவரது நாய் பேனுடன் காணாமல் போனது உறுதிப்படுத்தப்பட்டது. PA இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் … Read more

91 வயதில் காதலில் விழுந்த பிரபல தொழிலதிபர்! சொத்து மதிப்பு ரூ.3 லட்சம் கோடி

ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு உரிமையாளரான பிரபல தொழிலதிபர் மீண்டும் காதலில் விழுந்துள்ளார். 91 வயதில் மீண்டும் காதல் பிரபல DLF குழுமத்தின் முன்னாள் தலைவரான குஷால் பால் சிங் (Kushal Pal Singh), இப்போது தனது 91 வயதில் மீண்டும் காதலில் விழுந்துள்ளார். கே.பி. சிங் என பிரபலமாக அறியப்படும் குஷால் பால் சிங் 91 வயதில் காதலிக்க என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம். PTI டிஎல்எஃப் குழுமத்தின் முன்னாள் தலைவர் குஷால் … Read more

சித்து மூஸ்வாலா கொலை: பஞ்சாப் சிறையில் கைதிகளிடையே வெடித்த மோதல்… இருவர் உயிரிழப்பு!

பஞ்சாப்பில் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, சண்டிகரிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இன்று பிற்பகலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கொலைக் கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒருவருக்கொருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் இரண்டு கைதிகள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்திருக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இது குறித்து போலீஸ் அதிகாரி குருமீத் சிங் அளித்தப் பேட்டியில், “சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். … Read more

திருப்பூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: திருப்பூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். காங்கேயம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.