“இனி முத்ததிற்கு பஞ்சம் இல்லை” காதலர்களுக்காக வந்தாச்சு Remote Kissing device! சீனா அசத்தல்

சீனாவை சேர்ந்த ஜியாங் சோங்லி என்ற நபர், தொலைதூரக் காதலர்கள் தங்களது உண்மையான முத்தத்தை பரிமாறிக் கொள்வதற்காக remote Kissing device என்ற புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளார். ரிமோட் கிஸ் சாதனம்  சீனாவில் உள்ள சாங்கோ தொழிற்கல்வி என்ற நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி உலகம் முழுவதும் பயனர்களை மின்னணு முறையில் முத்தம் அனுப்ப இந்த சாதனம் அனுமதிக்கிறது. இந்த ரிமோட் கிஸ் சாதனம் ஒரு ஜோடி சிலிகான் உதடுகளாகும், அதில் உள்ள அழுத்த உணரிகள் மற்றும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,797,492 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.97 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,797,492 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,557,447 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,358,072 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,549 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதம்: ஜேர்மனியில் போராட்டத்தில் குதித்த ஆயிரக்கணக்கான மக்கள்

போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்து ஜேர்மனிய தலைநகர் பெர்லினில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேர்மனியில் போராட்டம் ஜேர்மனி, அமெரிக்காவுடன் சேர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்து ஜேர்மனிய தலைநகர் பெர்லினில் கிட்டத்தட்ட 10,000 மக்கள் சனிக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்த பலகையில், “பேச்சுவார்தை நடத்துங்கள், மோதலை அதிகரிக்க வேண்டாம், நம்முடைய போர் அல்ல” என்பது … Read more

போரை முடிவுக்கு கொண்டு வர 12 அம்ச அமைதி திட்டம்: சீனா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக சீனா அமைதி திட்டத்தை வெளியிட்ட பிறகு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் சீனாவுக்கு செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார். ஓராண்டு நிறைவு கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கிய நிலையில், தற்போது போர் தாக்குதல் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. போரை நிறுத்துவதற்கான எத்தகைய பேச்சுவார்த்தைகளையும் மேற்கத்திய நாடுகளோ, உக்ரைனோ அல்லது ரஷ்யாவோ முன்னெடுப்பதாக இதுவரை தெரியவில்லை. AP இந்நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைனிடம் இருந்து போர் நிறுத்தத்திற்கு … Read more

நான் தோல்வியடைந்த கேப்டன்! இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி வருத்தம்

நான் தோல்வியடைந்த கேப்டனாகவே கருதப்பட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.   கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்த போது அணியை சர்வதேச அளவில் முக்கிய இடத்திற்கு நகர்த்தினார். அதிலும் குறிப்பாக 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தி உள்ள விராட் கோலி, 24 உள்நாட்டு வெற்றிகளையும், 15 வெளிநாட்டு … Read more

அன்புஜோதி ஆசிரம விவகாரம்: 8 பேரை 3 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி!

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அன்புஜோதி ஆசிரம விவகாரத்தில், அந்த ஆசிரமத்தின் உரிமையாளர்களான ஜூபின் பேபி – மரியா தம்பதி உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில், வயதான தாஸ் என்பவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், ஜூபின் பேபி, மரியா, பீஜூமோகன், பூபாலன், முத்துமாரி, கோபிநாத், அய்யப்பன், சதீஷ் ஆகியோர் சிறையில் இருந்துவந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இவர்கள் எட்டுப் பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 23-ம் … Read more

15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்த 60 வயது ஆண்., பாகிஸ்தானில் பகீர் சம்பவம்

பாகிஸ்தானில் 15 வயது மைனர் சிறுமி கடத்தப்பட்டு 60 வயது நபருடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். சிறுமி பிரித்துவ மதத்தைச் சார்ந்தவர் என்பதும் குற்றம்சாட்டப்பட்ட நபர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர் என்பதும் இந்த சம்பவத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய பத்திரிகையான Bitter Winter அறிக்கையின்படி, டிசம்பர் 15 அன்று சிதாரா ஆரிஃப் (Sitara Arif) என்ற பெண் கடத்தப்பட்டார். ஆனால், இந்த வழக்கை விசாரிக்க பாகிஸ்தான் காவல்துறையை … Read more

26.02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 26 | ஞாயிற்றுக்கிழமை | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பிரபாகரனின் வீரச்சாவை போராளிகள் 13 வருடமாக ஏன் அறிவிக்கவில்லை? இறுதி போரில் நடந்த உண்மைகள்

போரில் மக்களை இழந்து, போராளிகளை இழந்து, குடும்பத்தையும் இழந்து தப்பி பிழைக்கும் தலைவர் இல்லை எங்கள் தலைவர் பிரபாகரன் என்று முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார். தயா மோகன் சிறப்பு பேட்டி தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் அவர்கள் அறிக்கை வெளியிட்டத்தை அடுத்து, விடுதலை புலிகள் படையின் தகவல் தொடர்பு பிரிவில் செயல்பட்டு வந்த தயா மோகன் ஐபிசி ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். மே 16ம் திகதி … Read more

காப்பகத்தில் 11 பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு; போலீஸ் விசாரணை!

திருச்சி ஸ்ரீரங்கம், மாம்பழச்சாலைப் பகுதியில் சாக்சீடு குழந்தைகள் இல்லம் செயல்பட்டுவருகிறது. இங்கு ஆதரவற்ற, கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டுவருகின்றனர். அந்த வகையில் இந்தக் காப்பகத்தில் மொத்தம் 32 குழந்தைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், நேற்றிலிருந்து காப்பகத்தில் இருந்த 11 குழந்தைகளுக்குத் தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இரவு மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து குழந்தைகள் காப்பக நிர்வாகிகள் உடனடியாக குழந்தைகளை ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட 11 குழந்தைகளும் ஒரு … Read more