ஆட்டோ மீது லாரி மோதல் 7 பள்ளி மாணவர்கள் பலி| Truck collides with auto, 7 school students killed

கோரார், சத்தீஸ்கரில், ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், பள்ளி மாணவர்கள் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் கோராரில் உள்ள பள்ளிக்கு, எட்டு மாணவர்கள் ஆட்டோவில் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த ஏழு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற ஒரு மாணவரும், ஆட்டோ டிரைவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பூபேஷ் … Read more

கனடாவில் குன்றின் அடியில் சடலமாக மீட்கப்பட்ட தந்தையும் மகளும்: அதிரவைக்கும் பின்னணி

கனடாவின் ஒன்ராறியோவில் குன்றின் அடியில் சடலமாக மீட்கப்பட்ட தந்தையும் மகளும் விவகாரத்தில், அது கொலை மற்றும் தற்கொலையாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியை பாதுகாக்க தவறிய ஒன்ராறியோவின் மில்டன் பகுதியில் அமைந்துள்ள குன்றின் அடியில் கடந்த 2020 பிப்ரவரி மாதம், நான்கு வயதேயான கீரா ககன் மற்றும் அவரது தந்தை ராபின் பிரவுன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். @ctvnews இந்த நிலையில், குறித்த வழக்கு தொடர்பில் வெளியான அறிக்கை ஒன்றில், தொடர் எச்சரிக்கை, ஆபத்து காரணிகள் … Read more

நீதிபதி விக்டோரியா கவுரி நியமன விவகாரம் திரிணமுல் எம்.பி.,க்கு அமைச்சர் பதில்| Ministers reply to Trinamool MP on Justice Victoria Gowri appointment issue

புதுடில்லி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டது தொடர்பாக திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர்கள் மற்றும் ராஜ்யசபா தலைவர் பதிலளித்தனர். சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி, சமீபத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் அவரை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்ற … Read more

டிஜிட்டல் கரன்சி மேலும் 9 நகரங்களில் அறிமுகம்| Digital Currency introduced in 9 more cities

மும்பை :ரிசர்வ் வங்கி, அண்மையில் ‘இ -ரூபாய்’ எனும் ‘டிஜிட்டல் கரன்சி’யைசில்லரை வாடிக்கையாளர்களுக்கு வெள்ளோட்டமாக அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது இத்திட்டத்தில் கூடுதலாக ஐந்து வங்கிகள் இணையும் என்றும், மேலும் 9 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ரபி சங்கர் கூறியதாவது:டிஜிட்டல் கரன்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், ரிசர்வ் வங்கி அவசரம் காட்டவில்லை. மாறாக, மெதுவாக இதை ஒரு நிலையான மாற்றமாக ஏற்படுத்த விரும்புகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் … Read more

மங்கும் நம்பிக்கை… துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து வெளிவரும் நடுங்கவைக்கும் புதிய தகவல்

துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று பலி எண்ணிக்கை 20,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை 20,000 நிலநடுக்கம் ஏற்பட்ட இந்த மூன்று நாட்களில் நூறுக்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் துருக்கியில் 17,134 பேர்களும் சிரியாவில் 3,317 பேர்களும் பலியாகியுள்ளதாக உறுதி செய்துள்ளனர். @reuters ஏற்கனவே, பலி எண்ணிக்கை 20,000 தாண்டும் என ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரித்திருந்தது. மேலும் … Read more

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்மார்ச் முதல் வாரத்திற்கு மாற்றம்| GST Council meeting shifted to first week of March

புதுடில்லி :ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், பிப்ரவரி 18ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது மார்ச் முதல் வாரத்திற்கு மாற்றப்படும் என தெரிகிறது. பல மாநில சட்டசபைகளில் பட்ஜெட் அமர்வுகள் நடைபெறுவதால், பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், அம்மாநிலங்களின் நிதியமைச்சர்கள் அல்லது பிரநிதிகள் நேரில் பங்கேற்பது கடினமாக இருக்கலாம் என்பதற்காக, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில், ஏற்கனவே வெளியிடப்பட்ட அமைச்சர்கள் குழுவின் அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்படுவது குறித்தும் … Read more

இன்னொரு ஐரோப்பிய நாடு… ரகசிய திட்டத்துடன் ரஷ்யா: அம்பலப்படுத்திய ஜெலென்ஸ்கி

விளாடிமிர் புடினின் ரஷ்யா இன்னொரு ஐரோப்பிய நாட்டை மொத்தமாக சிதைக்கும் ரகசிய திட்டத்துடன் களமிறங்க இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அம்பலப்படுத்தியுள்ளார். ரஷ்யாவின் அடுத்த இலக்கு மால்டோவா உக்ரைன் உளவுத்துறை ரஷ்யாவின் இந்த ரகசிய திட்டத்தை தெரிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் பேசிய உக்ரைன் ஜனாதிபதி, ரஷ்யாவின் அந்த ரகசிய திட்டம் தொடர்பில் அம்பலப்படுத்தினார். @PA மேலும், ரஷ்யாவின் அடுத்த இலக்கு மால்டோவா என்பதை உறுதி செய்துள்ள நிலையில், அங்குள்ள ஜனாதிபதியை தொடர்புகொண்டு இந்த … Read more

இன்று காலை விண்ணில் பாயுது எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட்! | SSLV – T2 rocket launched this morning!

சென்னை : ‘இஸ்ரோவின்’ புவி கண்காணிப்பு உட்பட மூன்று சிறிய செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று காலை, 9:18 மணிக்கு விண்ணில் பாய்கிறது.‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பாதுகாப்பு, தகவல் தொடர்பு போன்ற பயன்பாட்டிற்கான செயற்கைக்கோளை வடிவமைத்து, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்துகிறது. இரு ராக்கெட்களும், 1,000 கிலோ எடைக்கு மேல் உள்ள செயற்கைக்கோளை சுமந்தும் செல்லும் திறன் … Read more

ஹிமாச்சலில் தீ விபத்து ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி| 4 members of same family killed in fire accident in Himachal

உனா, ஹிமாச்சல பிரதேசத்தில் குடிசைகள் தீப்பற்றி எரிந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹிமாச்சலில் உள்ள ஹம்ப் நகரில், பீஹாரைச் சேர்ந்த பஹதேஷ் தாஸ், ரமேஷ் தாஸ் ஆகியோரின் குடும்பத்தினர், குடிசைகள் அமைத்து தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் இரவு ரமேஷ் தாசின் குடிசை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர். எனினும், இந்த விபத்தில் ரமேஷ் தாசின் மூன்று மகன்கள் … Read more

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஊதிய உயர்வு

கடும் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கும் நிலையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 86,584 பவுண்டுகள் இதனால் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஊதியத்தில் 2,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக பெற உள்ளனர். இந்த ஊதிய உயர்வானது, நடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை ஊதியத்தில் 2.9% அதிகரிக்கப்பட்டு, இனி ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 84,144 பவுண்டுகள் முதல் 86,584 பவுண்டுகள் வரையில் ஊதியமாக பெற உள்ளனர். @news.sky.com ஆனால் இந்த ஊதிய உயர்வானது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த … Read more