தகன இல்லங்கலில் குவியும் சடலங்கள்… மரண பீதியில் மக்கள்: வெளிவரும் அதிரவைக்கும் காட்சிகள்

சீனாவில் கொரோனா பாதிப்பால் இறந்த சொந்தங்களை உறவினர்களே தனியாக தகனம் செய்யும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்கு 1,000 சடலங்களுக்கு மேல் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தகன இல்லங்களில் நாளுக்கு 1,000 சடலங்களுக்கு மேல் எரியூட்டும் நிலை உருவாகியுள்ளதுடன், தற்போது இறுதிச்சடங்கு நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளது. @reuters பொதுவாக 40 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது 200 சடலங்கள் வரையில் எரியூட்டும் சூழல் … Read more

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு?

டெல்லி: அ.தி.மு.க.  பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய சட்ட ஆணையத்தின் அங்கீகாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது,. அதிமுக  இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை  எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், … Read more

தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

Doctor Vikatan: குழந்தையின் உடலில் தேமல்…. மற்ற பாகங்களுக்கும் பரவுமா?

Doctor Vikatan: என் 3 வயதுக் குழந்தைக்கு உடலில் சில இடங்களில் தேமல் போன்று இருக்கிறது. அது என்னவாக இருக்கும்? அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமா? தேமல் உடலில் பரவுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா நீங்கள் பொதுவாக தேமல் என்று குறிப்பிட்டுள்ள பிரச்னையில் நிறைய வகைகள் உண்டு. சில வகை தேமல் அலர்ஜி தன்மையைக் கொடுக்கும். ‘ஏடோபிக் டெர்மடைட்டிஸ்’ (Atopic dermatitis) எனப்படும் வகையில் இப்படி அலர்ஜி … Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்புப் பேருந்துகள்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், வரும் 12 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் சேவை தொடங்கும் எனவும் கூறினார்.

குவைத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு

சென்னை: குவைத்தில் இருந்து சென்னைக்கு, 158 பயணிகளுடன்,நேற்று இரவு 11.05க்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானம் மீண்டும் குவைத்தில் தரையிறக்கப்பட்டு, கோளாறை சரி செய்த பிறகு, 11:51 மணிக்கு புறப்பட்டது. இதனால், இன்று காலை 6:55 மணிக்கு சென்னை வர வேண்டிய அந்த விமானம், காலதாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாக்.,குக்கு ஆதரவாக பள்ளி மாணவன் கோஷம்| School student slogan in support of Pak

தானே, மஹாராஷ்டிராவில், நகராட்சி அலுவலக வாசலில் நடந்த போராட்டத்தில், 14 வயது சிறுவன் பாகிஸ்தான் வாழ்க என, கோஷமிட்டதை தொடர்ந்து, 19 பேரை போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தானே மாவட்டத்தின் பிவாண்டி என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில், கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளி நிர்வாகம் வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்து … Read more

ராகுல் காந்தி – கமல்ஹாசன் நெருக்கம்… பின்னணியில் நாடாளுமன்றத் தேர்தல் கணக்குகளா?!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சமீபகாலமாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நெருக்கம் காட்டிவருகிறார். இந்த நெருக்கத்தின் பின்னணியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கணக்குகள் இருக்கின்றனவா? பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்! கடந்த டிசம்பர் 24 அன்று, டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கைகோர்த்து நடந்தார் கமல்ஹாசன். அன்று மாலை நடைபயணம் முடிந்த பிறகு டெல்லி செங்கோட்டை அருகே பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் பேசிய கமல், “இந்தக் … Read more

2022-ல் நான்கு லட்சம் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கிய கனடா!

கனடா 2022-ல் 437,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியை வழங்கியுள்ளது. கனடா கடந்த ஆண்டு 437,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கியதன் மூலம் புதிய குடியேற்ற சாதனையை படைத்துள்ளது என்று கனேடிய அரசாங்கம் செவ்வாயன்று அறிவித்துள்ளது. 4.3 லட்சம் பேருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி 2022-ஆம் ஆண்டில் 431,645 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க அரசாங்கம் இலக்கை நிர்ணயித்த கனேடிய அரசாங்கம், அந்த இலக்கை அடைந்து கனேடிய வரலாற்றில் அதிக மக்களுக்கு குடியிருப்பு … Read more

ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு எச்சரிக்கை…

கஜகஸ்தான்: ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு நாடு திரும்ப கூடாது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீராங்கனை சாரா காதெம் (வயது 25). அண்மையில் கஜகஸ்தான் நாட்டின் அல்மேட்டி நகரில் நடந்த சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் சாரா காதெம் கலந்து கொண்டு விளையாடினார். அவர் விளையாடும்போது, பர்தா அணியவில்லை என கூறப்படுகிறது. ஈரான் நாட்டு அரசு சட்டத்தின்படி, ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. … Read more