ஏழைகளுக்கான உணவுத் திட்டம் குறைப்பு: மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: ஏழைகளுக்கான உணவுத் திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, உணவு தானியங்களை இலவசமாக வழங்குவது இந்திய மக்களுக்கு அளிக்கும் பரிசு அல்ல.. அது அவர்களது உரிமை என்பதை மோடி அரசுக்கு நினைவூட்டுகிறேன் என தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,  தேசிய உணவு பாதுகாப்புச் சட்டப்படி, பிரதமரின் ஏழைகளுக் கான உணவுத் திட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாக 10 கிலோ … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்..!!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். திருமகனை இழந்து வாடும் கட்சியினருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

1000 கிலோ எடையில் ராட்சத திருக்கை மீன்… ரூ.61000 க்கு விலை போனது!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து சுமார் 300 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. இது தவிர 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழில் ஈடுபட்டு வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 15 முதல் 20 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர் ரக மீன்கள் அதிகமாக கிடைக்கும். மீன் ஏலக்கூடத்தில் வைக்கப்பட்ட திருக்கை … Read more

செய்தியாளர் சந்திப்பின்போது வாக்குவாதம் – காயத்ரி ரகுராமுக்கு வாழ்த்து – ரபேல் வாட்சை கழற்றி கொடுத்த அண்ணாமலை…

சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, யுடியூப் சேனலை சேர்ந்த ஒருவர் எழுப்பிய கேள்வியால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து,  ரபேல் வாட்சை செய்தியாளர்களிடம் கழற்றி கொடுத்த அண்ணாமலை.. யூடியூப் சேனலுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது? என மிரட்டும் தொனியில் பேசினார். இது செய்தியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராமுக்கு வாழ்த்து தெரிவித்தார். சென்னை திநகரில் உள்ள மாநில பாஜக தலைமையகமான கமலாலயத்தில் … Read more

இடைக்கால பொதுச் செயலாளர் தேர்தல் மூலம் பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டாரா?: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

டெல்லி: இடைக்கால பொதுச் செயலாளர் தேர்தல் மூலம் பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டாரா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆம், பொதுக்குழு உறுப்பினர்களால் பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் என பழனிசாமி தரப்பு பதில் அளித்தது. உண்மையில் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும் என பன்னீர்செல்வம் தரப்பு வாதிட்டது.

இருமல் டானிக் குழந்தைகளுக்கு உயிரிழப்பு வரை ஏற்படுத்துமா? மருத்துவர் விளக்கமும் எச்சரிக்கையும்!

சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டில், இருமல் டானிக் பருகிய குழந்தைகள் மரணமடைந்திருப்பதாக வந்திருக்கும் செய்தி அனைவரையும் திடுக்கிடச் செய்துள்ளது. இதற்கு முன்பு இந்தோனேசியாவிலும், ஆப்பிரிக்க நாடான கானாவிலும் இதேபோல இருமல் டானிக் உட்கொண்ட குழந்தைகள் இறந்த துயர் சம்பவத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது. இதில் கானா நாடு, அதன் ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, டானிக் அருந்தாத குழந்தைகளும் இறந்துள்ளதால் இருமல் டானிக்கை உறுதியாகக் குற்றம் சாட்ட முடியாது என்று கூறியிருக்கிறது. குழந்தைகள் இறப்புக்குக் காரணமாகக் குற்றம்சாட்டப்படும் இருமல் … Read more

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் உயிர் தப்பிய பிரான்ஸ் ஊடகவியலாளர்: ஒரு அதிர்ச்சி வீடியோ

உக்ரைனில் நேரலையில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குத் தப்புவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.  நேரலையில் வெடித்த ஏவுகணை பிரான்ஸ் ஊடகவியலாளரான Paul Gasnier என்பவர் உக்ரைனிலிருந்து நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, திடீரென அவரது தலைக்குப் பின்னால் ஏவுகணை ஒன்று விழுந்து வெடிப்பதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம். சட்டென Paul தலைகுனிந்தபடி அங்கிருந்து ஓட, தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் அதிர்ச்சியடைகிறார். Oh God, the moment … Read more

திருமகன் ஈவெரா மரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானார். அவரது மறைவுக்கு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 45. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் … Read more