நம்ம ஊரு திருவிழா-வுக்கு அனைவரும் வாருங்கள்” – முதல்வர் ஸ்டாலின் அழைப்பு – வீடியோ

சென்னை: “உலகமே வியந்து பார்க்கும் நம்ம ஊரு திருவிழா-வுக்கு அனைவரும் வாருங்கள்” என முதல்வர் ஸ்டாலின் வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அரசின் கலை, பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2023  ஜனவரி 13 முதல் 17 வரை நடைபெற உள்ளது.  இந்தவிழாவினை  முதல்வர் ஸ்டாலின் 13ஆம் தேதி தீவுத்திடலில் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, 14ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள பூங்கா மற்றும் … Read more

குற்றாலம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய ஆயிரப்பேரியைச் சேர்ந்த கனகராஜ், பாட்டப்பத்து ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 50 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

புத்தாண்டு இரவில் மற்றொரு சம்பவம்: நொய்டாவில் கார் மோதி கல்லூரி மாணவி மூளைச்சாவு| Another incident on New Years night: College student brain dead after being hit by a car in Noida

நொய்டா: கடந்த டிச.,31ம் தேதி நொய்டாவில் கார் மோதி விபத்துக்குள்ளான மூன்று மாணவிகளில், சுவீட்டி குமாரி என்ற மாணவி மூளைச் சாவு அடைந்துள்ளார். இந்த சம்பவம் மாணவியின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக, கடந்த டிச.,31ம் தேதி, நொய்டாவின் பீட்டா 2 பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே, ஜிஎன்ஐஓடி கல்லூரியைச் சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த கார் மூன்று மாணவிகள் மீது மோதியது. இதில் … Read more

தூக்கத்தில் பேசுவது, நடப்பது; ஏன், தீர்வு என்ன? – மருத்துவ விளக்கம்

நம்மில் சிலருக்கு தூக்கத்தில் பேசுகிற பழக்கம் இருக்கலாம். அதே நேரம், தான் தூக்கத்தில் பேசியது பெரும்பாலும் சம்பந்தப்பட்ட நபருக்கே நினைவில் இருப்பதில்லை. தூக்கத்தில் பேசுவதை பலரும் பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், சிலருக்கு அது குறித்த கேள்விகள், சந்தேகங்கள் இருக்கலாம். தூக்கத்தில் பேசுகின்ற பழக்கம் கவனம் கொடுக்க வேண்டிய பிரச்னையா என, Interventional Pulmonary and Sleep Medicine நிபுணர் பென்ஹர் ஜோயல் ஷாத்ராக்கிடம் கேட்டோம். பென்ஹர் ஜோயல் ஷாத்ராக் உங்கள் உறக்கம் சரிதானா? “மனிதர்களாகிய … Read more

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு ராம் மந்திர் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் மூத்த உறுப்பினர் சுவாமி கோவிந்த்தேவ் கிரி பாராட்டு!

லக்னோ: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை அயோத்தியின் ராம ஜென்மபூமி கோவிலின் தலைமை அர்ச்சகர்  ஆச்சார்யா மஹந்த் சத்யேந்திர தாஸ் நேற்று பாராட்டிய நிலையில், இன்று அயோத்தி ராம் மந்திர்  அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் மற்றும் சுவாமி கோவிந்த் தேவ் கிரி ஆகியோர் பாராட்டியுள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குமரி முதல் காஷ்மீர் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தியின்  யாத்திரை தற்போது உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று பிற்பகல்  உத்தரப்பிரதேசத்தின் … Read more

டெல்லியில் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் தகவல்

டெல்லி: டெல்லியில் பனிமூட்டம் காரணமாக பெரும்பாலான ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடுமையான குளிர், அடர்ந்த மூடுபனி காரணமாக டெல்லி நோக்கி வரும் ரயில்கள் 4 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இயக்கப்படுகிறது. சூப்பர் பாஸ்ட், பிரிமீயம் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

'லேசான வெயில் அடிச்சாலே போதும்; மின்சாரம் கிடைக்கும்' பிரதமர் பாராட்டிய விவசாயியின் தோட்டம் விசிட்!

பிரதமர் பாராட்டிய விவசாயி… காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எழிலன், ‘பிரதம மந்திரி குசும் யோஜனா’ திட்டத்தின்கீழ் மானியம் பெற்று சூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட் அமைத்து, விவசாயம் செய்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எழிலன் சூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட்டை விவசாயத்துக்கு பயன்படுத்தி வரும் முறையை குறிப்பிட்டு பாராட்டினார். ஒரு பனிபொழியும் காலையில் விவசாயி எழிலனை காணச் சென்றோம். மீன் குளம் … Read more

போரில் வெற்றி பெற பிரித்தானியாவுடன் ஒப்பந்தம்: ரிஷியுடன் விவாதித்தபின் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ள தகவல்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்குடனான விவாதத்துக்குப்பின், போரில் வெற்றியை அடைய, தீவிர முயற்சிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஜெலன்ஸ்கி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்குடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் இருவரும் விவாதித்ததாகவும், இந்த ஆண்டில் வெற்றியை அடைவதற்காக முயற்சிகளை தீவிரமாக்க இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அது தொடர்பில் திடமான முடிவுகளை எடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். Together with … Read more

4வது கட்சி: கட்சி கட்சியாக தாவிய மதுரை டாக்டர் சரவணன் எடப்பாடி பழனிச்சாமியிடம் தஞ்சம்!

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம் எல் ஏ மருத்துவர் சரவணன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். இவர் 4வது முறையாக கட்சி மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக இருந்து வந்த முன்னாள் எம்எல்எ டாக்டர் சரவணன், ஏற்கனவே மதிமுக,  திமுகவில் இருந்தவர். அங்கு பிடிக்காத நிலையில், பின்னர் பாஜகவில் இணைந்தார். அங்கும் கட்சி தலைமையிடம் ஒத்துவராத … Read more

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க தமிழ்நாடு அரசு குழு அமைத்ததற்கு ஜவாஹிருல்லா நன்றி..!!

சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க தமிழ்நாடு அரசு குழு அமைத்ததற்கு ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு குழு அமைத்ததற்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்துக்கொண்டார். தமிழக அரசின் நடவடிக்கையால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தடைபடாமல் இருக்கும் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.