மின்னல் வேகத்தில் புதிய தேர்தல் ஆணையர் நியமனம்: மத்தியஅரசிடம் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரி கேள்வி…

சென்னை:  இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக அருண் கோயல் நியமனம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்த நிலையில், புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள், மின்னல் வேகத்தில் நியமனம் நடைபெற்றுள்ளது, எதற்கு இந்த அவசரம்  என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில், ஒரு தலைமை … Read more

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடந்த முறைகேடு வழக்கு: ஊழல் கண்காணிப்புத்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் ஊழல் கண்காணிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 – 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் பணி நியமனங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சத்தியமூர்த்தி பவன் மோதல் விவகாரம்; ரூபி மனோகரன் காங்கிரஸிலிருந்து தற்காலிகமாக நீக்கம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, தலைவர் பதவிக்கான போட்டி கட்சியில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இது தற்போது உட்கட்சிப்பூசலாகவும் மாறியிருக்கிறது. அதாவது, கடந்த 15-ம் தேதியன்று, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், கட்சியின் பொருளாளரும், எம்.எல்.ஏ-வுமான ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டபோது, அவர்களுக்கும் அழகிரியின் ஆதரவாளர் ரஞ்சன் குமார் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கே.எஸ் அழகிரி அதைத் தொடர்ந்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, … Read more

500 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டது! நீதிமன்றத்தை அதிரவைத்த பொலிஸ் அறிக்கை

உத்தர பிரதேசத்தில் 500 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை எலி சாப்பிட்டுவிட்டதாக காவல்துறை நீதிமனறத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மதுரா காவல்துறை சிறப்பு NDPS (போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டம் (1985)) நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோவுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதாகக் கூறியுள்ளது. ஷெர்கர் மற்றும் நெடுஞ்சாலை காவல்நிலையத்தில் இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 386 மற்றும் 195 கிலோ கஞ்சா பறிமுதல் … Read more

மருத்துவ துறையில் ஊதிய விகிதங்களை திருத்தியமைப்பதற்காக 17 பேர் கொண்ட குழு அமைப்பு! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்களில் வேலை வாய்ப்புக்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை திருத்தியமைப்பதற்காக அரசுக்கு ஆலோசனைகளை வழங்க 17 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மருத்துவம்னைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்களில் வேலைவாய்ப்புக்கான குறைந்த அளவு ஊதிய விகிதங்களை திருத்தி அமைப்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்க பின்வரும் உறுப்பினர்களை கொண்ட ஒரு … Read more

போலி பில் போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவு துறை பதிவாளர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தல்

சென்னை : போலி பில் போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை பதிவாளர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார். மேலும், முறைகேடுகளை கண்காணிக்க தவறும் சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ரேசன் கடைகளில் பொருள்கள் வாங்காமல் வாங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.  

நாக்கிற்கு பதில் பிறப்புறுப்பில் ஆபரேஷன்? – போலீஸில் புகார்… மதுரை அரசு மருத்துவமனை சொல்வதென்ன?!

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்ததாக பெற்றோர் போலீஸில் புகார் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு மருத்துவமனை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்- கார்த்திகா தம்பதியினருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது குழந்தைக்கு நாக்கு வளர்ச்சி சரியாக இல்லாததால் சிகிச்சைக்காக அப்போதே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். … Read more

2022 டிசம்பர் மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள் சில…

டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் கூடவே சில முக்கிய மாற்றங்களையும் கொண்டு வருகிறது. சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, ஒரு முக்கிய மாற்றம், டிசம்பர் மாதத்திற்காக கோவிட் கட்டுப்பாடுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்பது ஒரு நல்ல செய்தி. சுவிட்சர்லாந்தில், டிசம்பர் மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்விருக்கின்றன என்பதை திகதிவாரியாக பார்க்கலாம். டிசம்பர் 1: மருந்துகள் விலை குறைப்பு பெடரல் பொது சுகாதார அலுவலகம், 300க்கும் அதிகமான மருந்துகளின் விலையை 10 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு டிசம்பர் … Read more

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 25 பசுமை பள்ளிகள்! தமிழக அரசு

சென்னை: முதலமைச்சரின் பசுமைப் பார்வையை செயல்படுத்த 25 பசுமைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.  சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தமிழகத்தில் உள்ள 25 பள்ளிகளை தேர்வு செய்து பசுமை பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கடந்த  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பசுமைப் பள்ளிக்கூடம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை … Read more

அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு முடித்துவைப்பு: ஐகோர்ட் கிளை

மதுரை : அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை ஐகோர்ட் கிளை முடித்துவைத்தது. நிலத்தை மோசடியாக பத்திர பதிவு செய்ய வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.