திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மகா தீபம், பெளர்ணமியை முன்னிட்டு டிசம்பர் 6,7 தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

ரவீந்திர ஜடேஜாவின் அக்கா Vs மனைவி… குஜராத் ஜாம்நகர் தொகுதியில் வெல்லப்போவது யார்?!

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என நாட்டின் மிக முக்கியத் தலைவர்கள் குஜராத்தில் முகாமிட்டிருக்கின்றனர். தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். சூடுபிடித்திருக்கும் குஜராத் தேர்தல் களத்தில், ஸ்டார் வேட்பாளராக மாறியிருக்கிறார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா. ஜாம்நகர் (வடக்கு) தொகுதியில், பா.ஜ.க சார்பில் போட்டியிடும் அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது? 2019-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்த ரிவாபா … Read more

சென்னை கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் காலமானார்

சென்னை: சென்னை கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் காலமானார். சென்னை மாநகராட்சியின் 165-வது வார்டு கவுன்சிலரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் உடல் நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

கும்பகோணம் மவுனசாமி மடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 4 சிலைகள் மற்றும் ஒரு ஓவியம் மீட்பு

கும்பகோணம்: கும்பகோணம் மவுனசாமி மடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 4 சிலைகள் மற்றும் ஒரு ஓவியம் மீட்கப்பட்டுள்ளது. மடத்தின் நிர்வாகி பழமையான சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் சிலைகள் சிக்கின.

ஆண்கள் சுற்றி நிற்க…மைதானத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட கொடூர தண்டனை: தாலிபான்கள் அத்துமீறல்

ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் மைதானத்தில் 3 பெண்கள் உட்பட 12 பேருக்கு தாலிபான்கள் கசையடி தண்டனை வழங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாலிபான் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினார்கள், இதையடுத்து அங்கு இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் தாலிபான்கள் நிறைவேற்றி வருகின்றனர். தாலிபான்களின் ஆட்சிக்கு கீழ் பெண்களின் சுதந்திரம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது, பெண்களின் கல்வி, ஆடை சுதந்திரம், போன்ற பலவற்றிலும் தாலிபான்கள் கட்டுப்பாடுகளை விதித்து அடக்குமுறையை கையாண்டு வருகின்றனர். Taliban … Read more

நடிகர் கமல்ஹாசன் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் கமல்ஹாசன் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் உடல் நல பாதிப்பால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சலும் இருமலும் இருந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் கமல்ஹாசன் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

நவ-24: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 -க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

காசிவிஸ்வநாதர் திருக்கோயில், சிவகாசி

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அமைந்துள்ளது. குற்றால மலைச்சாரலை ஒட்டிய தென்காசியில் சிவன் கோயில் ஒன்றைக்கட்டினான் அரிகேசரி பராங்குச மன்னன். அங்கு பிரதிஷ்டை செய்ய, காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வர, தன் மனைவியுடன் சென்றான். கங்கையில் புனிதநீராடி ஒரு காராம் பசு மீது இலிங்கத்தை ஏற்றிக்கொண்டு தென்காசி சென்றான். பல நாள் பயணம் செய்து வரும் வழியில், தற்போது சிவகாசி நகரம் உள்ள இடத்தில் தங்கினான். அப்போது சிவகாசி வில்வனக் காடாக … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,630,226 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.30 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,630,226 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 644,255,798 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 623,112,172 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,214 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.