தினமும் சேலை, இரவு நேர பார்ட்டி.. ஒப்பந்தம் போட்டுத் திருமணம் செய்து கொண்ட ஜோடி: வைரல் வீடியோ!

திருமணங்கள் நடைபெறும் விதம் சமீப காலங்களில் மிகப்பெரிய மாற்றங்களை அடைந்துள்ளது. கூடவே, திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் துணையின் மீது வைக்கும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. திருமணத்தின் ஆகப்பெரிய உறுதிமொழியே ‘ஒருவருக்கு ஒருவர் துணையாக, வாழ்நாள் முழுதும் இன்ப துன்பங்களில் ஒன்றாகக் கடப்போம்’ என்பதே. ஆனால் இங்கு ஒரு திருமண ஜோடி போட்டுள்ள ஒப்பந்தம் பலரையும் வியக்க வைத்துள்ளது. ஒப்பந்தம் விஜய் மற்றும் சிம்ரன் நடித்த ‘பிரியமானவளே’ திரைப்படத்தில் அக்ரிமென்ட் கல்யாணத்தைப் பார்த்திருப்போம். அதேபோல் அசாமை சேர்ந்த சாந்தி … Read more

இனி இந்த குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும்… முக்கிய முடிவெடுத்த நாடு

தொடர் பாலியல் குற்றவாளிகளுக்கு இனி இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என தாய்லாந்து நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தாய்லாந்தில் பாலியல் குற்றவாளிகள், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டும், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு இரசாயன முறைப்படி ஆண்மை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், நீண்ட கால சிறை தண்டனை விதிப்பு இந்த வழக்கில் இனி தாய்லாந்தில் இருக்காது என்றே கூறப்படுகிறது. குறித்த நடைமுறைக்கு இரண்டு மருத்துவர்களின் ஒப்புதல் பெறப்படும் எனவும், தொடர்புடைய குற்றவாளி 10 ஆண்டுகள் கண்காணிக்கப்படுவார் … Read more

தமிழ்நாட்டில் இன்று 2280 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 755 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 755, செங்கல்பட்டில் 382, திருவள்ளூரில் 133 மற்றும் காஞ்சிபுரத்தில் 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 116, திருநெல்வேலி 75, தூத்துக்குடி 48, சேலம் 52, கன்னியாகுமரி 51, திருச்சி 56, விழுப்புரம் 23, ஈரோடு 33, ராணிப்பேட்டை 24, தென்காசி 34, மதுரை 47, திருவண்ணாமலை 25, விருதுநகர் 38, கடலூர் 21, தஞ்சாவூர் 19, திருப்பூர் 24, … Read more

திராவிடம் தொடர்பான ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம்

சென்னை: திராவிடம் தொடர்பான ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் திமுக அரசுக்கு எதிராக உள்நோக்கத்துடன் ஆளுநர் பேசுவதாகவும் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். ஆளுநரின் பதவிக்கு இழுக்கு நேரிடும் வகையில் சர்ச்சைக்குரிய கொள்கைகள் பற்றி ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசுவதாக கீ.வீரமணி சாடியுள்ளார்.

இந்தியாவில் தூள் கிளப்பி வரும் அமெரிக்க நிறுவனம்.. எப்படி தெரியுமா?

இந்தியாவில் சமீபத்திய காலமாக வெளி நாட்டு உணவுகள் மீதான மோகம் என்பது அதிகரித்து வருகின்றது. அதற்கு உதாரணமே இந்த பதிவு. கடந்த ஜூன் 11, 2022ல் முடிவடைந்த 12 வாரங்களுகளில் இந்திய வணிகத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதாக உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான பெப்சிகோ தெரிவித்துள்ளது. ஸ்னாக்ஸ் விற்பனையில் ரூ.1.4 கோடி வருமானம்.. 48 வயதில் அசத்தும் கீதா.. வயது எப்போதும் தடையில்லை..! 2வது காலாண்டில் வளர்ச்சி இதன் இந்திய வணிகம் மட்டும் அல்ல, … Read more

`மோடி தலைமையின் கீழ் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்': நிதி ஆயோக்கின் புதிய சி.இ.ஓ பரமேஸ்வரன்!

மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி மத்திய திட்டக்குழு உருவானது. 2014 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி, `மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய குழு அமைக்கப்படும்’ என்று அறிவித்தார். அதன்படி திட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பை 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி மத்திய … Read more

எதிரி செயற்கைக்கோள்களை குருடாக்கும் ரஷ்யாவின் லேசர் ஆயுதம்!

எதிரி நாட்டின் செயற்கைக்கோள்களை குருடாக்கும் அளவிலான மேம்பட்ட லேசர் ஆயுதங்களை ரஷ்யா உருவாக்கி வருகிறது. எதிரி செயற்கைக்கோள்களை ஏமாற்றும் “கலினா” (Kalina) எனும் லேசர் தொழில்நுட்பத்தை ரஷ்யா உருவாக்கி வருகிறது. வடக்கு காகசஸில் உள்ள ரஷ்ய விண்வெளி கண்காணிப்பு தளத்தில் கலினா என்ற புதிய லேசர் அமைப்பு நிறுவுவபடுவதாக உலகளாவிய ஊடக அறிக்கைகள் மற்றும் விண்வெளி இதழ்களின் வலுவான அறிகுறிகள் சுட்டிக்காட்டுகின்றன. இது ரஷ்ய எல்லையை கடந்து செல்லும் வெளிநாட்டு இமேஜிங் செயற்கைக்கோள்களின் ஆப்டிகல் அமைப்புகளை குறிவைக்கும். … Read more

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணி பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா, 6 விக்கெட்களை வீழ்த்தினார். 111 … Read more

சென்னை சென்ட்ரல்- மும்பை விரைவு ரயில் நேரம் மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரல்- மும்பை விரைவு ரயில் (12164) நேரத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்- மும்பை விரைவு ரயில் இன்று மாலை 6.20-க்கு பதிலாக இரவு 7.30 மணிக்கு புறப்படும். இணை ரயிலின் தாமத வருகையால் சென்னை சென்ட்ரல்- மும்பை விரைவு ரயில் ஒரு மணி 10 நிமிடம் தாமதமாக இயக்க உள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி களமிறக்கிய புதிய தலைவர் மீனா.. யார் இவர் தெரியுமா..?!

இந்திய வங்கி மற்றும் நிதியியல் சேவை துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் பல பரிமாணங்களில் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இந்தக் கடுமையான போட்டி மிகுந்த சந்தையில் ஏற்கனவே தனியார் வங்கிகள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் வேளையில் அதீத முதலீட்டு உடன் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் களமிறங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் கரூர் வைஸ்யா வங்கி தான் இருக்கும் இடத்தை வலிமைப்படுத்திக்கொண்டு அடுத்தகட்டத்திற்கு நகர்வது குறித்துத் திட்டமிட்டுப் புதிதாக ஒருவரைத் தலைவராக நியமித்துள்ளது. 4 … Read more