திராவிட மாடல் பயிற்சி கூட்டம்: மேயரை புறக்கணித்தாரா திமுக எம்எல்ஏ? – சேலம் உட்கட்சிப் பூசல்!

சேலம், அம்மாபேட்டை கொங்கு திருமண மண்டபத்தில் தி.மு.க., இளைஞரணி சார்பாகத் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான இராஜேந்திரன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்திற்கு தி.மு.க-வின் கழக கொள்கைப்பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர். மாநகர எல்லையில் கூட்டம் நடைபெறுவதால், தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர்கள், மாநகர கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் அந்த வகையில் மாநகராட்சி … Read more

நீட் விலக்கு மசோதா குறித்து இப்போதைக்கு தகவல் தர முடியாது! ஆர்டிஐ கேள்விக்கு கவர்னர் மாளிகை பதில்…

சென்னை: தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா குறித்த தகவல் பெறும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) எழுப்பிய  கேள்விக்கு, இப்போதைக்கு தகவல் தர முடியாது ஆளுநர் மாளிகை பதில் தெரிவித்து உள்ளது. தமிழகஅரசு சட்டமன்றத்தில் இயற்றி நீட் விலக்கு மசோதா உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியும், அமைச்சர்கள் மூலமாகவும், தமிழகஅரசின் மசோதாக்களுக்கு விரைந்து அனுமதி வழங்கும்படியும் வலியுறுத்தி வருகிறது. … Read more

சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. மந்தைவெளி, ஆர்.ஏ. புறம், மயிலாப்பூர், அசோக் நகர், கே.கே. நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. தி. நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

ஓலா மீது அபராதம் விதித்த ஆர்பிஐ.. எதற்காக தெரியுமா..?!

எலக்ட்ரிக் வாகன விற்பனையில் மோசமான வர்த்தக நிலையை எதிர்கொண்டு இருக்கும் ஓலா நிறுவனம் சமீபத்தில் நிதி நெருக்கடி காரணமாகச் சமீபத்தில் துவங்கிய இரு முக்கியமான வர்த்தகப் பரிவான ஓலா கார்ஸ், ஓலா டேஷ் ஆகியவற்றை மொத்தமாக மூடியது மட்டும் அல்லாமல் செலவுகளைக் குறைக்க 700 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதற்கான பணிகளில் உள்ளது. இந்த நிலையில் ஆர்பிஐ ஓலா நிறுவனத்தின் மீத வித்துள்ள அபராதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். புள்ளி கோலத்தில் மாதம் … Read more

தூத்துக்குடி: நிலத் தகராறா… முன்விரோதமா? – 3 பேர் கும்பலால் அரங்கேறிய கொலை; போலீஸ் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ராணி மகராஜபுரத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர், நாடார் மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து மரிய நிர்மலாதேவி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மரிய நிர்மலாதேவி, ஆறுமுகநேரி பேரூராட்சியில் 14-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். சரவணக்குமருக்கு அம்மன்புரத்தில் சொந்தமாக நிலங்கள் … Read more

இலங்கைக்கு போப்பாண்டவரிடமிருந்து ஒரு செய்தி…

இலங்கைத் தலைவர்கள் ஏழை மக்களின் கதறலையும் மக்களுடைய தேவைகளையும் அலட்சியப்படுத்தவேண்டாம் என போப்பாண்டவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை போப்பாண்டவர் இலங்கைக்காக வெளியிட்ட ஒரு செய்தி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இலங்கைத் தலைவர்கள் ஏழை மக்களின் கதறலையும் மக்களுடைய தேவைகளையும் அலட்சியப்படுத்தவேண்டாம் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. புனித பீற்றர்ஸ் சதுக்கத்தில் உரையாற்றிய போப்பாண்டவர், அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக தொடர்ந்து அவதியுறும் இலங்கை மக்களுடன், தானும் நிற்பதாக தெரிவித்தார். … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு….

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை அவர் டிவிட் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். தமிழக முதலமைச்சர் இன்று செம்மஞ்சேரி பகுதியில்  ரூ.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் & வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்தார். மேலும் மழை வெள்ளப் பாதிப்பினைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரி களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனால் முதல்வர் ஸ்டாலின் உடல் சோர்வையடைந்தது- … Read more

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களில் ஆட்டமிழந்தது

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களில் ஆட்டமிழந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் பும்ரா 6, முகமது ஷமி 3, பிரஷித் கிருஷ்ணா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 30, டேவிட் வில்லே 21 ரன்கள் எடுத்துள்ளார்.

4 உருளைகிழங்கு சிப்ஸ் 15,800 ரூபாயா.. ஆடிப்போன கஸ்டமர்..!

உருளைகிழங்கு என்பது இந்தியர்களுக்கு பிடித்தமான ஒன்று. அதிலும் உருளைகிழங்கில் செய்யப்படும் கிரிஸ்பியான பிரெஞ்சு பிரைஸ் என்பது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரையில் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாகும். பொதுவாக பீட்சா பர்கருடன் சேர்த்து உண்ணும் இந்த பிரெஞ்சு பிரைஸானது விலை சற்று அதிகம் தான். ஆனால் ஒரு பிளேட் பிரெஞ்சு பிரைஸ் 15,800 ரூபாய் என்பது கொஞ்சம் ஓவர் தான். அதெல்லாம் சரி, இந்தளவுக்கு விலை உள்ளதே அப்படி என்ன ஸ்பெஷல்? எதனால் இவ்வளவு விலை? முன்கூட்டியே … Read more