மேய்ச்சல் தொழிலில் சந்திக்கும் பிரச்னைகள்… பாதுகாப்புக்கு டெல்லியில் நடந்த கருத்தரங்கு.!

ஒரு பக்கம் வறள் புல்வெளிகள் சுருங்கி வர இன்னொரு பக்கம் விளைநிலங்களும் சம அளவில் சுருங்கி வருகின்றன. விரைவாக நடைபெற்று வரும் நகரமயமாக்கலும் மேய்ச்சல் நிலங்களை சுருக்கி விட்டன. இப்படி பல்வேறு காரணங்களால் கால்நடைகளை வாழ்வாதாரமாக கொண்டு மேய்ச்சல் தொழில் செய்பவர்களின் நிலைமை கேள்விக்குறியாகி விட்டது. மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வருவோரின் பிரச்னைகள் குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டுள்ளது. கீதாரிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தேசிய கருத்தரங்கு சுருங்கிவரும் தமிழகத்தின் மேய்ச்சல் … Read more

மகரத்திற்கு திரும்பும் சனி! கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் தெரியுமா? நாளைய ராசிப்பலன்

சனி பகவானின் அதிசார பெயர்ச்சியாக மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு ஏப்ரல் 29ம் திகதி பெயர்ச்சி ஆனார். இந்நிலையில் அவர் மீண்டும் வக்ர பெயர்ச்சியாக ஜூலை 12ம் தேதி மகரத்திற்கே திரும்ப உள்ளார். இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் என இங்கே பார்ப்போம்.  உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW           மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் … Read more

சீனர்களுக்கு விசா வழங்கிய விவகாரம்: ப.சிதம்பரம் சென்னை வீட்டில் சிபிஐ மீண்டும் சோதனை…

சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் சென்னை  வீட்டில் இன்று  சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகிறார்கள் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தபோது மத்திய நிதிஅமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் இருந்தார். அப்போது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல குற்றசாட்டுகள் உள்ளன. அதுதொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த … Read more

ரணில் விக்ரமசிங்கே இல்லத்துக்கு தீ வைப்பு

கொழும்பு: இலங்கையில் உள்ள ரணில் விக்ரமசிங்கே இல்லத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் ரணில் வீட்டில் நுழைந்து பொருட்களை அடித்து உடைத்தனர். இலங்கையில் புரச்சியில் இறங்கியுள்ள மக்களின் ஆவேசம் இன்னும் தணியவில்லை.

“பாஜக-வுடன் கூட்டணி வைக்கும்படி பலமுறை உத்தவ் தாக்கரேவை கேட்டுக்கொண்டேன்” – ஏக்நாத் ஷிண்டே விளக்கம்

மகாராஷ்டிராவில் புதிய அரசு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பதவியேற்றுள்ளது. புதிய அரசு பதவியேற்றதை எதிர்த்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் டெல்லி சென்று நேற்று மகாராஷ்டிரா அரசியல் நிலவரம், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு இன்று பாஜக தலைவர் ஜெ.பி நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை … Read more

கதிரியக்க சுனாமிகளை ஏற்படுத்தும் மிக ஆபத்தான நீர்மூழ்கிக் கப்பல்: ரஷ்யா அதிரடி

ரஷ்ய கடற்படையின் மிக ஆபத்தான, கதிரியக்க சுனாமிகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த கப்பலில் பள்ளிப் பேருந்தின் அளவு கொண்ட அணு ஆயுத டார்பிடோக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், மிக ஆபத்தான கதிரியக்க சுனாமிகளை அதனால் ஏற்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது. 184 மீற்றர் நீளம் கொண்ட குறித்த நவீன நீர்மூழ்கிக் கப்பலானது கடந்த 30 ஆண்டுகளாக ரஷ்யா தீவிர சிரத்தையுடன் தயார்படுத்தி வந்துள்ளது. குறித்த கப்பலில் 80 அடி நீளம் கொண்ட 6 … Read more

தமிழ்நாட்டில் இன்று 2671 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 844 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று – மற்றும் நேற்றைய பாதிப்பு அடைப்பு குறிக்குள் சென்னையில் 844 (939), செங்கல்பட்டில் 465 (474), திருவள்ளூரில் 161 (191) மற்றும் காஞ்சிபுரத்தில் 80 (87) பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 118 (131), திருநெல்வேலி 112 (87), தூத்துக்குடி 84 (57), சேலம் 61 (36), கன்னியாகுமரி 60 (52), திருச்சி 58 (73), விழுப்புரம் 48 (30), … Read more

2வது டி20: இங்கிலாந்து அணிக்கு 171 ரங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

பர்மிங்காம்: 2வது டி20: இங்கிலாந்து அணிக்கு 171 ரங்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. பர்மிங்காமில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

விராத் கோலி-க்கு வந்த பிரச்சனையை பாத்தீங்களா.. பாவம் மனுஷன்..!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் சீன நிறுவனங்கள் அடுத்தடுத்து அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறையிடம் மாட்டி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி-க்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விராத் கோலி கிரிக்கெட் மட்டும் அல்லாமல் 20க்கும் அதிகமான பிராண்டுகளுக்குப் பிராண்ட் அம்பாசிட்டராக விளங்குறார். இந்நிலையில் விராத் கோலி பிராண்ட் அம்பாசிட்டராகத் தற்போது பண மோசடி, பணச் சலவையில் மாட்டிக்கொண்டு இருக்கும் விவோ நிறுவனமும் ஒன்று. 1 இல்ல, 2 … Read more

விலகிய போரிஸ் ஜான்சன்: பிரிட்டன் பிரதமர் ரேஸில் யார் யார்… அடுத்து என்ன நடக்கும்?!

கடந்த ஜூலை 7-ம் தேதி, பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார் என்ற செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய போரிஸ் ஜான்சன், தான் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதை உறுதிசெய்தார். மேலும், “இந்த அரசாங்கத்தின் சாதனைகளுக்காகப் பெருமிதம் கொள்கிறேன்” என்றும் அப்போது தெரிவித்தார். போரிஸ் ஜான்சன் போரிஸ் ஜான்சன் ராஜினாமாவின் பின்னணி என்ன ? ஜூன் 6 -ம் தேதி நள்ளிரவு போரிஸ் ஜான்சன் … Read more