தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பா? – தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி/ தூத்துக்குடி: தீவிரவாத நெட்வொர்க் மற்றும் தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 5 மாநிலங்களில் மொத்தம் 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி, ஆள் சேர்ப்பு மற்றும் ஸ்லீப்பர் செல்களுக்கு எதிராக என்ஐஏ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத … Read more

திருமணமான மகள்களுக்கும் சொத்தில் சமபங்கு: சட்டம் இயற்ற தயாராகும் உத்தர பிரதேச அரசு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் திருமணமான மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம் வருகிறது. இதன் மீது முக்கிய முடிவெடுக்கத் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தயாராகிறது. உத்தர பிரதேசத்தில் வருவாய் சட்டம்-2006-ன் பிரிவு 108 (2)-ன் கீழ், நில உரிமையாளர் இறந்த பிறகு, அந்த நிலம் அவரது மனைவி, மகன் மற்றும் திருமணமாகாத மகளின் பெயருக்கு மட்டுமே மாற் றப்படுகிறது. இதில் திருமணமான மகள்களுக்கு உரிமை இல்லை. இந்த விதியை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை … Read more

ஜார்க்கண்டில் வறுமை காரணமாக ரூ.50,000-க்கு விற்கப்பட்ட ஒரு மாத குழந்தை மீட்பு 

ராஞ்சி: உத்தர பிரதேசத்​தின் மிர்​சாபூரைச் சேர்ந்த ராமச்​சந்​திர ராம், ஜார்க்​கண்ட் மாநிலம் பலமு மாவட்​டம் லொட்வா கிராமத்துக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிங்கி தேவி.சமீபத்​தில் பெய்த கனமழை​யால் இவர்​கள் தங்​கி​யிருந்த குடிசை சேதமடைந்​துள்​ளது. இந்த தம்​ப​திக்கு 4 குழந்​தைகள். ஒரு மாதம் முன்பு 5-வ​தாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதிலிருந்து தேவிக்கு உடல்​நிலை சரி​யில்​லாமல் போய் உள்​ளது. சிகிச்​சைக்கு பணம் இல்​லாத காரணத்​தால், தங்​களு​டைய ஒருமாத ஆண் குழந்​தையை ரூ.50 ஆயிரத்​துக்கு … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்க பிஜு ஜனதா தளம் முடிவு

புவனேஸ்வர்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்க ஒடிசாவின் முக்கிய எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக புவனேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எம்பி சஸ்மித் பத்ரா, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிஜேடி எம்பிக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற முடிவை கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் எடுத்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சியின் அரசியல் விவகாரக் குழு, எம்பிக்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு இணங்க இந்த … Read more

சந்திர கிரகணத்தை பார்க்க மிஸ் பண்ணிட்டீங்களா? கவலைய விடுங்க, இதை பாருங்க!

Lunar Eclipse 2025 Red Moon Video : வானியல் அபூர்​வ​மான முழு சந்​திர கிரகணம் இந்தியாவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய நிலையில், அழகிய அடர் சிவப்பு நிறத்​தில் காணப்​பட்ட முழு சந்​திரனை கோடிக்கணக்கான மக்கள் உற்​சாகத்​துடன் பார்த்து மகிழ்ந்​தனர்.

பிஜேடி போலவே பிஆர்எஸ் கட்சியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க முடிவு

ஹைதராபாத்: பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியைப் போலவே, பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) கட்சியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ், “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிஆர்எஸ் எம்பிக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கட்சித் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவின் தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாஜக … Read more

Bihar SIR: ஆதாரை செல்லத்தக்க ஆவணமாக ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பிஹாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு ஆதார் அடையாள அட்டையை செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை ஏற்கிறது. … Read more

ஒரே இரவில் நடந்த சோகம்! AC வெடித்து, 4 பேர் உயிரிழப்பு! நடந்தது எப்படி?

AC Blast Killed a Family: ஒரு AC கம்பிரைசர் வெடித்ததால் மூன்று உயிர்கள் பலியானது யாரின் பொறுப்பு? AC நிறுவனமா? பயன்படுத்தும் மக்களின் பொறுப்பா?

பாஜக எம்பி.க்களின் 2 நாள் பயிற்சிபட்டறை: கடைசி வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி

புதுடெல்லி: ​பாஜக எம்​பி.க்​களின் இரண்டு நாள் பயிற்சி பட்​டறை நேற்று தொடங்​கியது. இந்த கூட்​டத்​தில் பிரதமர் மோடி கடைசி வரிசை​யில் அமர்ந்​திருந்து நிகழ்ச்​சிகளை கவனித்​தார். இதுதொடர்​பான புகைப்​படம் தற்​போது சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி உள்​ளது. இந்த கூட்​டத்​தில் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் எவ்​வாறு வாக்​களிப்​பது என்​ப​தற்​கான பயிற்​சிகளும் வழங்​கப்பட உள்​ளது. நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் அனை​வரும் பங்​கேற்​கும் பாஜக​வின் இரண்டு நாள் பயிற்சி பட்​டறை நேற்று தொடங்​கியது. இதில், ஜிஎஸ்​டி​யில் மிகப்​பெரிய சீர்​திருத்​தத்தை கொண்டு வந்த … Read more

சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தை – 2வது இடத்தில் தமிழ்நாடு

புதுடெல்லி: சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. சிறு வணிக நிறுவனங்கள், முறைப்படுத்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்களிடம்(வங்கிகள் உள்ளிட்டவை) இருந்து கடன்களைப் பெறுவது வழக்கம். அவ்வாறு பெறும் கடன்களின் அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி(SIDBI) மற்றும் CRIF High Mark ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரம் வருமாறு: கடந்த 2025, ஜூன் 30 நிலவரப்படி … Read more