அனைத்து குடும்பங்களுக்கும் அரசு வேலை: பிஹாரில் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பாட்னா: மொத்​தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ல் தேர்தல் முடிவு அறிவிக்​கப்பட உள்​ளது. இந்​நிலை​யில் ஆர்​ஜேடி தலை​வரும் முன்​னாள் துணை முதல்​வரு​மான தேஜஸ்வி யாதவ், தலைநகர் பாட்​னா​வில் செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: நாங்​கள் ஆட்​சிக்கு வந்​தால் அரசு வேலை​வாய்ப்பு பெறாத அனைத்து குடும்​பங்​களுக்​கும் குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கு​வோம். எங்​கள் அரசு பதவி​யேற்ற 20 நாட்​களுக்​குள் இது தொடர்​பாக … Read more

சோஹோ மெயிலுக்கு மாறினார் அமைச்சர் அமித் ஷா

புதுடெல்லி: உள்​நாட்டு நிறு​வன​மான சோஹோ ‘ஆபிஸ் சூட்’ ஆன்​லைன் தளத்​தில் உள்ள மென்​பொருட்​களை அலு​வலக பயன்​பாட்​டுக்கு பயன்​படுத்​தும்​படி மத்​திய கல்வி அமைச்​சகம் சமீபத்​தில் உயர் அதி​காரி​களுக்கு சுற்​றறிக்கை அனுப்​பியது. இந்​நிலை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தனது இ-மெ​யில் முகவரியை சோஹோ மெயிலுக்கு மாற்​றி​யுள்​ளார். இது குறித்து எக்ஸ் தளத்​தில் அவர் வெளி​யிட்​டுள்ள தகவலில், ‘‘நான் சோஹோ மெயிலுக்கு மாறி​விட்​டேன். என்​னுடைய இ-மெ​யில் முகவரி மாறி​யுள்​ளதை குறித்​துக் கொள்​ளுங்​கள். எனது புதிய இ-மெ​யில் முகவரி [email protected]. … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு காலக்கெடு நீட்டிப்பு: கர்நாடகாவில் பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

பெங்களூரு: கர்​நாட​கா​வில் சாதி​வாரி கணக்​கெடுப்பு பணி​களுக்​கான காலக்​கெடு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. ஆசிரியர்​கள் இந்த பணி​யில் ஈடு​படு​வதற்​காக பள்​ளி​களுக்கு அக்​டோபர் 18ம் தேதி வரை விடு​முறை அளிக்​கப்​பட்டுள்ளது. இதுகுறித்து கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா பெங்​களூரு​வில் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் சமூக,கல்​வி,பொருளா​தார கணக்​கெடுப்பு பணி​கள் கடந்த செப்​டம்​பர் 22ம் தேதி தொடங்கி அக்​டோபர் 7ம் தேதி​யுடன் முடிக்க திட்​ட​மிடப்​பட்​டது. ஆனால் கணக்​கெடுப்பு பணி​கள் இன்​னும் முழு​மை​யாக நிறைவடைய​வில்​லை. கொப்​பல் மாவட்​டத்​தில் 97 சதவீத​மும், உடுப்பி 63 சதவீத​மும், த‌ட்​சிண கன்னட மாவட்​டத்​தில் 60 … Read more

பிஹார் பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி மிரட்டல்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்றுள்ள ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி கூறுகையில், “என்டிஏ கூட்டணியில் எங்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால் நாங்கள் இத்தேர்தலில் போட்டியிட மாட்டோம். என்றாலும் என்டிஏ கூட்டணியை நாங்கள் ஆதரிப்போம்” என்று தெரிவித்தார். … Read more

சபரிமலை தங்க முலாம் விவகாரம்: தேவசம் அமைச்சர் பதவி விலக கோரி கேரள சட்டப்பேரவையில் கடும் கூச்சல் குழப்பம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் துவாரபாலகர் சாமி சிலையில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து தேவசம் அமைச்சர் வி.என். வாசவன் பதவி விலக கோரி கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். சபரிமலையில் ஐயப்பன் சந்நிதியில் உள்ள துவாரபாலகர் சிலைகளுக்கு தங்கமுலாம் பூசுவதில் முறைகேடுகள் நடந்ததாக ஆளும் இடதுசாரி அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தை முன்வைத்து கடந்த 4 நாட்களாக கேரளசட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. … Read more

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி டெல்லி வந்தடைந்தார்

புதுடெல்லி: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, முதன் முறையாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி இன்று டெல்லிக்கு வந்தடைந்தார். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தலிபான்கள் ஆப்கானிஸ்தானை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியது. அதன்பின்னர் தலிபான் அரசின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். இந்தியாவுக்கு ஆறு நாள் பயணமாக வந்துள்ள முத்தாகி … Read more

ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை: மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனைவி கோரிக்கை

சண்டிகர்: ஹரியானாவில் தற்கொலை செய்துகொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் தற்கொலை குறிப்பில் குறிப்பிடப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அவரின் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் பி குமார், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியிடம் கோரிக்கை வைத்துள்ளார். சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், அக்டோபர் 7 அன்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 2001-ஆம் ஆண்டு … Read more

இந்தியாவில் 9 பிரிட்டன் பல்கலை. வளாகங்கள்: கெய்ர் ஸ்டார்மெர் அறிவிப்பு

மும்பை: இங்கிலாந்தைச் சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை இந்தியாவில் அமைக்க உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். இதையடுத்து, இந்தியா – இங்கிலாந்து இடையே மிகப் பெரிய வணிகத் தலைவர்கள் உச்சி மாநாடு மும்பையில் நேற்று நடைபெற்றது. இதயடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை மும்பையில் கெய்ர் ஸ்டார்மெர் சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக, இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளின் … Read more

“நானும் அதிர்ச்சி அடைந்தேன்…” – காலணி தாக்குதல் முயற்சி குறித்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வளாகத்தில் தன் மீது நடந்த காலணி தாக்குதல் முயற்சி சம்பவத்தைக் கண்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அறையில் நடந்த விவாதத்தின்போது இந்த விவகாரம் குறித்துப் பேசிய பி.ஆர்.கவாய், “திங்கள்கிழமை நடந்த சம்பவத்தால் நானும், எனது கற்றறிந்த சகோதரரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். எங்களைப் பொறுத்தவரை இது மறக்க வேண்டிய ஒரு விஷயம்” என்று தெரிவித்துள்ளார். அப்போது அருகில் இருந்த நீதிபதி உஜ்ஜல் பூயான், “இந்த … Read more

‘ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை’ – பிஹார் தேர்தலுக்கு தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பாட்னா: ஆர்ஜேடி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிஹாரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், “எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு வீட்டிலும் அரசு வேலை உள்ள ஒருவர் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். அரசாங்கத்தை அமைத்த 20 நாட்களுக்குள் அதற்கான புதிய சட்டத்தை நாங்கள் உருவாக்குவோம். பதவியேற்ற 20 மாதங்களுக்குள், … Read more