அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு அறிவிப்பு! அகவிலைப்படி 3% உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு காத்து கொண்டிருக்கிறது. தற்போது வெளியான அறிவிப்பின்படி, அகவிலைப்படி 3% உயர்ந்து, 3 மாத நிலுவைத் தொகையுடன் அக்டோபரில் வழங்கப்படும்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு காத்து கொண்டிருக்கிறது. தற்போது வெளியான அறிவிப்பின்படி, அகவிலைப்படி 3% உயர்ந்து, 3 மாத நிலுவைத் தொகையுடன் அக்டோபரில் வழங்கப்படும்.
பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான பிஹார் அரசாங்கத்தில் குற்றமும் ஊழலும் அதிகரித்துள்ளன என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக சாடினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான பிஹார் அரசாங்கத்தில் குற்றமும், ஊழலும் அதிகரித்துள்ளன. இதுதான் பிஹாரின் நிலைமை. கல்வி, நீர்ப்பாசனம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றின் நிலை மோசமாக உள்ளது. தனிநபர் வருமானம் மற்றும் தனிநபர் முதலீட்டைப் பொறுத்தவரை பிஹார் மிக மோசமான நிலையில் உள்ளது. விவசாயிகளின் … Read more
புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷ்ய போரை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்த கருத்துகளை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பகிர்ந்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அதிபர் மேக்ரோனுடன் மிகச் சிறந்த உரையாடல் நடைபெற்றது. இந்தியா – பிரான்ஸ் இடையே பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் … Read more
Maharashtra Boy Alive During Funeral : 19 வயது இளைஞர் ஒருவர், மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின் மீண்டும் உயிருடன் எழுந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரம், இதோ.
ஹைதராபாத்: மும்பை நகரத்துக்கு அடுத்தப்படியாக தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டனர். இந்நிலையில், இன்று காலை முதல் 7-ம் தேதி காலை 10 மணி வரை விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க உள்ளனர். இதை முன்னிட்டு ஹைதராபாத் நகரே போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் போலீஸார் … Read more
புதுடெல்லி: வரும் நவராத்திரி முதல் அமலுக்கு வர உள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு, இந்திய பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “2014-க்கு முன்பு, வரி விதிப்பு முறை மிகவும் சிக்கலானதாக இருந்தது. பல நிலைகளில் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி அதை எளிதாக்கியது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தம், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். தினசரி பயன்பாட்டில் உள்ள அனைத்துப் … Read more
Kerala Karunya KR-722 Lottery Result: கேரளாவின் காருண்யா KR-722 லாட்டரி சீட்டு குழுக்களின் முடிவுகளை இன்று வெளியாகி உள்ளது. முதல் பரிசு ரூ.1 கோடியை வென்ற அதிர்ஷ்ட எண் உள்ளிட்ட பரிசு வென்ற எண்களின் விவரங்களை இங்கு பார்க்கலாம்.
புதுடெல்லி: அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் எப்போதும் வலுவான தனிப்பட்ட உறவை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ஜெய்சங்கர், “அமெரிக்காவுடனான நமது நல்லுறவுக்கு பிரதமர் மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். அதிபர் ட்ரம்ப் விஷயத்தில், பிரதமர் மோடி எப்போதும் மிகச் சிறந்த தனிப்பட்ட நல்லுறவைக் கொண்டுள்ளார். ஆனால் விஷயம் என்னவென்றால், நாங்கள் அமெரிக்காவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்த நேரத்தில், அதற்கு … Read more
புதுடெல்லி: மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளதாகவும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட உள்ளதாகவும் வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்த நபர் நொய்டாவில் கைது செய்யப்பட்டார். மும்பை போக்குவரத்துப் போலீசாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு சமீபத்தில் ஒரு மிரட்டல் செய்தி வந்திருந்தது. ஃபிரோஸ் என்பவரின் பெயரில் வந்த அந்த மிரட்டல் செய்தியில், “மும்பை நகரத்தின் பல்வேறு இடங்களில் 34 மனித வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளன. லஷ்கர் இ ஜிஹாதி … Read more
PM Modi – Donald Trump: பிரதமர் மோடி தனக்கு எப்போதுமே நண்பர் தான் என டொனால்ட் டிரம்ப் கூறிய நிலையில், அதற்கு உடனே மோடி போட்ட பதிலை இங்கு பார்க்கலாம்.