‘பிஹார் இளைஞர்கள் வேலைக்காக இடம்பெயர்வது நிறுத்தப்படுமா?’ – மோடிக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி

பாட்னா: “பிரதமர் நரேந்திர மோடியின் பிஹார் வருகை என்பது மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே பிரதமர் கவனம் செலுத்துகிறார்” என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறினார் இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “பிரதமர் மோடி முதல் முறையாக வரவில்லை. அதேபோல பிரதமர் மோடி பிஹாரின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் வரவில்லை. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு … Read more

இந்தியர்கள் நாடு திரும்ப வான்வெளியைத் திறக்கிறது ஈரான்!

புதுடெல்லி: ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தனது வான்வெளியை ஈரான் திறக்க உள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரானிய துணைத் தலைவர் ஜாவத் ஹொசைனி, “இந்தியர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காக ஈரான் வான்வெளியைத் திறக்கவுள்ளது. இன்றிரவு தொடங்கி மூன்று சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 1,000 இந்தியர்களை அழைத்து வர இந்தியாவுடன் ஈரான் ஒத்துழைத்து வருகிறது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில் இஸ்ரேல் மற்ற நாடுகளைத் தன்னிச்சையாகத் … Read more

‘கங்கை தூய்மை’ என்பது பாஜகவின் வெற்று தேர்தல் கோஷம் ஆகிவிட்டது: காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: கங்கை நதியை தூய்மைப்படுத்துவது என்பது கடந்த 11 ஆண்டுகளில் வெறும் தேர்தல் கோஷமாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். பிஹாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான நமாமி கங்கா திட்டத்தின் கீழ் ரூ.1800 கோடி மதிப்பில் 6 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பிஹார் பின்தங்கி இருப்பதற்கு அதன் முந்தைய ஆட்சியாளர்களான காங்கிரஸும், … Read more

ஆம் ஆத்மி ஆட்சியின்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை தீவிர விசாரணை

ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தியபோது 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதுதொடர்பாக டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் விசாரணை நடத்தியது. அப்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு … Read more

ரூ.7.42 கோடி மோசடி வழக்கு: மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவர் கைது

ரூ.7.42 கோடி மோசடி வழக்கில் மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரி ராஷ்மி கரந்திகரின் கணவர் புருஷோத்தம் சவான். இவர் மும்பை, தானே மற்றும் புனே நகரில் அரசு ஒதுக்கீட்டு குடியிருப்புகளை சலுகை விலையில் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.24.78 கோடி மோசடி செய்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சூரத் நகரை சேர்ந்த ஒரு தொழிலதிபர் உள்ளிட்ட சிலரிடம் புருஷோத்தம் சவான் … Read more

2024 மக்களவைத் தேர்தலுக்காக பாஜக ரூ.1,494 கோடி, காங். ரூ.620 கோடி செலவு: ஏடிஆர் தகவல்

புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சி ரூ.1,494 கோடியை செலவிட்டுள்ளது. இது மொத்த தேர்தல் செலவில் 44.56% ஆகும் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர் – ADR) தெரிவித்துள்ளது. மார்ச் 16 முதல் ஜூன் 6, 2024 வரை மக்களவை மற்றும் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் ரூ.3,352.81 கோடியைச் செலவிட்டன என ஜனநாயக … Read more

“அவமானம் அல்ல… அதிகாரம் அளிப்பதே ஆங்கிலம்!” – அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி

புதுடெல்லி: இன்றைய உலகில் தாய்மொழியைப் போலவே ஆங்கிலம் முக்கியமானது என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசி இருந்தார். அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இந்தி மொழியில் … Read more

மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாடிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் – கண் கலங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

டேராடூன்: தனது பிறந்த நாளை முன்னிட்டு, பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாடிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைக் கேட்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கண்கலங்கினார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று (20.6.2025) ராஷ்டிரபதி தபோவனம், ராஷ்டிரபதி நிகேதன் ஆகியவற்றின் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். ராஷ்டிரபதி நிகேதனில் அமைக்கப்பட உள்ள ராஷ்டிரபதி தோட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய அவர், பார்வையாளர் வசதி மையம், உணவகம், பத்திரிகை அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தார். டேராடூன் … Read more

“பிஹாரின் மோசமான நிலைக்கு காங்கிரஸ், ஆர்ஜேடியே காரணம்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சிவான்: பிஹாரின் மோசமான நிலைக்கு முந்தைய ஆட்சியாளர்களான காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமுமே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரின் உள்கட்டமைப்பு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டில் பிஹாருக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட … Read more

சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாஜக

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து உ.பி. முஸ்லிம்களுக்கு மாநில பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதிலும் விரைவில் தொடங்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இச்சூழலில் உ.பி.யில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது முஸ்லிம்கள் தங்கள் சாதிக்கு பதிலாக ‘இஸ்லாம்’ என்று தங்கள் மதத்தை மட்டும் குறிப்பிட்டாலே போதுமானது என்று மவுலானாக்கள் தகவல் பரப்புவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்களும் இருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து ‘இந்து … Read more