​பாலியல் வன்​கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத்: துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோட்​டம்

சண்​டிகர்: பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைதான ஆம் ஆத்மி எம்​எல்ஏ துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோடி​யுள்​ளார். அவரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். பஞ்​சாப் மாநிலம், சனூர் சட்​டப் பேரவை தொகு​தி​ ஆம் ஆத்மி எம்​எல்​ஏ​ ஹர்​மீத் பதன்​மஜ்​ரா மீது, ஒரு பெண் போலீ​ஸில் புகார் கொடுத்​திருந்​தார். அதில், ‘தனது மனை​வியை விவாகரத்து செய்​து ​விட்​ட​தாக பொய் சொல்லி எம்​எல்ஏ ஹர்​மீத் என்​னுடன் தொடர்பு வைத்​திருந்​தார். மேலும், என்னை பாலியல் வன்​கொடுமை செய்​ததோடு, மிரட்​டல், ஆபாச படங்​கள் போன்​றவற்றை அனுப்​பும் … Read more

ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்.22 முதல் அமல் – எவற்றுக்கு எவ்வளவு?

புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்பான வரி குறைப்பு செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பாக பிரதமர் தலைமையில் மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், … Read more

GST வரிகளில் அதிரடி மாற்றம்! ‘இந்த’ பொருட்களின் விலை குறைகிறது..

GST Slabs Reduced : ஜிஎஸ்டி கவுன்சில், தற்போது முக்கிய வரி அடுக்குகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்படி, புதிய விகிதங்கள் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

அனைத்து நக்சல்களும் சரணடையும்; பிடிபடும்; கொல்லப்படும் வரை மோடி அரசு ஓயாது: அமித் ஷா

புதுடெல்லி: நக்சலைட்டுகள் அனைவரும் சரணடையும் வரையோ, பிடிபடும் வரையோ, கொல்லப்படும் வரையோ மோடி அரசு ஓயாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் கரேகுட்டா மலைப்பகுதியில் ஆபரேஷன் ‘பிளாக் ஃபாரஸ்ட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர், சத்தீஷ்கர் காவல் துறையினர், மாவட்ட வனப்பாதுகாப்புப் படையினர், கோப்ரா வீரர்கள் ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய அமித் ஷா, “கரேகுட்டா மலைப்பகுதியில், நக்சல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட … Read more

டெல்லியின் பல பகுதிகளில் கனமழை – யமுனை நதியில் அபாய அளவை தாண்டி கரைபுரளும் வெள்ளம்

புதுடெல்லி: டெல்லி – என்சிஆரின் பல பகுதிகளில் இன்றும் கனமழை பெய்ததை அடுத்து, யமுனை ஆற்றில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பாய்ந்தோடுகிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் 7,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். டெல்லி – என்சிஆரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்று நண்பகல் 1 மணி நிலவரப்படி வெள்ளம் அபாய அளவான 205.33 மீட்டரைத் தாண்டி, 207 மீட்டரை எட்டியது. இதனால், கரையோர பகுதி … Read more

“யாருடைய தாயையும் அவதூறாக பேசக் கூடாது; ஆனால், பிரதமர் மோடி…” – தேஜஸ்வி யாதவ் கருத்து

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், யாருடைய தாயையும் அவதூறாகப் பேசக் கூடாது என்றும், அதை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் தாய் குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து பிஹாரில் நாளை (செப்.4) முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ளது. இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் விரக்தி காரணமாக அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வருவதாக மத்திய அமைச்சர் … Read more

விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஜெய்சங்கர் நம்பிக்கை

புதுடெல்லி: ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் என்பதை இந்தியா விரும்புகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள ஜெர்மனி வெளியறவு அமைச்சர் ஜோஹன் வதேபுல் உடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்திய ஜெய்சங்கர், பின்னர் அவருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெய்சங்கர் கூறியதாவது: காலநிலை மாற்றம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வதேபுல் … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி வலியறுத்தியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பஞ்சாபில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களின் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற கடினமான … Read more

ஒயாத வரதட்சணை கொடுமை! இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..நடந்தது என்ன?

Bengaluru Woman Died Dowry Harassment : பெங்களூருவில், இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா ராஜினாமா: விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என அறிவிப்பு

ஹைதராபாத்: பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சியில் இருந்து கவிதா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர், ராஜினாமா செய்துள்ளார். மேலும், தனது அரசியல் எதிர்காலம் குறித்த முடிவை வரும் நாட்களில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவ், தனது மகளும் நிஜாமாபாத் மேலவை உறுப்பினருமான கவிதாவை, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக நேற்று அறிவித்தார். இது தொடர்பாக பிஆர்எஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், … Read more