கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குப்பதிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணியளவில் 65.69% வாக்குப்பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கடைசியாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இந்நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக வெளியான அறிவிப்பின்படி மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குப்பதிவாகியுள்ளது. மும்முனைப் போட்டி: கர்நாடகாவில் பாஜக, காங்., … Read more

கடலோர கர்நாடகாவில் சறுக்கிய காங்கிரஸ்.. பாஜகவுக்கு கைகொடுத்த பஜ்ரங் தள்.. பரபர கருத்துக்கணிப்பு

பெங்களூர்: கர்நாடகாவில் கடலோர பிராந்தியங்களில் காங்கிரஸ் பெரும் சறுக்கலை எதிர்கொண்டுள்ளது. அதே சமயத்தில், அங்கு பாஜக அடித்து துவம்சம் செய்து முன்னுக்கு வருகிறது. இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது சிக்கலாகும் என வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஏபிபி நியூஸ் + சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து காத்திருந்த தேர்தல் என்றால் அது சந்தேகமே இல்லாமல் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு … Read more

ட்ரோன்கள் மூலம் ரத்தம் கொண்டுசெல்லும் வசதி.. முதன்முறையாக டெல்லியில் பரிசோதனை..

இரத்தம் மற்றும் மருந்துப் பொருட்களை ‘ஐ-டிரோன்’ மூலமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நாட்களில் போக்குவரத்து வசதி குறைவான மலைப்பாங்கான பகுதிகளுக்கு தடுப்பூசிகள் டிரோன் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிரோன் மூலமாக கொண்டுச் செல்லப்பட்டால் மருந்துகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுகிறதா எனவும் வெப்பநிலை பராமரிப்பு குறித்தும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. இந்த … Read more

#BREAKING கர்நாடகா கருத்துக்கணிப்பு வெளியானது – ஆட்சி யாருக்கு?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்நாடகா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதில், இம்முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காலை முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதில், மொத்தம் உள்ள 224 இடங்களில் காங்கிரஸ் 107 முதல் 119 … Read more

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 2023 நிறைவு: வெளியானது கருத்துக் கணிப்பு முடிவுகள்- ஆட்சி அமைக்கப்போவது யார்?

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சிகள் சில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதன்படி பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் காங்கிரஸ் சராசரியாக 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும், பாஜக 100-க்கும் குறைவான இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 224 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை … Read more

Karnataka Exit Polls: மீண்டும் தொங்கு சட்டசபை.. கலக்கத்தில் காங்கிரஸ்.. கிங் மேக்கராகும் குமாரசாமி.?

கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறியுள்ளன. கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தினர். மிகுந்த முக்கியத்துவம் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிக தொகுதிகளில் வெற்றி பெரும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் உறுதியாகி உள்ளது. ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்து … Read more

சொந்தக்கட்சி எம்.எல்.ஏக்களையே அஷோக் கெலாட் நம்புவதில்லை.. பிரதமர் மோடி

இந்தியர்களின் பாதுகாப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சூடானில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டதாக குற்றம்சாட்டினார். கர்நாடகாவின் ஹக்கிபிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த சிலர் சூடானில் சிக்கியிருந்ததாகவும், அவர்களுக்கு ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டால், சட்டமன்ற தேர்தலில் அது தங்களுக்கு சாதகமாக அமையும் என்று காங்கிரஸ் நினைத்ததாகவும் கூறினார். மேலும் ராஜஸ்தானை ஆளும் காங்கிரசை கடுமையாக … Read more

போலீசாரின் சிறு கவனக்குறைவால் பெண் இளம் மருத்துவர் கத்தரிக்கோலால் சரமாரி குத்திக்கொலை..!!

கேரள மாநிலத்தில் கொட்டாரக்காரா பகுதியில் வசித்து வந்தவர் சந்தீப். 42 வயதான சந்தீப், பள்ளி ஆசிரியர். மதுபோதைக்கு அடிமையாக இருந்திருக்கிறார் சந்தீப். போதைக்காக ஏராளமான போதை வஸ்துகளை சாப்பிட்டு வந்திருக்கிறார். போதையில் இருந்த சந்தீப், நேற்று இரவில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார் . அப்போது அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும் தகராறு செய்திருக்கிறார். இதை அடுத்து கொட்டாரக்காரா போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர் அதிகாலையில் மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்காரா தாலுகாவில் … Read more

பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை: நிர்மலா சீதாராமன்

பெங்களூரு: பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள ஜெயநகர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்த தேர்தலில் பாஜக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். பிரதமர் நரேந்திர மோடி மீதான ஈர்ப்பு கர்நாடகாவில் மட்டுமல்ல நாடு முழுவதுமே இருக்கிறது. … Read more

Karnataka Election 2023: சிலிண்டருக்கு ஆரத்தி காட்டி வழிபாடு… வாக்களிக்கும் முன்பு காங்கிரஸ் கட்சியினர் குசும்பு!

கர்நாடக மாநிலத்தின் மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரச்சாரத்தின் போதே இரு கட்சி பிரமுகர்களும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வாக்கு சேகரித்து … Read more