கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி – கார்கே முடிவெடுக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடக முதல்வர் விவகாரத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னிச்சையாக முடிவு எடுக்குமாறு மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. கடந்த14-ம் தேதி பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் … Read more

குழந்தையை முதல்வரிடம் தூக்கி எறிந்த தந்தை..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் சாகர் மாவட்டத்தில் மாநாடு நடந்திருக்கிறது. மாநாட்டில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, முதல்வரை நோக்கி ஒரு வாலிபர் தனது ஒரு வயது குழந்தையை தூக்கி வீசி இருக்கிறார். இதை பார்த்ததும் பதறிய முதல்வர் பேசுவதை நிறுத்திவிட்டு குழந்தை வீசப்பட்ட திசையை நோக்கி ஓடி வந்திருக்கிறார். இதை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் நிலைமையை உணர்ந்து குழந்தையைப் பிடிக்க முயன்றிருக்கிறார்கள். அப்போது … Read more

குட் நியூஸ்..!! கிசான் சம்மன் நிதியின் அடுத்த தவணை எப்போ தெரியுமா ?

ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்ற திட்டத்தின் மூலம் நேரடி நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், நாட்டின் தகுதியுள்ள மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த விவசாயிகளுக்கு தலா ரூ. 2,000 வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் முதல் தவணையும், … Read more

லே விமான நிலைய ஓடுபாதையில் பழுதாகி நின்றது விமானப்படை விமானம் – பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்து

புதுடெல்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே விமான நிலைய ஓடு பாதையில், விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் பழுதாகி நின்றது. அதை ஓடுபாதையில் இருந்து அகற்ற முடியாததால், பயணிகள் விமான போக்குவரத்தில் தடை ஏற்பட்டது. உலகின் மிக உயரமான இடங் களில் அமைந்துள்ள விமான நிலையங்களில், லடாக்கின் லே பகுதியில் உள்ள ‘குஷாக் பகுலா ரிம்போச்சி’விமான நிலையமும் ஒன்று. இங்கு இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் நேற்று காலை தரையிறங்கியது. அப்போது தொழில்நுட்ப கோளாறு … Read more

காசி ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு தேவை! மனுவை விசாரிக்கும் நீதிமன்றம்

Gyanvapi Mosque Issue In Court: ஞானவாபி மசூதி வளாகம் முழுவதையும் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்யக் கோரிய மனுவை வாரணாசி நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

ஜி-7 மற்றும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி!

ஜி-7 மற்றும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ட்டில் பங்கேற்க வருமாறு ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ விடுத்த அழைப்பை ஏற்றுள்ள மோடி, வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை 3 நாட்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த மாநாட்டில், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நீடித்த வளம் ஆகியவை குறித்து பேச உள்ளார். மாநாட்டின் ஒரு பகுதியாக சில … Read more

மத்திய அரசின் வேலைவாய்ப்பு மேளா | நாடு முழுவதும் 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் பிரதமர்

புதுடெல்லி: மத்திய அரசின் ‘ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு விழா மூலமாக நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி மூலம் வழங்கினார். இந்தியாவில் தொழில் துறையும், முதலீடும் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்துவருவதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசு ‘ரோஜ்கர் மேளா’ என்ற பெயரில் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. இதன்மூலம், மத்திய, மாநில அரசுகளின் கீழ் வரும் துறைகளில் ஆட்களை புதிதாக வேலைக்கு … Read more

ஷாருக்கான் மகனை போதைப் பொருள் வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.25 கோடி பேரம்… போதைப் பொருள் தடுப்பு அதிகாரி து சிபிஐ குற்றச்சாட்டு

போதைப் பொருள் வழக்கிலிருந்து ஷாருக்கான் மகனை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக புகாருக்கு ஆளான போதைப் பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடேவின் மீது சிபிஐ முதல் குற்ற அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஷாருக்கானிடம் 25 கோடி ரூபாய் கேட்டு, 18 கோடி ரூபாயில் பேரம் முடிவடைந்து அதில் 50 லட்சம் ரூபாய் முன்பணமாக பெற்றுக் கொண்டதாக வான்கடே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வான்கடேயின் வெளிநாட்டுப் பயணங்கள், விலை உயர்ந்த வாட்சுகள் உள்ளிட்ட உடைமைகள் … Read more

கர்நாடக முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி: டெல்லியில் மூத்த தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை

பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் மூத்த தலைவர்களுடன் தீவிர‌ ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கட்சி மேலிடம் டெல்லி வருமாறு விடுத்த அழைப்பின்பேரில், சித்தராமையா டெல்லி சென்றுள்ள நிலையில் டி.கே.சிவகுமார் அழைப்பை நிராகரித்துள்ளார். கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக 66, மஜத … Read more

பிஎப்ஐ அமைப்புடன் பஜ்ரங் தளத்தை ஒப்பிட்டதால் அவதூறு வழக்கில் கார்கேவுக்கு சம்மன்

புதுடெல்லி: தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவுடன் (பிஎப்ஐ) பஜ்ரங் தளம் அமைப்பை இணைத்து பேசியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரூ.100 கோடி அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்ட நீதிமன்றத்தில் பஜ்ரங் தளம் ஹிந்துஸ்தான் அமைப்பின் தலைவர் ஹிதேஷ் பரத்வாஜ் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “சமீபத்தில் நடந்து … Read more