மதமாற்ற தடைச் சட்டம் வாபஸ் | ‘புதிய முஸ்லிம் லீக் கட்சி’ ஆக இருக்கிறது காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

பெங்களூரு: கர்நாடகாவில் மத மாற்ற தடைச் சட்டம் திரும்பப் பெறப்படும் என அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் ‘புதிய முஸ்லிம் லீக்’ கட்சியாக இருக்கிறது என பாஜக விமர்சித்துள்ளது. கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், முந்தைய பாஜக அரசால் கடந்த ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற … Read more

இன்று இரவு கரையை கடக்கும் அதி தீவிர பிபர்ஜாய் புயல்… துவாரகாவில் கொந்தளிக்கும் கடல் அலைகள்!

பிபர்ஜாய் புயல், வியாழன் இரவு குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசி வருவதோடு, கடல் மிகவும் கொந்தளிப்பாக காட்சி அளித்தது. 

மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

பெங்களூரு: கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முந்தைய பாஜக அரசால் கடந்த ஆண்டு செப்டம்பரில் மதமாற்ற தடைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கான மசோதா சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது காங்கிரஸ் கட்சி … Read more

மத மாற்றத்துக்கு தடையில்லை! மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்யும் கர்நாடக அரசின் முடிவு

Repeal Anti Conversion Law: பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக கர்நாடக அமைச்சர் எச்.கே.பாட்டீல் அறிவித்தார்

உயிர்த்தியாகம் செய்த அமைதிப்படை வீரர்களுக்கு ஐ.நா. தலைமையகத்தில் நினைவிடம் – இந்தியா முன்மொழிந்த தீர்மானம் ஏற்பு

நியூயார்க்: உயிர்தியாகம் செய்த அமைதிப்படை வீர்களுக்கு ஐ.நா தலைமையகத்தில் நினைவுச் சுவர் எழுப்ப வேண்டும் என்று கோரி இந்தியா கொண்டு வந்த தீர்மானம் சுமார் 190 நாடுகளின் ஒப்புதலுடன் ஏற்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்படும் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக ஐநா சார்பில் அமைதிப் படை செயல்பட்டு வருகிறது. இதில், பல்வேறு நாடுகளின் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியின்போது அமைதிப்படை வீரர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உயிர்தியாகத்தைப் போற்றும் வகையில், ஐநா தலைமையகத்தில் நினைவுச் … Read more

பெங்களூருவில் வேலை பாக்குறீங்களா? இதோ சூப்பர் நியூஸ் உங்களுக்காக…!

இந்தியாவின் ஐடி நகரம் என்றால் பெங்களூரு நகரம் தான் முதலில் நினைவில் தோன்றும். தற்போது பல்வேறு நகரங்களில் ஐடி ஹப் (IT Hub) என்று சொல்லப்படும் அளவிற்கு ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆனால் இதன் தொடக்கப் புள்ளி என்று பார்த்தால் பெங்களூரு தான் முன்னால் வந்து நிற்கும். தற்போது சர்வதேச அளவில் மிக முக்கியமான நகராக திகழ்ந்து கொண்டிருக்கிறது. பெங்களூருவில் பணிச் சூழல் இங்கு இளைஞர்களுக்கு மட்டுமின்றி மூத்த குடிமக்களுக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் … Read more

ஆதாரம் இல்லை; பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்க: குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து டெல்லி போலீஸ் கோரிக்கை

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது மைனர் மல்யுத்த வீராங்கனை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 15) அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்த அறிக்கையில், மைனர் வீராங்கனை தந்தையின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எந்தவித ஆதாரமும் கிடைக்காததால் இந்த வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை ஜூலை 4-ம் தேதி நடைபெறும் என்று … Read more

கலவரம், தேர்வு முறைகேடுகளை தடுக்க இணைய சேவை முடக்கம் 3 ஆண்டில் அதிகரிப்பு

புதுடெல்லி: நாட்டில் இன மோதல், தேர்வு முறைகேடுகளை தடுப்பது உட்பட பல்வேறு காரணங்களுக்காக இணைய சேவை முடக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘இணைய சுதந்திர சம்மேளனம்’ மற்றும் ‘மனித உரிமை கண்காணிப்பு’ அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: பேராட்டங்கள், இன மோதல்களின் போது வதந்திகள் பரவுவதை தடுக்கவும், பள்ளி, கல்லூரி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கவும், அரசு பணி நியமனங்களுக்கான தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கவும், வன்முறைகளை தடுக்க மற்றும் மற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளின் போது … Read more

பி.எல்.சந்தோஷ்: தெற்கில் அடுத்த மெகா வியூகம்… ஒரே கல்லில் இரண்டு மாநிலங்கள்!

பாஜகவில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாக நாடாளுமன்ற நிலைக்குழு திகழ்கிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் தான் கட்சியில் எதிரொலிக்கும். தேர்தல் மற்றும் ஆட்சி ரீதியிலான விஷயங்களுக்கு பலமான அடித்தளம் இங்கிருந்து தான் போடப்படும். இக்கட்சியில் அதிகாரமிக்க நாற்காலியில் அமர்ந்திருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. இவரை நம்பர் ஒன் என்று சொல்லலாம். யார் இந்த பி.எல்.சந்தோஷ்? இவரைத் தொடர்ந்து அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் இருக்கின்றனர். நம்பர் 4 இடத்தில் இருப்பவர் தான் பி.எல்.சந்தோஷ். தேசிய அளவில் பாஜகவின் … Read more

அதிக சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது பிபர்ஜாய்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அதி தீவிர புயலான பிபர்ஜாய், அதிக சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையொட்டி மீட்பு நடவடிக்கைகளுக்காக முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 4 முதல் 5 மணியளவில் குஜராத்தின் மாண்ட்வி – பாகிஸ்தானின் கராச்சி இடையே பிபர்ஜாய் புயல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத் கடலோர பகுதிகளில் வசித்துவந்த சுமார் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் … Read more