எமனாக மாறும் மொபைல்கள்.. சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்து.. மளமளவென பரவிய தீ.. கேரளாவில் பகீர்

திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டைப் பையில் வைக்கப்பட்டிருந்த செல்போன் வெடித்து சிதறிய சம்பவம பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சூழலில் செல்போன்கள் என்பது மனிதர்களிடம் இருந்து பிரிக்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் ஸ்மார்ட்போன்கள் இல்லாத மனிதர்களை உலக அளவிலேயே விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் உச்சமாக ஸ்மார்ட்போன்கள் கருதப்பட்டாலும், இவற்றால் பல சமயங்களில் பெரிய அளவில் ஆபத்துகளும் ஏற்பட்டு விடுகின்றன. குறிப்பாக, தற்போது செல்போன்கள் … Read more

கூகுள் குட்டிச்சாத்தானால் காட்டுக்குள் சிக்கிய அருவிப் பிரியர்கள்..!

கூகுள் மேப் பார்த்து புதிய அருவியை தேடிச்சென்றவர்கள், காட்டுக்குள் வழி தவறிச்சென்று சிக்கிக் கொண்டனர். அப்போது அந்த குழுவில் ஒருவர் பாறையில் இருந்து 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே மலையிஞ்சி பகுதியில் வனத்திற்குள் அமைந்துள்ள கிழார்குன்று நீர்வீழ்ச்சியை காண கூகுள் மேப் உதவியுடன் சென்றவர்கள் தான் திக்கு தெரியாமல் திகைத்து நின்றவர்கள் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் போர்டு கொச்சியைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட சுற்றுலா … Read more

தமிழக திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்; மே.வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி'க்கு தடை நீக்கம்

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் இந்தப் படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு மாநில அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பாலிவுட் தயாரிப்பாளர் விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு … Read more

Karnataka: காங்கிரஸுக்கு அடுத்த தலைவலி.. எனக்குதான் துணை முதல்வர் பதவி.. போர்க்கொடி தூக்கும் பரமேஷ்வரா!

கர்நாடாக சட்டசபையின் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை பெங்களூருவில் நடைபெற இருக்கும் பதவியேற்பு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் … Read more

ஓடும் பஸ்ஸில் இப்படியா ? நடிகையிடம் கைவரிசை… தாடி பாய் தப்பி ஓட்டம்..!

பேருந்தில் பயணித்த நடிகை ஒருவரிடம் ஆபாச சேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கையும் களவுமாக சிக்கிய நிலையில்  காவல் நிலையம் அழைத்துச்சென்ற போது நடத்துனர் பிடியில் இருந்து அந்த தாடி வைத்த கேடி இளைஞர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது அந்த பேருந்தில் நடிகையும் மாடல் அழகியுமான நந்திதா பயணித்துக் கொண்டிருந்தார். அந்த பேருந்தில் அங்கமாளியில் ஏறிய கோழிகோட்டை சேர்ந்த சாவத் என்ற இளைஞர் … Read more

தந்தையின் நினைவிடத்தை மக்களுக்காக அகற்றிய ஒடிசா முதல்வர்

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மக்களின் நலன் கருதி தந்தையின் நினைவிடத்தை கடந்த 2019-ம் ஆண்டில் அகற்றினார். அந்த மாநில முதல்வரின் தன்னலமற்ற நடவடிக்கை இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒடிசாவை சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர் பிஜு பட்நாயக். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விமானப் படை விமானியாக பணியாற்றிய அவர், முன்னாள் பிரதமர் நேருவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். பல்வேறு சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக … Read more

The Kerala Story: தி கேரளா ஸ்டோரி படத்திற்கான தடை நீக்கம்… உச்சநீதிமன்றம் அதிரடி!

சுதிப்டோ சென் இயக்கியுள்ள திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இந்தப் படத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விபுல்ஷா தயாரித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி கடந்த 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் இந்து பெண்களை மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் ஆதரவும் எழுந்து வந்தது. படத்தை பார்த்த பிரதமர் மோடி படக்குழுவினரை பாராட்டி வந்தனர். இதேபோல் … Read more

டிகே சிவக்குமார் மட்டும் தான் துணை முதலமைச்சரா? பொங்கும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள்

Karnataka Election: டிகே சிவக்குமார் மட்டும் தான் துணை முதலமைச்சரா? பொங்கும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள்

சட்டை பாக்கெட்டில் செல்போன் வெடித்தது… சைனா போன் உஷார்..! உயிர் தப்பிய காட்சிகள்

சட்டை பாக்கெட்டில்  வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறி தீப்பற்றியதில் முதியவர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. டைம் பாம்மாக மாறிய சைனா செல்போன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு. பெரியவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் டைம்பாம் போல வெடித்து தீப்பற்றிய காட்சிகள் தான் இவை..! கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த எலியாஸ் என்ற 70 வயதான முதியவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென … Read more

இன்று கூடும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!!

பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ந்த 7 நாடுகளைக் கொண்ட ஜி-7 கூட்டமைப்பின் மாநாட்டை இந்த வருடம் ஜப்பான் நடத்துகிறது. உலகில் முதல் முறையாக அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோஷிமா நகரில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. ஜப்பான் பிரதமர் கிஷிடோவின் சொந்த ஊர் என்பதாலும், அணுஆயுத தாக்குதலுக்கு எதிரான உறுதிப்பாட்டை வலியுறுத்துவதற்கான சிறந்த இடம் என்பதாலும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஜி7 … Read more