காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தாக்குதல்: ஏகே-47 துப்பாக்கியால் 36 ரவுண்டுகள் சுட்ட தீவிரவாதிகள்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் ஏகே-47 துப்பாக்கியால் 36 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது கடந்த வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. மழைப்பொழிவு அதிகமாக காணப்பட்ட அந்த நேரத்தில் 3 பக்கங்களிலிருந்து தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். குறைந்தபட்சம் 36 ரவுண்டுகள் அவர்கள் துப்பாக்கியால் வாகனத்தை நோக்கி சுட்டுள்ளனர். இந்த … Read more

இந்தியா – சீனா ராணுவ உயர்அதிகாரிகள் இடையே 18வது சுற்று பேச்சுவார்த்தை

இந்தியா சீனா ராணுவ கமாண்டர்கள் மத்தியிலான 18 வது சுற்றுப்பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. எல்லைப் பிரச்சினையில் படைக்குறைப்பு உள்ளிட்ட 3 ஆண்டுகளாக தீராத பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண நேற்று இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் கிழக்கு லடாக் எல்லை அருகில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். 5 மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இரு நாடுகளின் ராணுவத்தினரும் எல்லையை நோக்கிய சாலைக் கட்டுமானப் பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன. ராணுவத் தளவாடங்கள் … Read more

காஷ்மீர், வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளின் போர் முனைகளில் பெண் அதிகாரிகள் நியமனம்

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் 108 பெண்களுக்கு கர்னல் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இவர்களில் 55 சதவீதம் பேர், காஷ்மீர், வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளின் போர் முனைகளில் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1992-ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் முதல்முதலாக பெண்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் குறுகிய கால பணி (எஸ்எஸ்சி) என்ற அடிப்படையில் 14 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச … Read more

கொச்சி வாட்டர் மெட்ரோ: இந்தியாவிலேயே இதுதான் ஃபர்ஸ்ட்… இதுல இவ்ளோ விஷயமிருக்கா?

கேரள மாநிலத்திற்கு இன்று பிற்பகல் பிரதமர் மோடி வருகை புரிகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நாளை (ஏப்ரல் 25) காசர்கோடு டூ திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். கூடவே நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை கொச்சியில் தொடங்கி வைக்கவுள்ளார். அதென்ன வாட்டர் மெட்ரோ? கேட்கவே புதிதாக இருக்கிறது அல்லவா? இதைப் பார்க்கும் போது அப்படியே மெட்ரோ ரயில் சேவை போலத் தான் காட்சி அளிக்கிறது. கொச்சியில் வாட்டர் மெட்ரோகண்ணாடியில் … Read more

நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ சேவை: பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் நாளை தொடங்கி வைக்கிறார்

கொச்சி: நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி கேரளாவின் கொச்சி நகரில் நாளை தொடங்கி வைக்கிறார். கேரளாவின் துறைமுக நகரான கொச்சியில் 2021 பிப்ரவரியில் ரூ.1,137 கோடியில் நீர்வழி மெட்ரோ திட்டம் தொடங்கப்பட்டது. கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் வகையில் 76 கி.மீ. தொலைவுக்கு 15 நீர் வழித் தடங்களில் மெட்ரோ சேவைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பத்து தீவுகளில் 38 நீர்வழி மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. … Read more

அஸ்ஸாமின் தீப்ரூகர் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்ட அம்ரித்பால் சிங்

பஞ்சாப் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித் பால் சிங், அஸ்ஸாமின் தீப்ரூகர் சிறையில் தனியறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் உளவுத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பாகிஸ்தான் தொடர்பு உள்ளிட்டமுக்கிய விவகாரங்களைக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 36 நாட்களாக பல்வேறு வேடங்களில் பல ஊர்களில் கண்காணிப்பு கேமராவில் அம்ரித்பால் நடமாடிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின.  இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அவர், அஸ்ஸாம் சிறைக்கு விமானம் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.பஞ்சாபில் மக்கள் அமைதிகாக்க கேட்டுக் கொண்ட … Read more

8 வயது சிறுவனை நீர் நிரம்பிய வாளியில் அமுக்கி மூச்சு திணற திணற கொன்ற திருநங்கை..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் அலாவுதீன் கோட்டி பகுதியில் வசித்து வருபவர் வாசீம் கான். இவர் ஆயத்த ஆடை தொழிலில் ஈடுபட்டு உள்ளார். அந்த பகுதியை சேர்ந்த பிசா கான் என்ற இம்ரான் என்ற திருநங்கை சீட்டுக்கு பணம் பிடிக்கும் தொழில் செய்து வந்து உள்ளார். இந்த நிலையில், வாசீம் கானின் மகனான 8 வயது சிறுவன் அப்துல் வகீத் கடந்த வியாழக்கிழமை மாலை மாயமாகி உள்ளான். இதுகுறித்து வாசீம் கான் காவல் நிலையத்தில் புகார் அளித்து … Read more

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான எச்.டி.குமாரசாமி (63) கடந்த சில தினங்களாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள … Read more

புனேவில் தனியார் பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து.. 4 பேர் பரிதாபமாக பலி..!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்ததுடன், 22 பேர் பலத்த காயமடைந்தனர். சதாராவில் இருந்து தானேவில் உள்ள டோம்பிவிலி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதிகாலை 3 மணியளவில்  நார்ஹே பகுதிக்கு அருகே புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, பின்னால்  சர்க்கரை ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இதில் பேருந்தில் பயணித்த … Read more

37 நாட்கள் தலைமறைவாக இருந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாபில் கைது

சண்டிகர்: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாபில் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் 37 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர், குருத்வாராவுக்கு உரையாற்ற வந்தபோது போலீஸ் பிடியில் சிக்கினார். அசாமின் திப்ருகர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பஞ்சாபின் அமிர்தசரஸ் அடுத்த ஜல்லபூர் கெரா கிராமத்தை சேர்ந்தவர் அம்ரித்பால் சிங் (30). பள்ளிப் படிப்பை முடித்த அவர், துபாயில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.கடந்த ஆண்டில் பஞ்சாப் திரும்பிய அவர், ‘வாரிஸ் … Read more