மதுபான ஊழல் வழக்கில் பஞ்சாப் முதல்வருக்கும் தொடர்பு: பாஜ குற்றச்சாட்டு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்  ஷெஹ்சாத் பூனவல்லா குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பிய கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் … Read more

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் நிஜமான மையம் காங்கிரஸ்: சசிதரூர் கருத்து

புதுடெல்லி:‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் உண்மையான மையமாக காங்கிரஸ் இருக்கும்’ என சசிதரூர் கூறி உள்ளார். காங். மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சசிதரூர் அளித்த பேட்டி: ராகுல் தகுதி நீக்க விவகாரம் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை அலையை உருவாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. ‘ஒன்றுபட்டால் நிலைத்திருப்போம்; பிரிந்தால் வீழ்வோம்’ என்ற பழமொழியின் உண்மையை பல கட்சிகள் உணரத் தொடங்கி உள்ளன. ராகுலை இப்போது ஆதரிக்கவில்லை என்றால், அடுத்ததாக பழிவாங்கும் அரசால் ஒவ்வொருவராக குறிவைக்கப்படுவார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. எதிர்க்கட்சிகள் … Read more

ராமநவமி ஊர்வலம் | மேற்கு வங்கத்தில் மீண்டும் வன்முறை – பாஜக எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி

ஹூக்ளி: மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் ஒருமுறை வன்முறை நிகழ்ந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் இன்று (02/03/2023) ராம நவமியை முன்னிட்டு பாஜக சார்பில் நடந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் இன்று நடந்த ராம நவமி ஷோபா ஊர்வலத்தில் பங்கேற்றார். ஊர்வலத்தின் இடையே, கல் எறியப்பட்டது. தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் பாஜக எம்எல்ஏ ஒருவர் காயமடைந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காயம் அடைந்த எம்எல்ஏ … Read more

பாஜ ஆட்சி காலத்தில் அமலாக்கத்துறை ரெய்டு எண்ணிக்கை 2,555% அதிகரிப்பு

புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசின் ஒன்பது ஆண்டு ஆட்சியில் அமலாக்கத்துறை ரெய்டுகளின் எண்ணிக்கை 2,555 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசின் கீழ் தன்னாட்சி விசாரணை அமைப்பாக செயல்படும் அமலாக்கத்துறை, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், பெமா மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம், தப்பியோடிய குற்றவாளிகள் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   கடந்த சில ஆண்டுகளாக அமலாக்க இயக்குனரகத்தின் அதிரடி சோதனைகளால், அன்னிய செலாவணி மேலாண்மைச் … Read more

தண்டனைக்கு தடைகோரி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு

புதுடெல்லி: சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அளித்த 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி … Read more

‘ஸ்டண்ட்’ செய்வதாக கூறி திருமண நிகழ்ச்சியில் இதெல்லாம் தேவையா?: பொம்மை துப்பாக்கி வெடித்ததால் மணமகள் பீதி

மும்பை: ‘ஸ்டண்ட்’ செய்வதாக கூறி திருமண நிகழ்ச்சியில் பொம்பை துப்பாக்கியை பயன்படுத்திய மணமகளின் மீது வெடித்தால் அவர் பீதிடைந்தார். திருமண நிகழ்ச்சிகளில் போட்டோ ஷோ நடத்துவதற்காக விதவிதமான ‘ஸ்டண்ட்’ செய்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் மஹாராஷ்டிராவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமகனும், மணமகளும் கையில் துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். பொம்மை துப்பாக்கி என்பதால், அந்த துப்பாக்கியின் பட்டனை ஆன் செய்ததும் அதிலிருந்து பட்டாசு தீப்பொறிகள் பறந்தன. தீவிரமான வெடி பொருளாக இல்லாவிட்டாலும் கூட, … Read more

நீச்சல் பயிற்சியின்போது பரிதாபம்: ஆற்றில் மூழ்கி தந்தை, மகன் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொட்டியூர் அருகே உள்ள கேளகம் பகுதியைச் சேர்ந்தவர் லிஜோ ஜோஸ் (33). அவரது மகன் நெபின் ஜோசப் (6). நேற்று லிஜோ ஜோஸ் தனது மகனுக்கு நீச்சல் சொல்லிக் கொடுப்பதற்காக அருகில் உள்ள ஆற்றுக்கு அழைத்துச் சென்றார். ஆற்றில் ஒரு தற்காலிக தடுப்பணை உள்ளது. அந்த பகுதியில் வைத்து லிஜோ தனது மகனுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத நெபின் ஜோசப் சகதியில் சிக்கிக்கொண்டான். உடனே அவனை … Read more

இவ்வார இறுதியில் புதிய நிதி ஆண்டின் முதல் நிதி கொள்கையை அறிவிக்க உள்ளது இந்திய ரிசர்வ் வங்கி!

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி இவ்வார இறுதியில் புதிய நிதி ஆண்டின் முதல் நிதி கொள்கையை அறிவிக்க உள்ளது. பணவீக்க விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு குறையாததால், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட உள்ளது. பணவீக்கத்தை மேலும் குறைக்க குறுகியகால கடன் வட்டி விகிதத்தை மேலும் 0.25% ரிசர்வ் வங்கி உயர்த்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரை ரிசர்வ் வங்கி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 6 முறை உயர்த்தி … Read more

ஒன்றிய பாஜக அரசின் கடந்த 4 ஆண்டில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு 505% அதிகரிப்பு: 9 ஆண்டுகளில் ரெய்டு எண்ணிக்கை 2,555% ஆக உயர்வு

புதுடெல்லி: ஒன்றிய பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகளில் அமலாக்கத்துறை வழக்குபதிவு 505% அதிகரித்துள்ள நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் ரெய்டுகளின் எண்ணிக்கை 2,555 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசின் கீழ் தன்னாட்சி விசாரணை அமைப்பாக செயல்படும் அமலாக்கத்துறை, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், பெமா மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம், தப்பியோடிய குற்றவாளிகள் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமலாக்க … Read more

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாளை மேல்முறையீடு செய்கிறார் ராகுல்காந்தி

டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாளை ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளைமேல்முறையீடு செய்கிறார். அவதூறு வழக்கில் கோர்ட் சிறை தண்டனை வழங்கியதை அடுத்து ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி செய்யப்பட்டார்.