இன்று முதல் அதிகரிக்கும் குறையும் பொருட்கள்.. முழு லிஸ்ட் ஒர் பார்வை..!

2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களுக்கு வரி திருத்தம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  இதன் மூலம் சில குறிப்பிட்ட பொருட்கள் ஏப்ரல் 1 முதல் விலை உயர்ந்தாலும், சில பொருட்களின் விலை மலிவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்று முதல் மலிவாகவும், விலை உயர்வு பெறும் பொருட்களைப் பற்றி இனி காண்போம். விலை உயரப்போகும் பொருட்கள் தங்க நகைகள் சிகரெட் வெள்ளி பாத்திரங்கள் பிளாட்டினம் கிட்சனில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் சிம்னி வைட்டமின்கள் உயர் … Read more

உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் : மக்கள் முகக்கவசம் அணிய மருத்துவர்கள் எச்சரிக்கை

கோவிட் பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். புதிய உருமாறிய கோவிட் XBB.1.16 மிதமான பாதிப்பையே கொண்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கோவிட் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென குர்கானில் உள்ள மெதாந்தா மருத்துவமனையின் தலைவரான டாக்டர் அரவிந்த் குமார் வலியுறுத்தியுள்ளார். பரிசோதனைகள் அதிகரித்துள்ளதால் பாதிப்புகளும் அதிகளவில் தெரிய வருவதாகக் கூறிய அவர், பாதிப்புகள் தீவிரம் குறைந்தவையாக காணப்படுவதாகக் குறிப்பிட்டார். … Read more

2030ம் ஆண்டிற்குள் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு: புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை வெளியீடு

புதுடெல்லி: வரும் 2030ம் ஆண்டிற்குள் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதியை எட்டுவதை இலக்காக கொண்டு புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் வெளிநாட்டு வர்த்தக கொள்கையை   ஒன்றிய அரசு வெளியிட்டு வருகிறது. கடந்த 2015ல் வகுக்கப்பட்ட 5 ஆண்டு கொள்கை,  கடந்த ஆண்டு செப்டம்பரில், 2023 மார்ச் 31 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், … Read more

ராகுல் தகுதி நீக்கம் அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்: பீகார் சட்டப்பேரவையில் தேஜஸ்வி ஆவேசம்

பாட்னா: ராகுல் தகுதி நீக்கம் குறித்து பீகார் சட்டப்பேரவையில் பேசிய துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ்,’ காலம் உரிய பதில் அளிக்கும். அப்போது அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்’ என்றார். பீகார் சட்டப்பேரவையில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:   என் தந்தை ரயில்வே அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் நடந்த வழக்கில் நான் சேர்க்கப்பட்டேன். அப்போது அரசியலில் ஈடுபடும் வயதைக்கூட நான் எட்டவில்லை. அந்த வழக்கில் இப்போது எனது வீடு, எனது சகோதரிகளின் வீடுகளில் சோதனை … Read more

இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்..!!

ஏப்ரல் 1 முதல் பல விதிகள் மாற்றப்பட உள்ளன. என்ன விதிகள் மாறுகின்றன மற்றும் அதன் தாக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 1. 2023 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி தொடர்பான மாற்றங்கள் இன்று ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும். முன்பு, பழைய மற்றும் புதிய வரி விதிகளின் கீழ் வருமான வரி வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தது. இப்போது புதிய வரி விதிப்பில் வருமான வரி வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.7 … Read more

ஓராண்டு சிறை தண்டனை சித்து இன்று விடுதலை

பாட்டியாலா: ஓராண்டு சிறை தண்டனை காலத்திற்கு முன்னதாகவே நன்னடத்தை அடிப்படையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சித்து இன்று விடுதலையாகிறார்.  கடந்த  1988ம் ஆண்டு நடந்த சாலை  விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான  சித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கடந்தாண்டு மே 20ம் தேதி முதல்  பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டு சிறை தண்டனை வரும் மே 16ம்  தேதியுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், கிட்டத்தட்ட 45 நாட்கள் முன்னதாக … Read more

மோடியின் கல்விச் சான்றிதழ் கேட்டு மனு – கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் : குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு

அகமதாபாத்: பிரதமர் மோடியின் பட்டப் படிப்புகல்விச் சான்றிதழ் நகல்களை பிரதமர் அலுவலகம் வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்ட குஜராத் உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மனு தாக்கல் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. இந்நிலையில், பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு சான்றிதழ் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) வழங்க உத்தரவிடக் கோரி, … Read more

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் தாக்கல்

புதுடெல்லி: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களதேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதனை ஆணையம் விரைவில் பரிசீலிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத்தலைமையை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைஎதிர்த்துதாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த தனிநீதிபதி குமரேஷ் பாபு,‘‘கடந்த ஆண்டு ஜூலை 11ம் … Read more

தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்

மாண்டியா: எனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் என்று கன்னட நடிகை ரம்யா ஸ்பந்தனா தெரிவித்தார். கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களவை முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், கன்னட நடிகையுமான ரம்யா ஸ்பந்தனா, தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘எனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். நாடாளுமன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றேன். அந்த நேரத்தில், ராகுல் காந்தி எனக்கு தைரியம் அளித்தார். அதன்பின் … Read more

கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி

புதுடெல்லி:  வடகிழக்கு டெல்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில்,  ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது அங்கு  9 பேர் மயக்கமடைந்து உயிருக்கு போராடினர்.  இதில் 6 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  மற்ற மூன்று பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.  போலீசார் நடத்திய விசாரணையில் இரவில் தூங்கும்போது கொசுவை விரட்டுவதற்காக ஏற்றி வைத்த கொசுவர்த்தி சுருள் படுக்கையின் மீது கவிழ்ந்து விழுந்து தீ பற்றியது தெரியவந்தது.