கொரோனா: 3 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் பாதிப்பு; ஒன்றிய அரசு ரெட் அலர்ட்.!

கடந்த 6 மாதங்களுக்கு பிறகு, இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா அதிகரிப்பு இந்தியாவில் கடந்த சிலநாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,000, 2,000 என உயர்ந்து கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறும், தடுப்பூசி இயக்கத்தை அதிகப்படுத்துமாறும் ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சகம், மாநிலங்களுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா … Read more

போலீஸ் வாகனம் மீது குண்டு வீச்சு பாகிஸ்தானில் 4 போலீசார் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மார்வாட் நகரில் காவல்நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நேற்று காலை தாக்குதல் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போலீஸ் வாகனத்தில் போலீசார் விரைந்தனர். அப்போது போலீஸ் வாகனத்தின் மீதும் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவங்களில் 4 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு பாகிஸ்தான்  தலிபான்கன் பொறுப்பேற்றுள்ளனர்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி சர்ப்ரைஸ் விசிட்

புதுடெல்லி: நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி சர்ப்ரைஸ் விசிட் மேற்கொண்டு, பணிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது. இது, சுமார் 96 வருடங்களுக்கு முன் ஜனவரி 18-ல் திறக்கப்பட்டு இன்று வரை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் கூடுதல் வசதிகளுக்காக புதிய கட்டிடம் … Read more

ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின்போது கோவிலில் பற்றிய தீ: அலறி அடித்துக் கொண்டு வெளியேறிய பக்தர்கள்

அமராவதி: ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின் போது கோயிலில் தீப்பற்றியதால் பக்தர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். ஸ்ரீராம நவமி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் தனுகு மண்டலத்தில் துவா கிராமத்தில் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. அந்த கோயிலில் ஸ்ரீராம நவமிக்கான பூஜையையொட்டி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருப்பதற்காக பனை ஓலையை கொண்டு கோயில் முழுவதும் நிழற்பந்துகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று … Read more

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ

அகர்டல: திரிபுரா சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ சிக்கினார். பேரவை நடந்து கொண்டிருந்த போது பாஜக எம்எல்ஏ ஜாதவ் லால் நாத் ஆபாச படம் பார்த்ததால் பரபரப்பு நிலவியது. விளக்கம் கேட்டு, பாஜக எம்எல்ஏ ஜாதவ் லாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹவுரா ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை: போலீஸ் குவிப்பு – மம்தா கண்டனம்

ஹவுரா: இன்று (மார்ச் 30) நாடு முழுவதும் ஸ்ரீ ராம நவமி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதனால் சம்பவ இடத்தில் வாகனங்கள் மீது கற்கள் வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் இருந்தனர் வன்முறையில் ஈடுபட்டவர்கள். வன்முறையை தடுக்கும் நோக்கில் அந்த இடத்தில் போலீஸ் படை அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளது. இதை செய்தவர்கள் தேச விரோதிகள் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். … Read more

ராமநவமி கொண்டாட்டத்தில் விபரீதம்: இந்தூரில் கோயில் கிணறு இடிந்து விழுந்து 11 பேர் பலி

இந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்தனர். ராமநவமி கொண்டாட்டத்தின்போது கிணற்றை மூடியிருந்த தடுப்பு இடிந்து விழுந்தில் 30 பக்தர்கள் சிக்கினர். பலேஸ்வர் மகாதேவ் ஜுலேலால் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்தது. ராமநவமி கொண்டாட்டத்தின் போது அளவுக்கு அதிகமான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் விபரீதம் ஏற்பட்டது.

குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அனைவரும் விடுவிப்பு

ஜெய்ப்பூர்: 2008-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி ஜெய்ப்பூர் நகரில் 12 நிமிட இடைவெளியில் தொடர்ந்து 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 71 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முகமது சைப் உள்ளிட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. சான்பாஷ் என்பவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாதததால் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த … Read more

ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டது இந்திய ஹஜ் குழு

டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மற்றும் இதர மாநில ஹஜ் குழுக்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியா செல்லும் புனிதப் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஹஜ் தன்னார்வ தொண்டர்களை இந்திய ஹஜ் குழு அனுப்புவது வழக்கமாகும்.  இந்த ஆண்டு ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை (சுற்றறிக்கை எண்.6)‘www.hajcommittee.gov.in’ என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. ‘www.hajcommittee.gov.in’ என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தெரிவு … Read more

500 ரூபாய் நோட்டுகளை வீசிய டி.கே.சிவகுமார்

பெங்களூரு: கர்நாடகாவில் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் நேற்று முன்தினம் மண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற ‘மக்களின் குரல்’ பேரணியில் பங்கேற்றார். ஸ்ரீரங்கப்பட்டணா அருகே உள்ள பெவினஹள்ளியில் திறந்த பேருந்தில் நின்றவாறு சென்ற சிவகுமாரை மேளம் முழங்கியவாறு வரவேற்றனர். இதனால் உற்சாகம் அடைந்த சிவகுமார் 500 ரூபாய் நோட்டுகளை மேளக் கலைஞர்கள் மீது வீசினார். இந்த வீடியோ வைரலானது. இதனை பாஜக, மஜத கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. கர்நாடக … Read more