கருப்பு உடையணிந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் – அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்

புதுடெல்லி: ராகுல் காந்தி பதவி தகுதி இழப்பு, தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பிரதமர் மோடி குறித்து பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் நீதிமன்றம், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. … Read more

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படும்: பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி விநியோகிக்கப்படும் என பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் மானிய விலையில் வழங்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத கால சம்பளம் வழங்கப்படும். காங். ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 716 ஊழியர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவர். வீடு கட்டுவதற்காக கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கியவர்களின் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என ரங்கசாமி அறிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று ஆலோசனை

டெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். ராகுல் காந்தி தகுதிநீக்கம், அதானி குழும முறைகேடு உள்ளிட்ட விவகாரத்தில் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அவர் அமைச்சராக பொறுப்பு வகித்தபோது டெண்டர்கள் வழங்கியதில் ரூ.800 கோடி முறைகேடு நடந்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான விசாரணையை தமிழ்நாடு … Read more

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

குட்கா தடையை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மனு ஏப்.14க்கு ஒத்திவைப்பு..!!

டெல்லி: குட்கா தடையை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மனு ஏப்.14க்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை ஒத்திவைக்கக் கோரி ஏற்கனவே புகையிலை நிறுவனங்கள் கடிதம் கொடுத்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்.10க்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்.10க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக கூறி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, கடந்த 2018 மே மாதம் 22ம் தேதி நடந்த போராட்டத்தில் 13 பேர் காவல்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இதன் பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடியில் உள்ள … Read more

தகுதி நீக்கத்தை அடுத்து அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்

டெல்லி: அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு ராகுல் காந்தி 2005ம் ஆண்டு முதல் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராகுல் காந்தி 2005ம் ஆண்டு முதல் வசித்துவரும் துக்ளக் லேன் பங்களாவை காலி செய்யும்படி மக்களவை வீட்டுக் குழுவில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் … Read more

கொரோனா 7 நாளில் 78% அதிகரிப்பு: நாடு முழுவதும் ஏப். 10, 11ல் தடுப்பு ஒத்திகை

புதுடெல்லி: கடந்த 7 நாளில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வரும் ஏப். 10, 11ம் தேதியில் கொரோனா தடுப்பு ஒத்திகைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரபடி புதியதாக 1,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த பாதிப்பானது கடந்த 210 நாட்களில் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பாகும். கடந்த ஏழு நாட்களில் ஏற்பட்ட பாதிப்புகளின்படி … Read more

டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!

டெல்லி: எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசியது சர்ச்சையானது. மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்ததாக கூறி குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி, ராகுல் … Read more