149 நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் 1,890 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

புதுடெல்லி: நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந் துள்ளது. 149 நாட்களில் இல்லாத அளவுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1,890-ஆக உயர்ந்துள்ளது. 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் தொடங்கியது. அதன் பின்னர் கோடிக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. நாட்டில் நேற்று காலை 8 … Read more

இளைஞர் காங். சார்பில் இன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்.. நாடாளுமன்ற வளாகம் சுற்றிலும் போலீசார் குவிப்பு..!

இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற இருப்பதையொட்டி நாடாளுமன்ற வளாகம் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று ராகுலின் தொகுதியான வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் கைகளில் தீப்பந்தங்களை ஏந்திப் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இன்று நாடாளுமன்றத்தில் கருப்பு பட்டை அணிந்து வர காங்கிரஸ் … Read more

2 நாட்கள் பயணமாக இன்று மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

கொல்கத்தா : 2 நாட்கள் பயணமாக இன்று மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இல்லம், ரவீந்திர நாத் தாகூரின் ‘சாந்தி நிகேதன்’ உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார்.

ஹைதராபாத் விடுதலைக்கு பாடுபட்டவர்களை மறந்தது காங்கிரஸ் – மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு

பீதர்: கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் ஹைதராபாத் விடுதலைக்காக பாடுபட்டவர்களை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டதாக குற்றம்சாட்டினார். நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் மறைந்த சர்தார் வல்லபபாய் பட்டேல் மற்றும் கோராட்டா தியாகிகள் நினைவிடத்தை பீதர் மாவட்டத்தின் கோராட்டா கிராமத்தில் நேற்று திறந்த வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: மே 9, 1948 அன்று … Read more

காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய 9 நாட்களாக போலீசார் தேடுதல் வேட்டை!

காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்யமுடியாமல் பஞ்சாப் போலீசார் திணறி வருகின்றனர். அவர் நாளொரு வேடத்தில் ஹரியானா, டெல்லி என்று பல இடங்களில் தென்பட்டதாக கூறப்படுகிறது. கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அம்ரித்பாலுக்கு அடைக்கலம் தந்து உதவிய நபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நேற்று பல்வந்த் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் அம்ரித்பாலின் கூட்டாளி கோரக் பாபாவை தப்பிக்க உதவியதாக கூறப்படுகிறது. கோர்க்கா பாபா கைது செய்யப்பட்டதையடுத்து … Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார்

திருவனந்தபுரம் : புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகரும், முன்னாள் எம்பியுமான இன்னசென்ட் காலமானார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சுவாச கோளாறு காரணமாக மார்ச் 3 முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

ஏப். 1 முதல் நடைமுறைக்கு வருகிறது… ரூ.7 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால்…

ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்ட நடைமுறை அமுலுக்கு வருகிறது. தற்போதைய நடைமுறையின் படி, புதிய வரிமுறையை தேர்ந்தெடுப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரையில் இருந்தால் அவர்கள் வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதுவே, அவர்களது வருமானம் ரூ.7,00,100- ஆக இருந்தால், அதாவது ஆண்டு வருவாயில் வெறும் ரூ.100 கூடியிருந்தாலும், அவர்கள் ரூ.25,010 வரி செலுத்த வேண்டும். … Read more

36 செயற்கைக் கோளை சுமந்து சென்ற இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட் பயணம் வெற்றி

சென்னை: இங்கிலாந்து ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களும் இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட்மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவன செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3)ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த, இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (Newspace India Limited) நிறுவனம் சுமார் ரூ.1,000 கோடியில் ஒப்பந்தம் செய்தது. முதல்கட்டமாக, 36 செயற்கைக் கோள்கள் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த அக்.23-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன. 2-வதுகட்டமாக 36 செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான பணிகள் தொடங்கின. ஆந்திர … Read more

புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் கொலை.. போலீசார் விசாரணை!

புதுச்சேரி வில்லியனூரில் பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். கணுவாப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமரன் என்பவர் அங்குள்ள பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்த போது, அங்குவந்த மர்ம கும்பல் திடீரென அவர் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் நிலைகுலைந்து கீழே சரிந்த அவர், சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்த போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றாவாளிகளை தீவிரமாக … Read more

மபியில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜ வெல்லும்: ஜே.பி.நட்டா உறுதி

போபால்: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அறுதி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதிபட தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜவின் 15 ஆண்டுகால ஆட்சியை அகற்றி விட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வராக பதவியேற்றார். ஆனால் உள்கட்சி பூசல் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்கள் 22 பேருடன் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். இதையடுத்து பாஜ மீண்டும் ஆட்சியமைக்க … Read more