ராகுலுக்கு தண்டனை அதிகமானது: பிரசாந்த் கிஷோர் கருத்து

பாட்னா: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ராகுல் காந்தி விஷயத்தில் நான் கருத்து சொல்வதற்கு சட்ட நிபுணர் கிடையாது. ஆனால் சட்டத்தின் செயல்பாட்டுக்கு உரிய மரியாதையுடன் கூற வேண்டும் என்றால், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகையானது என்று தோன்றுகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு பெரிய மனது காட்டியிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கட்சியினர் மேல் முறையீடு செல்லும் வரைக்கும் சில நாட்கள் பொறுத்திருந்து தகுதி இழப்பு முடிவை அமல்படுத்தியிருக்க வேண்டும். … Read more

பிறந்த நாளில் உருக்கம் நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் காதல் கடிதம்

புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தனது பிறந்தநாளையொட்டி  நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு காதல் கடிதம் எழுதியுள்ளார். பிரபல தொழிலதிபர் மனைவியிடம் ரூ. 200 கோடி மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்கில் கைதாகி டெல்லி மண்டோலி சிறையில் இருப்பவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்சுக்கு ரூ. 10 கோடிக்கு பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார். இந்நிலையில், தனது பிறந்தநாளையொட்டி ஜாக்குலினுக்கு அவர் காதல் கடிதம் எழுதியுள்ளார். அவர் மிக அழகான பெண் என்று … Read more

ராகுலுக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனைக்கு தடைபெறாதது ஏன்?: பாஜ கேள்வி

பாட்னா: ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை பெறாதது ஏன் என்று பா.ஜ மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர் சந்திப்பிற்கு பின், பீகார் மாநிலம், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த பாஜவின் மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘கர்நாடக தேர்தலில் இந்த பிரச்னையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்காக தான், அவதூறு வழக்கில் ராகுலுக்கு  வழங்கிய  தண்டனைக்கு உடனடியாக தடை பெறுவதற்கு … Read more

2 ஆண்டு சிறை… எம்பி பதவி பறிப்பு என்னவாகும் ராகுலின் அரசியல் எதிர்காலம்?: 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்

புதுடெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை, அதைத் தொடர்ந்து எம்பி பதவி பறிப்பு போன்ற நடவடிக்கையால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? அவர் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படுமா? என்பது குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் ராகுலுக்கு மக்கள் ஆதரவு பெருகி உள்ளது. பாஜவுக்கு எதிராக சக்திவாய்ந்த தலைவராக ராகுல் … Read more

எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

புதுடெல்லி: சிறை தண்டனைப் பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் மக்கள் பிரதிநித்துவ சட்டப்பிரிவு 8ன் உட்பிரிவான 3ஐ ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அபா.முரளிதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,‘‘இரண்டாண்டு அல்லது அதற்கு மேலாக சிறை தண்டனை விதிக்கப்பட்டால், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். குறிப்பாக மக்கள் பிரதிநித்துவ சட்டம் பிரிவு 8ன் உட்பிரிவு 3ல் தானாக … Read more

ராகுலுக்கு அரசு பெரிய மனதை காட்டியிருக்க வேண்டும்

தனது சொந்த மாநிலமான பீகாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோர்  கூறுகையில், ‘‘நான் சட்ட வல்லுநர் கிடையாது. ஆனால் சட்டத்தின் செயல்பாட்டுக்கு உரிய மரியாதையுடன் கூறுகிறேன் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகையானது. தேர்தல் நேரத்தின்போது மக்கள் அனைத்து விஷயங்களையும் கூறுகிறார்கள். இது முதல் நிகழ்வு கிடையாது, கடைசியாக இருக்கப்போவதும் இல்லை. அவதூறு வழக்குக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை என்பது மிகவும் அதிகப்படியானது. மறைந்த அடல் பிகாரி வாஜ்பாயின் பிரபல வரியான … Read more

'மை பேபி, உன் அன்பு விலை மதிப்பற்றது' – ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சிறையிலிருந்து காதல் கடிதம் எழுதிய சுகேஷ்

டெல்லி: டெல்லி திஹார் சிறையில் இருக்கும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார். ‘எனது பேபி ஜாக்குலின் பெர்னாண்டஸ்’ எனத் தொடங்கும் அக்கடிதத்தில், “என் பொம்மா இந்த பிறந்த நாளில் உன்னை ஆயிரம் மடங்கு மிஸ் செய்கிறேன். என்னைச் சுற்றியிருக்கும் உனது எனர்ஜியையும் மிகவும் மிஸ் செய்கிறேன். அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால், என்மீது உனக்கு இருக்கும் அன்பு ஒருபோதும் முடிவடையாதது என்பது எனக்குத் தெரியும். உங்கள் அழகான … Read more

பெண் ஐபிஎஸ் அதிகாரியை மணந்தார் பஞ்சாப் அமைச்சர்

சண்டிகர்: பஞ்சாப் ஆம் ஆத்மி அரசின் கல்வி அமைச்சர்  ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ்,  ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவை நேற்று திருமணம் செய்து கொண்டார். பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ். இவர் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள அனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி சார்பாக முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார். தற்போது மாநில கல்வி துறை அமைச்சராக இருந்து வருகின்றார். இந்நிலையில் அமைச்சருக்கும், அரியானா மாநிலத்தை … Read more

“சாவர்க்கர் போல் மன்னிப்புக் கேட்க மாட்டேன், நான் காந்தி” – ராகுல் காந்தி

டெல்லி: அதானி குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் குறித்த எனது கேள்விகளை திசைதிருப்பவே தகுதி நீக்கம் மற்றும் சிறைத்தண்டனை போன்ற நாடகம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக நான் கவலைப்படவே இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை, தொடர்ந்து எம்.பி.பதவி பறிப்புக்குப் பிறகு முதன் முறையாக ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “பிரதமர் மோடிக்கும் தொழில் அதிபர் அதானிக்கும் உள்ள … Read more

வாக்கு வங்கிக்காக, சில கட்சிகள் மொழி பிரச்சனைகளை எழுப்புகின்றன்றன – பிரதமர் மோடி

அரசியல் சுயலாபம், வாக்கு வங்கிக்காக, சில கட்சிகள் மொழி பிரச்னைகளை எழுப்புவதாகவும், கிராமப்புற, ஏழை மாணவர்கள், மருத்துவர், பொறியாளராக உருவாவதை அவர்கள் விரும்புவதில்லை என்றும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் சிக்கபள்ளாபூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அனைவரது முயற்சியும், பங்களிப்புமே 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். முன்னதாக, பாரத ரத்னா விருதினை பெற்ற புகழ்பெற்ற பொறியாளரான விஸ்வேஸ்வரையாவின் … Read more