கட்கரியை மிரட்டிய கர்நாடக சிறைக்கைதி சிக்கினார்

நாக்பூர்:   நாக்பூரில்  உள்ள, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு கடந்த 21ம்  தேதியன்று அடுத்தடுத்து மூன்று போன் அழைப்புகள் வந்தன. அதில் பேசிய மர்ம  ஆசாமி, ரூ.10 கோடி கேட்டு ஒன்றிய அமைச்சருக்கு  கொலை மிரட்டல் விடுத்தார்.  அதெற்கென யுபிஐ ஐடியில், பணத்தை செலுத்துமாறும் கூறியிருந்தார். இந்த  வழக்கில் போன் அழைப்பை வைத்து ஆய்வு ெசய்ததில் கர்நாடகா மாநிலத்தின் பெலகாவியில் உள்ள சிறையில் உள்ள கைதி ஜெயேஷ் பூஜாரி என்பது தெரியவந்தது.  சோதனை செய்ததில், மங்களூரூவில் … Read more

கேஸ் மானியம் ரூ.200ஆக அதிகரிப்பு!!

சமையல் எரிவாயு மானியம் ரூ.200 ஆக அதிகரித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சமையல் … Read more

உடனே அப்ளை பண்ணுங்க..!! சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு..!!

மும்பையை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி Apprentice பிரிவில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 230 பணியிடங்களும், புதுச்சேரியில் ஒரு பணியிடமும் காலியாக உள்ளன. மீதமுள்ள இடங்கள் பிற மாநிலங்களில் காலியாக இருக்கின்றன. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் பணி இடம்: இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாட்டில் … Read more

2025-ம் ஆண்டுக்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி – பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உலக காசநோய் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: காசநோயை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில், காசநோய்க்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இந்தியா, ஊட்டச்சத்தை மேம்படுத்துதல், புத்தாக்கத்தின் மூலம் சிகிச்சை, தொழில்நுட்பத்தின் முழுப்பயன்பாடு, ஆரோக்கியம், நோய் தடுப்பு, ஃபிட் இந்தியா, யோகா போன்ற பல முன்னெடுப்பு திட்டங்களை செய்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் … Read more

எம்.பி. பதவியை இழப்பதால் ராகுல்காந்திக்கு மேலும் சோதனைகள்…!

இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்.பி.பதவியை இழப்பதுடன் மேலும் பல்வேறு சோதனைகளுக்கும் ஆளாகியுள்ளார். தண்டனை மீதான தடையுத்தரவு பெறாவிடின் எட்டு ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டநிபுணர்கள் கூறுகின்றனர். எம்பி பதவி இழந்ததால் அவருடைய வயநாடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.அங்கு இடைத்தேர்தல் நடைபெறலாம். ஆயினும் மேல் முறையீடு செய்வதற்கு ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் இருப்பதால் அதுவரை தேர்தல் ஆணையம் … Read more

புதிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை: நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: புதிய ஓய்வூதிய திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் ஏற்கும் படியாக மேம்படுத்த நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு  நாடு முழுவதும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பாஜ ஆட்சி செய்யாத ராஜஸ்தான்,  சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய  மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர சட்டப்பேரவையில் தீர்மானம்  நிறைவேற்றி ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளன. … Read more

சுங்க சாவடிகளுக்கு மாற்றாக 6 மாதத்தில் ஜிபிஎஸ் கட்டண முறை அறிமுகம்: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டில் சுங்கசாவடிகளுக்கு மாறாக ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறைகள் அடுத்த 6 மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  டெல்லியில் தொழில்கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியதாவது:  அரசுக்கு சொந்தமான தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் தற்போது ரூ.40,000 கோடி வருவாய் கிடைக்கிறது. அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இது ரூ.1.40லட்சம் கோடியாக உயரும். நாட்டில் உள்ள சுங்கசாவடிகளுக்கு … Read more

பணம் செலுத்தாத கணக்குகளின் ப்ளூ டிக்கை நீக்க ட்விட்டர் முடிவு?

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்று தான் வணிக நோக்கில் ப்ளூ டிக் பெற்ற பயனர் கணக்குகளிடம் இருந்து சந்தா வசூலிப்பது. அதன்படி ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் சந்தா செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்ற அடையாளத்திற்கான ப்ளூ டிக்கை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர், ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் … Read more

அதானி விவகாரத்தில் விசாரணை கேட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி 40 எம்பிக்கள் அதிரடி கைது

புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி போராட்ட பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த 40  எம்பிக்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.  அதானி முறைகேடு குறித்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற விசாரணை கோரி எதிர்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினார்கள். தடையை மீறி … Read more

கொரோனா காலத்தில் பரோல் பெற்ற கைதிகள் 15 நாளில் சரணடைய உத்தரவு: உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: கொரோனா காலத்தில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த கைதிகள் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   இந்த உத்தரவின் படி, 15 நாட்களுக்குள் கொரோனா காலத்தில் பரோல் / ஜாமீனில் வெளியே சென்றோர் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் எனவும், இதனை மாநில நீதிமன்றங்கள், சிறை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவர்கள் சரணடைந்த … Read more