தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சஸ்பெண்ட்..!!

ஆந்திர மாநில சட்டசபை கூட்டத் தொடர் அமராவதியில் கடந்த 3 தினங்களுக்கு முன் தொடங்கியது.அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேச சபாநாயகர் தம்மேனேனி சீதாராம் அனுமதி அளித்தார். அப்போது தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. ஏலூரி சாம்பசிவராவ் பேச முயன்றார். இதனால் அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தொடர்ந்து பேச அனுமதி வழங்க கோரி கோஷமிட்டனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களும் எதிர்கோஷம் எழுப்பியதால் … Read more

உணவு பாதுகாப்பு சவால்களை சமாளிக்க சிறுதானியங்கள் உதவும் – சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: சர்வதேச சிறுதானியங்கள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது நினைவு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்தது. இது நம் நாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். சர்வதேச அளவில் சிறுதானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்தியா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை … Read more

வடமாநில தொழிலாளர் தாக்கப்படுவதாக போலி வீடியோ பரப்பிய யூடியூபர் சரண்

பாட்னா: தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள்  தாக்கப்படுவதாக போலி வீடியோ பரப்பிய மனீஷ் காஷ்யப் பீகார் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற  வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோக்கள் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இது போலி வீடியோ என்றும் வடமாநில தொழிலாளர்கள் அச்சப்படத்தேவையில்லை என்றும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலி வீடியோ பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் … Read more

கோரிக்கையை மகாராஷ்டிர அரசு ஏற்றதால் வெங்காய விவசாயிகள் போராட்டம் வாபஸ்

மும்பை: இந்தியாவில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலை வகிக்கிறது. தற்போது மிக அதிக விளைச்சல் காரணமாக வெங்காய விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், வெங்காய விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி 200 கிலோ மீட்டருக்கு பேரணி மேற்கொள்ளத் தொடங்கினர். அந்தப் பேரணி மும்பையை நாளை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குவிண்டாலுக்கு ரூ.600 உதவித் தொகை, நபார்டு மூலம் குவிண்டாலை ரூ.2000-க்கு … Read more

”இந்திய ஜனநாயகத்தின் வெற்றி சிலரைத் துன்புறுத்துகிறது..” – பிரதமர் மோடி..!

நாட்டை மோசமான நிலையில் காட்டுவது, அவநம்பிக்கையாக பேசுவது போன்ற தாக்குதல்களில் சிலர் ஈடுபட்டு வருவதாக பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார். இந்தியாடுடே கான்கிளேவ் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவின் ஜனநாயகம், அதன் அமைப்புகளின் வெற்றியை சிலரால் ஜீரணிக்க முடியாததால் நாட்டை மோசமாக காட்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். இந்தியாவில் இதுவரை இருந்த அனைத்து அரசுகளும் தங்கள் திறமைக்கு ஏற்ப செயல்பட்டு முடிவுகளைப் பெற்றதாகவும், தமது தலைமையிலான அரசு புதிய முடிவுகளை எடுக்க விரும்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார். Source … Read more

அசாமில் 2 முறை நிலஅதிர்வு

கவுகாத்தி:  அசாமில் நேற்று காலை திடீரென லேசான நிதி அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். காலை 9மணிக்கு ஏற்பட்ட இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6புள்ளிகளாக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டது. இது 2.8ரிக்டராக பதிவாகி இருந்தது. ஜோர்ஹத் மாவட்டத்தில் உள்ள திதாபர் அருகே 50கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. நிலஅதிர்வினால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. நாகலாந்தின் வடமேற்கு பகுதியிலும் … Read more

சஹாரா நிதியில் ரூ.5,000 கோடி ஒதுக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு

புதுடெல்லி: சஹாரா குழும நிதி முறைகேடு வழக்கில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைத் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக, செபி கணக்கில் சஹாரா குழுமம் செலுத்தியுள்ள ரூ.24,000 கோடியிலிருந்து ரூ.5,000 கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுஉச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. சஹாரா ரியல் எஸ்டேட் கார்ப்பரேசன் மற்றும் சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேசன் ஆகிய இரு நிறுவனங்கள் நிதி திரட்டலில் விதிமுறைகளை மீறியது 2010-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை … Read more

சிபிஎஸ்இ எச்சரிக்கை ஏப்ரல் 1க்கு முன்பாக பள்ளிகளை திறக்காதீர்

புதுடெல்லி: வரும் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பாக அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டாமென சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொடங்கியது. 10ம் வகுப்பிற்கு வரும் 21ம் தேதியும், 12ம் வகுப்பிற்கு ஏப்ரல் 5ம் தேதியும் தேர்வு முடிவுகிறது. இதற்கிடையே, வரும் கல்வியாண்டில் 10, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டியே சில பள்ளிகள் இப்போதே … Read more

வரும் 21ம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்து கொடுக்க வேண்டும்..!!

டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டில் புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. அதன்படி டெல்லியை 32 மண்டலங்களாகப் பிரித்து 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இதில் ரூ. 100 கோடி வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்பிருப்பதாகக் கூறி, அவருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை … Read more

எல்லையில் சீன அச்சுறுத்தல் நீடிக்கிறது – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

புதுடெல்லி: இந்தியா டுடே குழுமம் சார்பில் டெல்லியில் கடந்த இரு நாட்களாக சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய, சீன உறவு சவாலான, அசாதாரண சூழ்நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக சீன எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், படைகள் வாபஸ் நடவடிக்கைகளுக்குப் பிறகும் நிலைமை சீராகவில்லை. இந்திய ராணுவத்தின் கணிப்பின்படி, எல்லையில் சீன ராணுவத்தின் அச்சுறுத்தல் நீடிக்கிறது. சீனாவின் புதிய … Read more