ராஜஸ்தான் பேரவை தேர்தலில் மீண்டும் கெலாட் முதல்வர் வேட்பாளர்?.. காங். வெளியிட்ட வீடியோவால் பைலட் அதிர்ச்சி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பேரவை தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அசோக் கெலாட் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதால், சச்சின் பைலட் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கும், அசோக் கெலாட் ஆதரவாளர்களுக்கும் இடையே கட்சிக்குள் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. வரும் சில மாதங்களில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக மீண்டும் அசோக் கெலாட் முன்னிருத்தப்படுவாரா? அல்லது … Read more

இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு குழாய் மூலம் டீசல் விநியோகிக்கும் ‘நட்புறவுக் குழாய்’ தொடக்கம்..!

இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு குழாய் மூலம் டீசல் விநியோகிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி – வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர். 377 கோடி ரூபாய் செலவில் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருந்து வங்கதேசத்தின் பர்பத்திப்பூர் வரை 125 கிலோ மீட்டர் தூரத்திற்கு டீசல் கொண்டு செல்ல குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 512 கிலோ மீட்டர் தூர ரயில் பாதை மூலம் வங்கதேசத்திற்கு டீசல் சப்ளை செய்யப்படும் நிலையில், தற்போது பைப் லைன் … Read more

இந்தியா – இலங்கையுடனான ரத்த உறவுகள் ஆழமானவை: வெளியுறவு அமைச்சர் பேச்சு

புதுடெல்லி: ெடல்லியில் நடைபெற்ற இலங்கை கட்டிடக் கலைஞர் ‘ஜெஃப்ரி பாவா’ கண்காட்சியைத் தொடங்கி வைத்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசுகையில், ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் கடனில் தத்தளிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவியை செய்து வருகிறது. ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் அறங்காவலர் சஞ்சய் குல்துங்காவும், நானும் இந்தியா மற்றும் இலங்கையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, ரத்தம் தண்ணீரை விட அடர்த்தியானது; இந்தியா – இலங்கையுடனான ரத்த உறவுகள் ஆழமானவை என்பதை அவருக்கு நினைவூட்டினேன். … Read more

விரைவில் லாக்டவுன்.!.. கொரோனா 3ம் அலை தொடங்கியதா.? – மத்திய அரசு சீரியஸ் ரிப்போர்ட்.!

கடந்த 24 மணி நேரத்தில் 800க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்புகள் கடந்த நான்கு மாதங்களில் அதிகபட்சமாக பதிவாகியுள்ளன. 841 புதிய நோய்த்தொற்றுகளுடன், இப்போது 5,389 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு மரணம் பதிவாகியுள்ளது, கேரளாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான … Read more

காங். தன்னை எதிர்க்கட்சிகளின் ‘பிக் பாஸ்’ என்று கருதக் கூடாது: திரிணாமுல் கருத்து; மூன்றாவது அணிக்கான வியூகங்கள் தொடங்கியது

டெல்லி: கொல்கத்தாவில் மம்தாவை அகிலேஷ் யாதவ் திடீரென சந்தித்த நிலையில், காங்கிரஸ் தன்னை எதிர்கட்சிகளின் பிக் பாஸ் என்று கருதக் கூடாது என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது. அதனால் மூன்றாவது அணிக்கான வியூகங்கள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. லண்டனில் ராகுல்காந்தி பேசிய விவகாரம் கடந்த 5 நாட்களாக நாடாளுமன்றத்தை ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் முடக்கிய நிலையில், எதிர்கட்களின் வரிசையில் உள்ள சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், சிரோன்மணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள், ‘நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதியுங்கள்’ என்று … Read more

முதல்வர் பினராயிக்கு எதிராக அவதூறு: சொப்னா மீது போலீஸ் வழக்கு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய முகநூலில் சில பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். அதில், கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த விஜேஷ் பிள்ளை என்பவர் என்னை பெங்களூருவில் வைத்து சந்தித்தார். அப்போது, கேரள மாநில சிபிஎம் செயலாளர் கோவிந்தன் கூறியதன்படி தான் வந்திருப்பதாகவும், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான ஆதாரங்களை ஒப்படைத்தால் ₹30 கோடி பணம் தருவதாகவும், இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மிரட்டினார் … Read more

ஓடும் ரயிலில் மது கொடுத்து மயக்கி பல்கலை மாணவி பலாத்காரம்: ராணுவ வீரர் அதிரடி கைது

திருவனந்தபுரம்: டெல்லி-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பல்கலைக்கழக மாணவியை மது கொடுத்து மயக்கி பலாத்காரம் செய்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடப்ரா பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ்குமார் (28). இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் விடுமுறையில் இவர் ஊருக்கு புறப்பட்டார். டெல்லி-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர் பயணம் செய்தார். இதே ரயிலில் கர்நாடக மாநிலம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் … Read more

சர்வதேச சிறுதானிய ஆண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..!

உணவு கலாச்சாரத்தில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களின் பங்களிப்பை அதிகப்படுத்த இந்திய விஞ்ஞானிகளும், பண்ணை நிபுணர்களும் விரைந்து செயல்பட வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டினை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற உணவுதானிய கண்காட்சியை துவக்கி வைத்த மோடி, சிறப்பு தபால் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் முன்மொழிவினைத் தொடர்ந்து, சிறுதானிய ஆண்டினை ஐநா அறிவித்துள்ளது பெருமைக்குரியது என்றும், இந்தியாவில் ஆண்டுக்கு 170 லட்சம் டன் சிறுதானியங்கள் … Read more

மனைவியிடம் ஏற்பட்ட சண்டையில் போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து ‘அட்ராசிட்டி’: டெல்லியில் வாலிபர் கைது

புதுடெல்லி: மனைவியிடம் ஏற்பட்ட சண்டையில் போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு அட்ராசிட்டி செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைநகர் டெல்லியின் ஷாதாரா பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், பாதுகாப்பு போலீஸ்காரர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு, ஜீப்பின் அருகே நின்றிருந்த மற்ற போலீசார் மற்றும் மக்கள் கூட்டத்தை நோக்கி சுடத் தொடங்கினார். பீதியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். போலீசாரும் தப்பி ஓடினர். … Read more

உத்திரப்பிரதேச ரேஷன் கடைகளில் நவீன தானிய ஏடிஎம்கள் அறிமுகம்.. கைரேகையை பதிவு செய்து, அரிசி, கோதுமை பெற்றுக்கொள்ளலாம்..!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்தால் தானியங்களை பெறும் வகையில் தானிய ஏடிஎம்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 24 கோடிக்கும் மேற்பட்டோர் வசிக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே வாரணாசி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் “அனஜ் ஏடிஎம்” என்ற பெயரில் இவ்வகை தானிய ஏடிஎம்கள் உள்ளன. அனஜ் ஏடிஎம்மில் 2 கொள்கலன்களில் அரிசி மற்றும் கோதுமை ஆகியவை நிரப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரு நிமிடத்தில் 7 கிலோ தானியத்தை இந்த இயந்திரங்கள் வழங்கும். ரேஷன் கடைகளில் எடை, … Read more