செகந்திராபாத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம்

செகந்திராபாத் நகரில் 40 ஆண்டுகள் பழமையான ஸ்னப்ன லோக் வணிக வளாகம் உள்ளது. நகரின் மையப்பகுதியில் இந்த வணிக வளாகம் அமைந்துள்ளதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். இந்நிலையில், நேற்று முன் தினம் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென இந்த வணிக வளாகத்தின் 8- வது மாடியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இது மளமளவென 7, 6, 5 ஆகிய மாடிகளுக்குப் பரவியது. பலர் மாடிப்படிகள்வழியாக இறங்கி உயிர்தப்பினர். 8 -வது … Read more

தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளிப்பூங்கா: பிரதமர் மோடி டிவிட்

புதுடெல்லி: தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட 7 மாநிலங்களில் மித்ரா மெகா ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களிலும் மித்ரா மெகா ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கப்படும். மித்ரா மெகா ஜவுளி பூங்காக்கள், ஜவுளி துறைக்கு அதிநவீன உள்கட்டமைப்பை வழங்கும். கோடிக்கணக்கான  முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கும். மேக் இன் … Read more

திடீரென ஏற்படும் மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா ?

இந்தியாவில் சமீப காலங்களில் ஏற்படும் திடீர் மாரடைப்பு வேகமாக அதிகரித்துள்ளது. முன்பு முதியவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், இப்போது இளைஞர்கள் மத்தியிலும் மாரடைப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. நல்ல உடல்நிலையில் இருக்கும் இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்பட்டு, உயிரை இழக்கிறார்கள். இதற்கிடையே மாரடைப்பு அதிகரிக்க கொரோனா தடுப்பூசியே காரணம் என்பது போன்ற தகவல்கள் பரவின. இதற்கிடையே இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 28.1 சதவீதம் பேர் மாரடைப்பால் மரணமடைவதாக ராஜ்யசபாவில் சுகாதாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்தது. அதாவது, ஐ.சி.எம்.ஆர் … Read more

காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும் – குஜராத் பேரவையில் எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

அகமதாபாத்: காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று குஜராத் சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர். குஜராத் சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது ஆளும் பாஜக எம்எல்ஏ பதேசிங் சவுகான் பேசியதாவது: மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காதல் திருமணங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பெரும்பாலான காதல் திருமணங்கள் வெளி மாவட்டங்களில் நடைபெறுகின்றன. இந்த காதல் திருமணங்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காதல் திருமணம் செய்த பெண்கள், அவர்களது … Read more

”2024-ல் முழுப் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக முழுப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். இந்தியா டுடே நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து உள்ளதாகவும், அடுத்த பிரதமர் யார் என்பதை நாட்டு மக்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியில் இருந்து மோடியை வேறுபடுத்துவது குறித்து பேசிய அமித் ஷா, கனவு … Read more

இசட் பிளஸ் பாதுகாப்புடன் வலம் வந்த பிரதமர் அலுவலக உயரதிகாரியாக நடித்தவர் கைது

ஸ்ரீநகர்: பிரதமர் அலுவலக உயரதிகாரி என்று கூறி ஸ்ரீநகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத்தை சேர்ந்த கிரண் பாய் படேலை போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த கிரண் பாய் படேல், பிரதமரின் அலுவலகத்தில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறி, காஷ்மீரில் குல்மார்க் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுள்ளார். அவரை அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து, குண்டு துளைக்காத காருடன் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது காஷ்மீர் … Read more

பிரதமர் அலுவலக அதிகாரி பெயரில் காஷ்மீரில் மோசடி செய்தவர் கைது – கூட்டாளிகள் 3 பேர் தலைமறைவு

ஸ்ரீநகர்: பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி மோசடி செய்த நபரை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்துள்ளனர். அவருடன் வந்த 3 பேர் தலைமறைவாகியுள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கிரண்பாய் படேல். இவர் பிரதமரின் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராக (திட்டமிடுதல் மற்றும்பிரச்சாரப்பிரிவு) பணியாற்றி வருவதாகக் கூறி காஷ்மீருக்கு இந்த ஆண்டு 2 முறை வந்துள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெர்ஜினியாவில் உள்ள காமன்வெல்த் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி. படித்துள்ளதாகவும், திருச்சி ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்தில் எம்பிஏ படித்துள்ளதாகவும், … Read more

200 பல்கலை.களில் இளங்கலை படிப்புகளுக்கான கியூட் தேர்வு: யுஜிசி தகவல்

புதுடெல்லி: இளங்கலை படிப்புகளுக்கான பல்கலை பொது நுழைவு தேர்வை 200க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் தெரிவு செய்திருப்பதாக யுஜிசி அதிகாரிகள் தெரிவித்தனர். பல்கலைக் கழகங்களுக்கான பொதுநுழைவு தேர்வை (கியூட்) தேசிய முகமை அமைப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில், 44 ஒன்றிய பல்கலைக்கழகங்கள், 33 மாநில பல்கலைக் கழகங்கள் உட்பட 206 பல்கலைக்கழகங்கள் கியூட் தேர்வை தேர்வு செய்துள்ளன. கடந்தாண்டு 90 ஆக மட்டுமே இருந்தது என யுஜிசி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல பல்கலைக்கழகங்கள் சேர்க்கைக்கான கியூட் … Read more

மருத்து உலகை மிரள வைத்த இந்திய மருத்துவர்கள்!! வயிற்றுக்குள் இருந்த 7 மாத சிசுவுக்கு இதய ஆபரேஷன்..!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதுள்ள ஒரு பெண் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே 2 முறை கருச்சிதைவு, ஒரு முறை பிறந்த குழந்தை இறப்பு என துயரத்தில் துடித்த பெண், இம்முறை குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பினார். அதனால் இந்த முறை குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண்ணின் வயிற்றுக்குள் குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்த போது, குழந்தையின் இதயத்தில் கோளாறு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது குழந்தையின் இதய வால்வு ஒன்று சுருங்கி … Read more

உயர் நீதிமன்றங்களில் பெண் தலைமை நீதிபதி இல்லை – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நாட்டின் எந்த உயர் நீதிமன்றத்திலும் பெண் தலைமை நீதிபதி இல்லை என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. ராகேஷ் சின்கா எழுப்பிய கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரஜிஜு நேற்றுபதில் அளித்தார். அப்போது, அவர் கூறும்போது, “தற்போதைய நிலவரப்படி உயர் நீதிமன்றங்களில் 775 நீதிபதிகள் பணிபுரிகின்றனர், அவர்களில் 106 பேர் பெண்கள். நாட்டின் எந்த உயர் நீதிமன்றத்திலும் பெண் தலைமை நீதிபதி இல்லை. நாட்டில் உள்ள 15 லட்சம் வழக்கறிஞர்களில், … Read more