எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அமளியால் நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அமளியால் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 4-வது நாளாக நேற்றும் முடங்கின. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல் காந்தி அவையில் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஆளும் பாஜகவும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த 13, 14, 15-ம் … Read more

மகாராஷ்டிரா துணைமுதல்வரின் மனைவிக்கு லஞ்சம் தர முயற்சி

மும்பை: ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தனது தந்தையை ஒரு வழக்கிலிருந்து காப்பாற்ற தனக்கு லஞ்சம் தர முயன்றதாக மகாராஷ்டிரா துணைமுதல்வர் தேவேந்திர பட்நவிசின் மனைவி அம்ருதா பட்நவிஸ் மலபார் ஹில் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மலபார் ஹில் போலீசார் கூறுகையில் , “அனிஷா என்ற ஆடை வடிவமைப்பாளர் கடந்த பல மாதங்களாக அம்ருதா பட்நவிசுடன் பழக்கம் வைத்திருந்துள்ளார். அதை பயன்படுத்தி ஒரு குற்ற வழக்கிலிருந்து தனது தந்தையை விடுவிக்க அம்ருதாவுக்கு ரூ.1 கோடி லஞ்சம் தர … Read more

குப்பை கிடங்கில் தீ விபத்து: கொச்சியில் அமில மழை?

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி நகரத்தை ஒட்டி பிரம்மபுரத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது. நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்குதான் கொட்டப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குப்பைக் குடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல நாட்களாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. இறுதியில் 13 நாட்களுக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதற்கிடையே தீ விபத்து காரணமாக பல நாட்களாக கொச்சியில் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு … Read more

இவி சார்ஜிங் நிலையங்களும் இணையதாக்குதல் அச்சம்

மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “பிற தொழில்நுட்ப சாதனங்கள், பயன்பாடுகள் போலவே, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களும் இணையதள தாக்குதல்களால் பாதிக்கப்படுகின்றன. இணையதள தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து அரசு விழிப்புடன் இருக்கிறது. இந்த தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது ” என்று தெரிவித்துள்ளார்.

விக்கோ நிறுவன விளம்பர தூதராக கங்குலி நியமனம்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விக்கோ நிறுவனத்தின் புதிய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்திய அணியின் கிரிக்கெட் வீரராகவும் பின்னர் கேப்டனாகவும், இறுதியில் பிசிசிஐ.யின் தலைவராகவும் இருந்த சவுரவ் கங்குலி விக்கோ ஷேவிங் கிரீமின் விளம்பர தூதராகி உள்ளார். சவுரவ் கங்குலியை விளம்பர தூதராக நியமித்திருப்பதன் மூலம், விக்கோ நிறுவனம் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்தவும், புதிய தளங்களுக்கு தனது தயாரிப்பை எடுத்து செல்லவும் திட்டமிட்டுள்ளது. கங்குலியை வைத்து சமீபத்தில் எடுத்த … Read more

இணைய வாக்குப்பதிவு முறையில் வெளிநாடுவாழ் இந்தியர்களும் வாக்களிக்க ஆலோசனை: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்களும் இணைய முறையில் ஓட்டுப்போட அனுமதி அளிக்கும் முறை தொடர்பாக ஆலோசனை நடப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது.மாநிலங்களவையில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி வெளிநாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 1.15 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இணைய  முறையில் அனுப்பப்படும் அஞ்சல் வாக்குச் சீட்டு முறையை எளிதாக்குவதற்காக, தேர்தல் நடத்தை விதிகள், 1961-ல் … Read more

ராகுல்காந்திக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

புதுடெல்லி: ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்’ என்று கூறிய ராகுல் காந்திக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்” என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். சமூக ஊடக பதிவுகள் அடிப்படையில் சில கேள்விகளை தயாரித்து ராகுல்காந்திக்கு போலீசார் அனுப்பிய நோட்டீசில்,’  பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை அணுகிய பெண்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு … Read more

பாலியல் வன்கொடுமை குறித்து கருத்து – ராகுல் காந்திக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

டெல்லி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்ரீநகரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின் போது, “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்” என ராகுல் காந்தி தெரிவித்தார் என்றும், “பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை அணுகிய பெண்கள் பற்றிய … Read more

அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 விமானிகள் பலி

இடாநகர்: அருணாச்சலப்பிரதேசத்தில் 2 விமானிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். அருணாசலப்பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் லெப்டினன்ட் மற்றும் மேஜர் ஆகியோருடன் சங்கே கிராமத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு புறப்பட்டு அசாமின் சோனிப்பூர் மாவட்டத்தில் மிசாமாரி நோக்கி சென்றது. காலை 9.15மணிக்கு விமானிகள் உடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு கமேங் மாவட்டத்தில் உள்ள மண்டாலா அருகே போம்டிலாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதை … Read more

முதலிரவில் எதுவும் நடக்கல… வார்த்தையை விட்ட 2k கிட் மணப்பெண் – கொடூரமாக கொன்ற மாப்பிள்ளை!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். பி.டெக் பட்டதாரியான சரவணன் ஹைதராபாத்தில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தெலுங்கானா மாநிலம் வனபதியை சேர்ந்த 20 வயது பெண்ணான ருக்மணிக்கும், இவருக்கும் கடந்த மாதம் 1ஆம் தேதி திருமணம் நடந்தது.  உறவினர்கள் கிண்டல் திருமணம் முடிந்ததும், அன்று இரவே மணமகள் ருக்மணியின் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் சரவணன் மறுத்ததால் முதலிரவு நடக்கவில்லை. சில நாட்களுக்கு பிறகு சரவணன் முதலிரவுக்கு மறுத்ததை ருக்மணி … Read more