3 மாதத்தில் 5வது சோகம் நீட் தேர்வு மாணவி தற்கொலை

கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நீட் தேர்வு மையத்தில் 18 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஏராளமான நீட் தேர்வு மையங்கள் உள்ளன. மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நாடு முழுவதும் இருந்து சென்று அங்கு தங்கி படித்து வருகிறார்கள். பீகார் மாநிலம் மேற்கு சாம்பரான் மாவட்டத்தில் இருந்து 18 வயது மாணவி செம்புல் பர்வீன் என்பவர் அங்கு படித்து வந்தார். அவர் நேற்று தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை … Read more

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் : மார்ச் 20-ம் தேதி தொடங்க திட்டம்

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை வாபஸ் பெறக் கோரி கடந்த 2020, ஆக.9 முதல் 2021 டிச.11ம் தேதி வரை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். டெல்லியின் எல்லைகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அந்த மசோதாக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. அப்போது, தங்களது பிற கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் எச்சரித்திருந்தனர். இந்தச்சூழலில், நாடு முழுவதிலும் உள்ள விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான பாரதிய கிஸான் மோர்ச்சா … Read more

மக்களே உஷார்..!! இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!!

இந்தியாவில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் 58 வயது பெண் ஒருவர் ஹெச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஜனவரி முதல் பருவகால காய்ச்சல் பரவல் நாட்டில் அதிகரித்துள்ளது. மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி ஹெச்3என்2 தீநுண்மி உள்பட அனைத்துவகை பருவகால … Read more

தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுகளின்படி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுபான்மையினர், பாதுகாப்பு படை வீரர்களை சுட்டுக் கொல்கின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரவாத செயல்களுக்கான பல்வேறு சதி திட்டங்களையும் இவர்கள் தீட்டி வந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. அதன்பின் … Read more

ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டி இருப்பதால், அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டாம் – மம்தா பானர்ஜி

ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டி இருப்பதால், அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டாம் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் – ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பான வழக்கில் இதுவரை 4,800 க்கும் மேற்பட்ட தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போது ஆசிரியர் பணி நியமன செயல்பாட்டில் “தவறுகள்” நடந்திருந்தால், திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறினார். … Read more

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா வலியுறுத்தி டெல்லியில் வட்ட மேஜை மாநாடு

ஐதராபாத்: தெலங்கானா முதல்வரின் மகளும், பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்எல்சியுமான கவிதா கடந்த 10ம் தேதி பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை வலியுறுத்தி டெல்லியில் உண்ணாவிரதப் போாராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து இன்று அவர் டெல்லியில் வட்ட மேஜை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். தலைநகர் டெல்லியில் உள்ள ஓட்டலில் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இட ஒதுக்கீட்டை … Read more

உத்தராகண்டில் தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க தனி ஆளாக மலையை குடைந்து சாலை அமைத்த கூலி தொழிலாளி

அல்மோரா: உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டம் க்வார் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் கோஸ்வாமி, தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க மலையைக் குடைந்து சாலை அமைத்துள்ளார். 500 மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையை சுத்தியல் மற்றும் உளியின் உதவியுடன் 9 மாதங்களில் உருவாக்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் அமைத்த சாலை பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. எனினும் இன்னும் அகலப்படுத்த வேண்டி உள்ளது. இப்போது, இந்த சாலையில் 4 சக்கர வாகனங்கள் பயணிக்க முடியும். … Read more

காற்று மாசு பாதிப்பில் இந்தியா 8வது இடம்..!

உலகின் மிகவும் மாசடைந்த 50 நகரங்களில், 39 நகரங்கள் இந்தியாவில் இருப்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும், ஸுவி ட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.க்யூ.ஏர் என்ற நிறுவனம், உலகின் மிகவும் காற்று மாசுபட்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. 131 நாடுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில், கடந்த ஆண்டு இந்தியா 5வது … Read more

சைபர் கிரைம்களைத் தடுக்க Truecaller செயலி நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம்

டெல்லி : சைபர் கிரைம்களைத் தடுக்க Truecaller செயலி நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. செல்போனில் மோசடி அழைப்புகள் வந்ததுமே எச்சரிக்கை அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.

ரயில் நிலையத்தில் உள்ள டிரம்மில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சர்.எம்.விஸ்வேஸ்வரயா டெர்மினல் (எஸ்விஎம்டி) ரயில் நிலையத்தில் தானியங்கி கதவுக்கு அருகில் நேற்று இரவு துர்நாற்றம் வீசியுள்ளது. இதைக்கண்ட ஆர்பிஎஃப் பணியாளர்கள், பையப்பனஹள்ளி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து டிரம்மைப் பார்த்த போது இளம்பெண்ணின் சடலம் இருந்தது. காவல்துறை நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத 3 பேர் அந்த பிளாஸ்டிக் டிரம்மை ஆட்டோ ரிக்‌ஷாவில் கொண்டு வந்து ரயில் நிலைய நுழைவாயில் அருகே போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள் எனக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் … Read more