நாடு முழுவதும் உள்ள முன்னணி மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தல்..!

நாடு முழுவதும் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.  62 முன்னணி தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகளை மன்சுக் மாண்டவியா அண்மையில் சந்தித்து பேசினார்.  இந்திய மாணவர்கள் உள்நாட்டிலேயே மருத்துவக் கல்வியைத் தொடரும் வகையில், மருத்துவப் படிப்புகளை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். Source link

விமான டிக்கெட்டை முன்பதிவு செய்த பின்பு, பயணத்தை ரத்து செய்தால் வரித்தொகையை முழுமையாக திருப்பி தர ஒன்றிய அரசு உத்தரவு!!

டெல்லி : விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வசூலிக்கப்படும் வரிகள் மற்றும் இதர சேவை கட்டணங்கள் அனைத்தும் பயணத்தை ரத்து செய்யும் பயணிகளுக்கு முழுமையாக திருப்பி தர ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. விமான டிக்கேட் முன்பதிவு செய்யும் போது, வரிகள், பயனாளர் வசதி கட்டணம், விமான நிலைய வளர்ச்சி கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களையும் சேர்த்தே வசூலிக்கிறது. ஆனால் பயணத்தை ரத்து செய்யும் போது இந்த தொகையை விமான நிறுவனங்கள் திருப்பி அளிப்பதில்லை என்பது குற்றச் சாட்டாகும். … Read more

தன்பாலின திருமணம் தொடர்பான வழக்குகள் 5 நீதிபதி கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

புதுடெல்லி: தன்பாலின திருமணம் தொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 2018-ம் ஆண்டில் தன்பாலின உறவு குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. எனினும், தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் தற்போது வரை சட்டமாகவில்லை. இந்நிலையில், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உத்தரவிட கோரி தன்பாலின ஜோடி ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட … Read more

பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் மற்றும் ஊடுருவல்களால் ஏற்படும் பாதிப்புகளை அனுமதிக்க முடியாது – இந்தியா

பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் மற்றும் ஊடுருவல்களால் ஏற்படும் பாதிப்புகளை அனுமதிக்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறையின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் சீன எல்லையான கிழக்கு லடாக்கில் இருநாடுகள் இடையிலான பிரச்னைகள் முடிவுக்கு வரவில்லை என்றாலும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணுவதையே இந்தியா விரும்புவதாகவும், எல்லையில் ஊடுருவல், மற்றும் போர்நிறுத்த மீறல்களை அனுமதிக்க முடியாது என்றும் … Read more

ஐ.பி.எஸ். அதிகாரியை கரம் பிடிக்கிறார் பஞ்சாப் அமைச்சர்

சண்டிகர்: பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ், ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவை இம்மாத இறுதியில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.பஞ்சாபில் அனந்த்பூர் சாகிப்பில உள்ள கம்பீர்புர் கிராமத்தை சேர்ந்த பெய்ன்ஸ் வழக்கறிஞராக இருந்தார். இவர் கடந்த 2017 தேர்தலில் சாஹ்னேவால் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். முன்னதாக அவர் ஆம் ஆத்மியின் இளைஞர் அணிக்கு தலைமை தாங்கினார். ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவ் அரியானாவில் உள்ள குருகிராம் பகுதியை சேர்ந்தவர். 2019ம் … Read more

10ம் வகுப்பு கல்வித் தகுதி போதும்.. ரைபிள் படைப் பிரிவில் வேலைவாய்ப்பு!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் அசாம் ரைபிள் படைப் பிரிவில் செவிலிய உதவியாளர், ஆய்வக உதவியாளர், மருந்தாளுநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 17-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பதவி கல்வித்தகுதி Trade – Bridge and Road 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில் என்ஜினியரிங் படிப்பில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். Trade – Religious … Read more

பள்ளிகளில் தமிழை கட்டாய பாடம் ஆக்க மறுப்பு: மக்களவையில் மத்திய அரசு பதில்..!!

தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம் ஆக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 15 பள்ளிகளில் மட்டும் தமிழ் பாடம் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 63,809 மாணவர்களில் 6,589 மாணவர்கள் மட்டுமே தமிழ் படிக்கின்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் உருவாக்கும் பாடத்திட்டத்தை பின்பற்றுகிறது. நாடு … Read more

அதானி குழுமம் தொடர்பாக மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பதில்

புதுடெல்லி: பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்காவில் உள்ள பிரபல சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதன்பின், அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கும் மேலாக சரிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும், கூட்டுக்குழு விசாரணை நடத்தவும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இதுதொடர்பாக மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதித் துறை இணை அமைச்சர் எழுத்து மூலம் அளித்த பதிலில் … Read more

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையில் உள்ள பாக்ஜலசந்தி கடல் பகுதியை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்திக் கடந்த 7 நீச்சல் வீரர்- வீராங்கனைகள்

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரையில் உள்ள பாக்ஜலசந்தி கடல் பகுதியை 10 மணி நேரம் 45 நிமிடங்களில்7 பேர் நீந்திக் கடந்துள்ளனர். பெங்களூருவை சேர்ந்த அவர்கள் இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலும் உள்ள சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்தியவெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரியிருந்தனர். அவர்களுக்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து தலைமன்னாரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு நீந்த துவங்கிய 7 பேரும் மாலை 3 -45 … Read more

ஆஸ்கர் வென்ற இந்தியர்களுக்கு மணற்சிற்பம் வடிவமைத்து சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து!!

புவனேஸ்வர்: ஆஸ்கர் வென்ற இந்தியர்களுக்கு மணற்சிற்பம் வடிவமைத்து சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர் உலகில் அரங்கேறும் அனைத்து நிகழ்வுகள் தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். இதற்காக அவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. அதில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கும் ‘தி … Read more