ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வியூகம் எதிர்கட்சி தலைவர்களுடன் மம்தா ஆலோசனை: நாளை டெல்லி பயணம்!

கொல்கத்தா: ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மம்தா பானர்ஜி நாளை டெல்லி செல்கிறார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக, எதிர்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, எதிர்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், எதிர்கட்சி தலைவர்களின் … Read more

தன்பாலின திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்

புதுடெல்லி: தன்பாலின திருமணத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது இயற்றப்பட்ட 377-வது சட்டப் பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாகக் கருதப்பட்டது. இதைஎதிர்த்து உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியாக ‘‘தன்பாலின உறவு குற்றமல்ல’’ என்று கடந்த 2018-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக் களும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கடந்த ஜனவரி 6-ம் தேதி உத்தரவிடப்பட்டது. … Read more

அதானி விவகாரம் : நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வலியுறுத்தி நாட்டின் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வலியுறுத்தி, நாட்டின் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதானி குழுமத்திற்கு எதிராக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம், கணக்கு மோசடி மற்றும் பங்கு மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் இன்று, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின. சண்டிகர், மத்தியபிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர். … Read more

தந்தையால் பாலியல் தொல்லை விவகாரம் மகளிர் ஆணைய தலைவியை ‘நார்கோ டெஸ்ட்’ செய்ய வேண்டும்: மாஜி கணவர் வெளியிட்ட பகீர் தகவல்

புதுடெல்லி: தனது தந்தையால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியை நார்கோ டெஸ்டுக்கு உட்படுத்த வேண்டும் என்று அவரது முன்னாள் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் கடந்த சில தினங்களுக்கு முன் ெவளியிட்ட பதிவில், ‘நான் சிறுமியாக இருந்த போது எனது தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் என்னை அடித்தார். அதனால் நான் கட்டிலுக்கு அடியில் சென்று படுத்துக் கொண்டேன்’ என்று தனக்கு … Read more

கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற கொடூர தாய்!!

கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் ஒருவர் பெற்ற குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சலிம்பாய் வாகேர் – ஹூசேனாவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ரெஹான், ஆர்யன் என்ற இரண்டு ஆண் குழந்தைகள். இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்படவே ஹூசேனா கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், ஹூசேனாவுக்கு ஜாகிர் பக்கீர் … Read more

தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கிட்டுமா? – 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வசமானது முடிவு

புதுடெல்லி: தன்பாலின திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கோரி தொடரப்பட்டுள்ள வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இயற்றப்பட்ட 377-வது சட்டப் பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாகக் கருதப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியாக ‘‘தன்பாலின உறவு குற்றமல்ல’’ என்று கடந்த 2018-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தாக்கல் … Read more

ஆபாசமான கருத்துகளை வெளியிட்ட விவகாரம் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: இருதரப்பு மீது வழக்குபதிந்து போலீஸ் விசாரணை

சந்திரபூர்: மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டம் சிமூர் தொகுதி பாஜக எம்எல்ஏ கீர்த்திகுமார் மீது போலீசில் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், ‘எம்எல்ஏ கீர்த்திகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20 பேர் எனது வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த எனது கணவரை இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடக்கம்: 35 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம்தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கி, ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பட்ஜெட் குறித்து விவாதம் நடத்தப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். இதனிடையே, 35 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அதானி குழுமம்மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை, பணவீக்கம் உயர்வு, சமையல் காஸ் விலை உயர்வு, வேலையின்மை விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட … Read more

விமான பயணத்தின்போது பயணி மரணம்.. சடலத்துடன் மீண்டும் டெல்லிக்கு திரும்பிய விமானம்

டெல்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹா சென்ற இண்டிகோ விமானம் பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. இண்டிகோ 6E-1736 விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது பயணி ஒருவருக்கு மருத்துவ அவசரநிலை தேவைப்பட்டதன் காரணமாக கராச்சிக்கு திருப்பிவிடப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான நிலையம் சென்றவுடன் சம்பந்தப்பட்ட பயணி உயிரிழந்துவிட்டதாக விமான நிலைய மருத்துவக்குழுவினரால் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள விமான நிறுவனம், உயிரிழந்த செய்தியால் வருத்தமடைவதாகவும், இறந்தவரின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. Source link

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: ஏப். 18ல் விசாரணை..!

டெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரே பாலின உறவு சட்டத்துக்கு எதிரானது என்ற 377வது சட்டப்பிரிவை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டில் ஓரின சேர்க்கை குற்றமில்லை என தீர்ப்பளித்தது. அத்துடன் 377வது சட்டப்பிரிவை நீக்கி உத்தரவிட்டது. இதன் மூலம், நாடு முழுவதும் ஒரே பாலின உறவு சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஒரே பாலினத்தை … Read more