பெங்களூரு – மைசூரு விரைவு சாலையை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்: 118 கி.மீ. தூரத்தை 75 நிமிடங்களில் அடையலாம்

பெங்களூரு: பெங்களூரு – மைசூரு இடையேயான‌ 118 கி.மீ. தூர 10 வழி நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கர்நாடகா மாநிலத் தலைநகரான பெங்களூருவில் இருந்து 145 கி.மீ. தொலைவில் உள்ள மைசூருவுக்கு சாலை மார்க்கமாக சென்றால் சுமார் 3 மணி நேரம் ஆகிறது. வார இறுதி நாட்கள், அலுவலக நேரங்களில் போக்குவரத்து நேரம் மேலும் அதிகரிப்பதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் பயண நேரத்தை குறைக்க, புதிய 10 வழி நெடுஞ்சாலை … Read more

ஹோலி கொண்டாட்டத்தில் அத்துமீறல் ஜப்பான் பெண் சுற்றுலா பயணி இந்தியாவை விட்டு வெளியேறினார்: டெல்லியில் 3 பேர் அதிரடி கைது

புதுடெல்லி: டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது ஜப்பான் பெண் சுற்றுலா பயணியிடம் வண்ணப்பொடிகளை பூசி அத்துமீறலில் ஈடுபட்டதோடு அவரது தலையில் முட்டை உடைத்து தொல்லை தந்த சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 8ம் தேதி ஹோலி கொண்டாடப்பட்டது. சாலைகளில் சென்றவர்கள் மீது வண்ணப்பொடிகளை தூவி ஏராளமானவர்கள் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பஹர்கஞ்ச் பகுதியில் இளைஞர்கள் சிலர் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஜப்பான் பெண் … Read more

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் விவகாரம் – தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் தீவிர விசாரணை

புதுடெல்லி: டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவிடம் டெல்லியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். டெல்லி மாநில மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மது விற்பனையுடன் சம்பந்தப்பட்ட குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பில், அக்கட்சியின் விஜய் நாயர் … Read more

ரயில்வே வேலை முறைகேடு வழக்கில் சம்மன் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாத தேஜஸ்வி: அமலாக்கத்துறையின் 14 மணி நேர சோதனையால் கர்ப்பிணி மனைவிக்கு உடல்நலக்குறைவு

புதுடெல்லி: ரயில்வேயில் வேலை பெற்று தர குறைந்த விலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆஜராகவில்லை. பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 வரை ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்த போது, ரயில்வே துறையில் வேலை வாங்கித் தர குறைந்த விலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக லாலு, அவரது மனைவி ரப்ரி தேவி … Read more

தேர்தலுக்கு பின் வன்முறை திரிபுராவில் எம்பிக்கள் குழு மீது தாக்குதல்: 3 பேர் கைது

அகர்தலா: திரிபுராவில் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை தொடர்பாக ஆய்வு நடத்த சென்ற எம்பிக்கள் குழு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். திரிபுரா மாநிலத்தில் கடந்த 2ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படடது. பாஜ-இடது சாரி கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு பின்பு இங்கு வன்முறை வெடித்தது. குறிப்பாக சேபாஹிஜலா மற்றும் கோவாய் மாவட்டங்களில் வன்முறை சம்வங்கள் நிகழ்ந்தன. வன்முறை குறித்து இடதுசாரி, காங்கிரஸ் கட்சி … Read more

தாயார் நினைவாக மோடியின் இணையதளத்தில் சிறப்பு பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நினைவாக இணைய தளத்தில் சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தாயாரான ஹீராபென் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு டிச. 30ம் தேதி 100 வது வயதில் காலமானார். ஹீராபென் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி ஹீராபென்னுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தன்னுடைய  அதிகாரப்பூர்வ இணையதளமான ‘நரேந்திரமோடி டாட் இன்’ ல் ‘மா’ என்ற சிறப்பு பிரிவை … Read more

நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடி: கடந்த ஆண்டை விட 17% அதிகம்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடி என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய நேரடி வரிகள்  வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மார்ச் 10ம்தேதி வரையிலான 2022-23ம் நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் குறித்த தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன. மார்ச் 10 வரையிலான மொத்த நேரடி வரி வசூல், ரூ. 16.68 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட … Read more

மாநிலங்களவையில் காங்கிரஸ் துணை தலைவர், கொறடா நியமனம்

புதுடெல்லி: மாநிலங்களவை காங்கிரஸ் துணை தலைவராக பிரமோத் திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை காங்கிரஸ் துணை தலைவராக இருந்த ஆனந்த் சர்மா சமீபத்தில் ஓய்வு பெற்றார். மாநிலங்களவை கொறடாவாக இருந்த ராஜிவ் சதாவ் மரணமடைந்தார். இதையடுத்து  மாநிலங்களவை துணை தலைவராக பிரமோத் திவாரி, கொறடாவாக ரஜனி பாட்டீல் ஆகியோரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமித்துள்ளார். புதிய நியமனங்கள் தொடர்பாக மாநிலங்களவை தலைவருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பி உள்ளது. 3 முறையாக எம்பியாக உள்ள பிரமோத் திவாரி … Read more

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக வாங்கிய விவகாரம் லாலு குடும்பம் மீதான ரெய்டில் ரூ.600 கோடி மோசடி கண்டுபிடிப்பு: ரூ.150 கோடி வீட்டை ரூ.4 லட்சத்திற்கு வாங்கினர்; அமலாக்கத்துறை அறிக்கை

புதுடெல்லி: லாலு குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகளில் நடத்திய சோதனையில் ரூ.600 கோடிக்கான நில மோசடி ஆவணங்கள் கிடைத்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ரயில்வே வேலை மோசடி வழக்கு குறித்து அமலாக்கத்துறை டெல்லி, பாட்னா, ராஞ்சி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் 24 இடங்களில் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தியது. இதில், லாலு குடும்பத்தினர் வீடுகளில் இருந்து கணக்கில் வராத ரொக்கம் ரூ.1 கோடி … Read more

புதுச்சேரியில் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு… மார்ச் தொடக்கம் முதல் இதுவரை சுமார் 330 பேர் பாதிப்பு!

புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சலால் மார்ச் மாதம் தொடக்கம் முதல் இதுவரை சுமார் 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் 12 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும், இணை நோய் உஎள்ளவர்கள் கவனமாக இருக்கவும் சுகாதாரத்துறை … Read more