Tax Evasion: 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கில் அனில் அம்பானிக்கு பெரும் நிவாரணம்

 Anil Ambani: வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம் சாட்டுள்ள அனில் அம்பானி மீது கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தள்ளிப் போடப்பட்டுளது. அனில் அம்பானிக்கு எதிராக வெளியிடப்பட்ட நோட்டீஸ் மீது மார்ச் 17ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  வரி ஏய்ப்பு வழக்கு ரிலையன்ஸ் அடாக் குழுமத்தின் (Reliance ADAG Group) தலைவரான அனில் அம்பானிக்கு பாம்பே உயர்நீதிமன்றத்தில் இருந்து கிடைத்துள்ள இந்த செய்தி பெரும் … Read more

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்: டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்றே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

டெல்லி: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. லாலு பிரசாத் யாதவ் ஒன்றிய அமைச்சராக இருந்த பொது ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்றே விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 2004-2009 காலகட்டத்தில் மும்பை, ஜபல்பூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் ஹாஜிபூர் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு மண்டலங்களில், பீகாரில் உள்ள பாட்னாவில் வசிப்பவர்கள் சிலர், குரூப்-டி பதவிகளில் பணியமர்த்தப்பட்டதாக எப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டது. … Read more

தேஜஸ்வி யாதவ் டெல்லி வீட்டில் சோதனை – லாலு மகள் வீடு உட்பட 15 இடங்களில் அமலாக்கத் துறை நடத்தியது

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். அப்போது பிஹாரைச் சேர்ந்த சிலர், ரயில்வேயில் வேலை பெற லாலு குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களிடம் தங்கள் நிலங்களை கொடுத்ததாகவும் அல்லது குறைந்த விலைக்குவிற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 15-ம் தேதிக்கு சம்மன்: … Read more

வேகமாக பரவி வரும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் பரவி வரும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் எச்3என்2 இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் கடந்த சில வாரங்களாகவே வேகமாக பரவி வருகிறது. இது கொரோனாவை போல வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், எச்3என்2 இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எச்3என்2  வைரஸ் காய்ச்சலினால் சிறுவர்கள் மற்றும் இணை நோய் உடைய வயதானவர்கள் அதிகம் பாதிப்புக்கு … Read more

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிறார் தெலங்கானா முதல்வர் மகள் கவிதா – டெல்லியில் குவிந்த தொண்டர்கள்

புதுடெல்லி: தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா, டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிறார். டெல்லி மதுபான கொள்கை ஊழலில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே ஊழல் வழக்கில், கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, 9ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த 8ம் தேதி … Read more

டெல்லி புதிய கலால் கொள்கையால் சிசோடியா ரூ.292 கோடி ஊழல்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு மார்ச் 17 வரை விசாரிக்க அனுமதி

புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியா 292 கோடி ஊழல் நிதி திரட்டினார் என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.அவருக்கு மார்ச் 17 வரை அமலாக்கத்துறை காவல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி புதிய கலால் கொள்கையில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி துணை முதல்வராக இருந்த சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. அதை தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி அமலாக்கத்துறையும் கைது செய்தது. இந்த வழக்கில் சிசோடியாவிடம் 10 … Read more

இந்தியா, பிரதமர் மோடி பற்றி பொய்களை பரப்பி வருகிறது நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் – அனுராக் தாக்குர் கண்டனம்

புதுடெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் பற்றி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரை குறும்புத்தனமானது, கற்பனையானது. இந்தியா மற்றும் அதன் ஜனநாயக அமைப்புகள்மற்றும் மதிப்புகள் பற்றி தவறானகருத்தை பரப்பும் ஒரே நோக்கத்துடன் இது வெளியிடப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் மற்றும் இதுபோன்ற சில வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியா பற்றியும், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி பற்றியும் தொடர்ந்து பொய்களை பரப்புகின்றன. இது போன்ற … Read more

பாக். டிரோனை சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப்

புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர்(பிஎஸ்எப்) சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து பிஎஸ்எப் அதிகாரி கூறும்போது ,‘‘பஞ்சாப்பின், குர்தாஸ்பூர் மாவட்டம், மெட்லா  கிராமத்தில் நேற்று மதியம் ஒரு மணிக்கு பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து டிரோன் பறந்து வந்தது. பிஎஸ்எப் வீரர்கள் அதை சுட்டு வீழ்த்தினர். அதில், ஏகே ரைபிள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் இருந்தன. அதே போல், நபி நகர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு டிரோன் மற்றும் … Read more

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி டெல்லியில் தெலங்கானா முதல்வர் மகள் கவிதா உண்ணாவிரதம்

புதுடெல்லி: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் பிஆர்எஸ் கட்சியின் மேல்சபை உறுப்பினருமான கவிதா, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலே நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். டெல்லி ஐந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சிபிஎம், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, அகாலி தள் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கவிதா … Read more

இருவரை காதலித்து குழந்தைகளை பெற்றார் ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் இருவரை காதலித்து குழந்தைகளை பெற்ற இளைஞர், ஒரே மணமேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் சர்லா கிராமத்தை சேர்ந்தவர் முத்தாத்தையா- ராமலட்சுமி தம்பதியின் மகன் சத்திபாபு(36). இவருக்கு தோஸ்லாபள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்வப்னாகுமாரியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஸ்வப்னாவிடம், சத்திபாபு தனது காதலை கூற அவரும் ஏற்றுக் கொண்டார். இருவரும் நெருங்கி பழகியதில், ஸ்வப்னா கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து அவருக்கு பெண் … Read more