நடிகை பவித்ராவை 4வது திருமணம் செய்த நடிகர்

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் நரேஷ் பாபு நான்காவது முறையாக திருமணம் செய்து கொண்டார். தனது நீண்ட நாள் தோழியான நடிகை பவித்ரா லோகேஷை அவர் மணந்தார்.நரேஷ் ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆனவர். அவரது முதல் திருமணம் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீனுவின் மகளுடன் நடந்தது. இந்த தம்பதிக்கு நவீன் விஜய்கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். நரேஷ் பின்னர் பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான தேவுலபள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் பேத்தி ரேகா சுப்ரியாவை மணந்தார். பிறகு அவரை பிரிந்தார். … Read more

இந்து கோயில்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் – ஆஸி. பிரதமரிடம் இந்திய பிரதமர் மோடி கவலை

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக அந்த நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்தார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 4 நாள் பயணமாக கடந்த 8-ம் தேதி இந்தியா வந்தார். முதல் நாளில் குஜராத் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்ட அவர், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஹோலி பண்டிகையிலும் பங்கேற்றார். அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பிரதமர் … Read more

எல்லை பாதுகாப்பு படையில் அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ஓய்வுபெற்ற அக்னி வீரர்களுக்கு துணை ராணுவமான எல்லை பாதுகாப்பு படையில் சேருவதற்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அக்னிவீரர்கள் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அவர்கள் 4 ஆண்டுகள் பணியாற்றலாம். ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் உச்ச வயது வரம்பில் தளர்வுகளுடன் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று … Read more

இந்தியா-வங்க தேசம் இடையே டீசல் பைப்லைன் வரும் 18ல் திறப்பு

தாகா: இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு டீசல் ஏற்றுமதிக்காக 130 கிமீ தொலைவுக்கு ரூ.28,300 கோடியில் பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா-வங்கதேசம் நட்பு பைப்லைன் என பெயரிடப்பட்டுள்ள இந்த பைப்லைன் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருந்து வங்கதேசத்தின் பர்பதிபூரில் உள்ள தினாஜ்பூரின் மேக்னா பெட்ரோலிய கிடங்கு வரை அமைந்துள்ளது. இதனை பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் வரும் 18ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்க இருப்பதாக வங்கதேச அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுக்கு மாடி குடியிருப்பின் 20வது மாடியில் இருந்து விழுந்து ஓயோ ரூம்ஸ் நிறுவனரின் தந்தை பலி

குருகிராம்: இந்தியாவின் மிகப்பெரிய ஓட்டல் புக்கிங் நிறுவனம் ஓயோ ரூம்ஸ். இதன்  நிறுவனர்  ரித்தேஷ் அகர்வாலுக்கும் லக்னோவை சேர்ந்த கீதன்ஷா சூட் என்பவருக்கும் நேற்றுமுன்தினம் திருமணம் நடந்தது.  குருகிராமில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில்  ரித்தேஷின் தந்தை ரமேஷ் வசித்து வந்தார். நேற்று அடுக்குமாடி குடியிருப்பின் 20 வது மாடியில் இருந்து ரமேஷ்  கீழே விழுந்து மரணமடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விசாரணை நடத்தினர்.  மேலும் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. சடலத்தின் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. … Read more

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் போதை பொருள் பறிமுதல் அதிகரிப்பு: ஐநா அறிக்கையில் தகவல்

ஐநா:  இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில்,போதை பொருள்கள் பறிமுதல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக  ஐநா போதை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐநாவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச போதை பொருள் கடத்தல் கட்டுப்பாடு வாரியம்  வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், சட்ட விரோதமாக  போதை மாத்திரைகள் தயாரிப்பதை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா பல்வேறு  ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடத்தல் கும்பல்கள் ஆன்லைன்  மற்றும் கடல் மார்க்கத்தில் இதனை பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் … Read more

இயற்கை பேரழிவின்போது சேதங்களை குறைப்பதில் கவனம்: பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: ‘இயற்கை பேரழிவுகளை கையாள்வதில் எதிர்வினையாற்றுவதை விட, சேதங்களை குறைப்பதற்கான அணுகுமுறையை தேவை’ என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பேரிடர் அபாயங்களை குறைப்பதற்கான தேசிய அமைப்பின் (என்பிடிஆர்ஆர்) 3வது அமர்வு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:இயற்கை பேரழிவுகளை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அவற்றால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கான கட்டமைப்பை நம்மால் உருவாக்க முடியும். எனவே, இயற்கை பேரிடர்களை கையாள்வதில், அசம்பாவிதம் நடந்த பிறகு எதிர்வினையாற்றுவதை விட, முன்கூட்டியே சேதங்களை … Read more

‘புருஷன் உயிரோட தான இருக்காரு.. ஏன் பொட்டு வைக்காம இருக்க…’: பெண்ணை கேள்வி கேட்ட பாஜ எம்பிக்கு கண்டனம்

கோலார்: புருஷன் உசுரோட தான இருக்காரு.. ஏன் பொட்டு வைக்காம இருக்க என்று பெண்ணிடம் கேட்ட கர்நாடகா பாஜ எம்பிக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி எஸ்.முனிசாமி, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்   மகளிர் குழுக்கள் வைத்திருந்த கடைகளை பார்வையிட்டார்.   கடை வைத்திருந்த பெண்ணை அணுகிய எம்பி முனிசாமி, ‘புருஷன் உசுரோட தான இருக்காரு.. ஏன் பொட்டு வைக்காம இருக்க ’ என்று கோபமாக … Read more

கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

புதுடெல்லி:  இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கியூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க  நாளை கடைசி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் … Read more

வடமாநிலத்தவர் சர்ச்சை..பிரசாந்த் கிஷோர் ட்வீட்..சீமானை சீண்டிய முன்னாள் தம்பி.!

வடமாநிலத்தவர் விவகாரத்தில் வாய் சொல் வீரன் சீமான் சொல்வது போல் தமிழ்நாட்டு மக்கள் இல்லை என திமுகவின் ராஜிவ் காந்தி தெரிவித்துள்ளார். இந்தி பேசியதற்காக தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாகவும், எரிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் போலி செய்தி பரவியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் அது பாஜகவினரால் பரபரப்பட்ட போலி செய்தி என்பது விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் சமூக வலைதளங்களில் போலி செய்திகள் நீக்கப்படவில்லை. அதேபோல் இன்னமும் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பாஜக ஆதரவு இந்துத்துவவாதிகள் … Read more