பேரவை தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கியது தேர்தல் கமிஷன் குழு கர்நாடகா வருகை: அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை

பெங்களூரு: கர்நாடகா பேரவை தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கிய நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் குழுவினர் பெங்களூரு வந்துள்ளனர். அவர்கள் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் ெபாம்மை தலைமையிலானா பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், அடுத்த சில வாரங்களில் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக தலைமை ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் … Read more

இம்மாத இறுதியில் இருந்து H3N2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறைய வாய்ப்பு: மத்திய அரசு

புதுடெல்லி: ‘H3N2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இம்மாத இறுதியிலிருந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பொது சுகாதார சவாலை எதிர்கொள்ள கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிட்டுள்ளது’ என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள்: பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பருவகால வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிர கண்காணிப்புப் … Read more

அலியா பட்டை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் மீது சட்ட நடவடிக்கை: நடிகர் ரன்பீர் கபூர் ஆவேசம்

மும்பை: தனது மனைவியை புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர் மீது சட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளேன் என்று நடிகர் ரன்பீர் கபூர் ஆவேசமாக கூறினார். கடந்த சில வாரங்களுக்கு முன் பாலிவுட் நடிகை அலியா பட், அவரது வீட்டின்  பால்கனியில் அமர்ந்திருந்த போது வேறொரு கட்டிடத்தில் இருந்து சிலர் அவரை  புகைப்படம் எடுத்தனர். அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. இதற்கு  அலியா பட் தரப்பில், தனது தனியுரிமை மீறப்படுவதாக கடுமையாக விமர்சனம்  செய்தார். இவரது கருத்துக்கு இந்தி … Read more

புதுச்சேரி முன்னேறி வருவதற்கு முழு பட்ஜெட் நல்ல உதாரணம் – தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் 13 ஆண்டுகள் கழித்து முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பது பெருமையான விஷயம் என்றும், இதற்காக முதலமைச்சர் மற்றும் நிதித்துறையுடன் தான் இணைந்து செயல்பட்டதாகவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி முன்னேறி வருவதற்கு முழு பட்ஜெட் நல்ல உதாரணம் என தெரிவித்தார்.  Source link

ராஜஸ்தான் பேரவை தேர்தல் ஆம்ஆத்மி, ஏஐஎம்ஐஎம் களத்தில் குதித்தன: கெஜ்ரிவால், ஒவைசி வருகை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், அம்மாநில தேர்தல் களத்தில் ஆம்ஆத்மி கட்சியும்,  ஏஐஎம்ஐஎம் கட்சியும் தேர்தலில் களம் காண்கின்றன. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், இந்தாண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. முக்கிய எதிர்கட்சியான பாஜக, ஆளுங்கட்சிக்கு எதிரான தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் போட்டி இருந்த நிலையில், தற்போது மேற்கண்ட இருகட்சிகளுக்கு மாற்றாக டெல்லி … Read more

தீவிரவாத நிதி திரட்டல் – ஹுரியத் தலைவர்களின் வீடுகளில் ரெய்டு

ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் எம்பிபிஎஸ் சீட்டுகள், காஷ்மீர் மாணவர்களிடம் விற்கப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஹுரியத் தலைவர்கள் 3 பேரின் வீடுகளில், அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள எம்பிபிஎஸ் சீட்டுகள் காஷ்மீர் மாணவர்களிடம் விற்பனை செய்வதாகவும், அதன் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அனந்த்நாக் பகுதியில் உள்ள ஹுரியத் தலைவர்கள் குவாசி யாசிர், ஜாபர் பட், முகமது இக்பால் காஜா ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் மாநில போலீஸாருடன் … Read more

இந்தியாவில் H3N2 வைரஸிற்கு முதன்முறையாக கர்நாடகாவில் முதியவர் உயிரிழப்பு

இந்தியாவில் H3N2 வைரஸிற்கு முதன்முறையாக கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த 87 வயது முதியவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 24-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மார்ச் 1-ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இறந்து 2 நாட்களுக்குப் பிறகு வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு H3N2 வைரஸ் இருந்தது தெரியவந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. H3N2 வைரஸிற்கு ஹரியானாவிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். H3N2 வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு … Read more

OYO நிறுவனர் ரிதேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் உயிரிழப்பு

மும்பை: OYO நிறுவனர் ரிதேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் உயிரிழந்தார். குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 20வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில்தான், ரிதேஷ் அகர்வாலுக்கு டெல்லியில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

பஞ்சாப் பொற்கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழிபாடு

அமிர்தசரஸ்: பஞ்சாப் பொற்கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வழிபாடு செய்தார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில் உள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஒருநாள் பயணமாக அமிர்தசரஸ் நகருக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பகவந்த் சிங் மான், மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ், அமிர்தசரஸ் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் ஆஜ்லா மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து … Read more

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : சிசோடியாவை 7 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு ரோஸ் அவின்யூ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு, ஆம் ஆத்மி அரசு மதுபான கொள்கையை அமல்படுத்தியதில், முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிக்கை அளித்து, சிபிஐ விசாரிக்க, டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரைத்திருந்தார். இவ்வழக்கில், துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்து, சிபிஐ விசாரணை நடத்தியது. தற்போது, அமலாக்கத்துறையின் வழக்கிலும் சிசோடியா கைதான … Read more