துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நடுநிலையோடு இருக்க வேண்டும்: காங்கிரஸ்
புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவரான ஜக்தீப் தன்கர், நடுநிலையோடு இருக்க வேண்டும் என்றும், அவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்து உற்சாகமளிப்பவராக இருக்க கூடாது என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தியின் லண்டன் பேச்சினை விமர்சித்திருந்த மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கான பதிலடியாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கமேற்படுத்துகிறார்” … Read more